சேர்ந்தே மீள்வோம்… ஏஆர் ரஹ்மான் & ப்ரசூன் & HDFC BANK கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல இந்தி பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷியுடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு இந்திப் பாடலை உருவாக்கியுள்ளனர்.

“சேர்ந்தே மீள்வோம்…” என்று இந்த பாடல் தொடங்குகிறது.

இந்த பாடலுக்கு இசையமைத்து பாடி இருக்கிறார் ரஹ்மமான்.

இவருடன் ஸ்ருதிஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன், ஜாவே அலி, சாஷா திருபாதி, கதீஜா ரஹ்மான், அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலரும் பாடி உள்ளனர்.

இந்த புது முயற்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:

ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இந்த தேசமும் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம் என ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்தப் பாடலை எச்.டி.எப்.சி வங்கி தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய் வீதம் பிரதமரின் கொரோனா நிதிக்கு சேர எச்.டி.எப்.சி ஏற்பாடு செய்துள்ளது.

HDFC Bank AR Rahman and Prasoon Joshi collaborate for Song of hope

நடிகர்கள் இர்பான் கான் & ரிஷி கபூர் மறைவுக்கு ராதாரவி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு ராதாரவி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்..

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருகிறது.

உயிர்கொல்லி கொரோனா ஒரு புறம் உலகையே முடக்கி வைத்து பலி வாங்கிக்கொண்டிருக்க, இத்தகைய சூழலில் இந்த கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது.

‘மேரா நாம் ஜோக்கர்’ (1970) என்ற தனது தந்தை ராஜ் கபூரின் திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 2000 வரையிலே நாயகனாகவும், அதன்பின் தேர்ந்தெடுத்த சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் வெளியான ‘தி பாடி’ திகில் படத்தில் அவரது நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

நடிகர் இர்பான் கான் ஹிந்தி சினிமாவில் மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்து உலகளாவிய ரசிகர்களை கொண்டவர். தனது 30 வருட திரைவாழ்வில், தேசிய விருது, ஆசிய விருது, மற்றும் இந்திய அரசின் நான்காவது மிகவும் உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் வென்ற பெருமைக்குரியவர்.

இத்தகைய சிறந்த கலைஞர்களின், சிறந்த மனிதர்களின் மறைவு என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்களது குடும்பங்களுக்கு இந்த சங்கடமான நேரத்தில் நான் ஆறுதல் கூறவும் கடமைப்பட்டிருக்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

Radharavi condolence message for Irfan Khan and Rishi Kapoor

ஜகம் சுகமடைந்ததும்… ஜகமே தந்திரம்; தனுஷ் படம் பற்றி கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கி வந்தார் கார்த்திக் சுப்பராஜ்.

தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இன்று உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்ட்டது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஜகம் (உலகம்) சுகமடைந்த பிறகு படம் திரைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

If not for the Bloody Virus.. Today would be #JagameThandhiramFDFS Hoping for the Best.. விரைவில்… ஜகம் சுகமடைந்ததும்… ஜகமே தந்திரம்!! Coming Soon to Cinemas… After the ‘Jagam’ Heals… #JagameThandhiram #JT

Jagame Thandhiram 2 look poster revealed by Karthik Subbaraj

மக்களைக் காக்க மக்களே மருந்து.. ஊரடங்கு நீடிப்பு.. கமல் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மே 3ஆம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் சில தளர்வுகள் உள்ளன. சிவப்பு மண்டலங்களில் தளர்வுகள் இருக்காது.

இந்த நிலையில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவில் இந்த ஊரடங்கு நீடிப்பு குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… அவரது வழக்கமான பாணியில் அழகான இலக்கிய தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். (உங்களுக்கு அதன் அர்த்தம் புரிந்தால் நன்மையே..)

ஊரடங்கும் உயிருக்கு பயந்து – பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர். தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது. நீர், போதாதிதற்குயாமும் வேண்டும். மக்களைக் காக்க மக்களே மருந்து. மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் மக்கள் நீதி மய்யம்
என பதிவிட்டுள்ளார்.

எமக்கு தெரிந்த வரை சிலரிடம் விளக்கம் கேட்டு பதிவிட்டுள்ளோம்..

ஊரடங்கும் உயிருக்குப் பயந்து – உயிருக்குப் பயந்து ஊரானது அடங்கி, வீட்டிலேயே இருக்க வேண்டும். இவ்விடத்தில், ஊர் என்பது ஊரிலுள்ள மக்களைக் குறிக்கிறது. அதாவது, மக்கள் அனைவரும் உயிருக்குப் பயந்து வீட்டிலேயே இருங்கள்.

பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர் – உயிருக்குப் பயந்து மக்கள் வீட்டில் அடங்கலாம். ஆனால், கொரோனா எனும் நோயானது, மக்களுக்கு (மக்களிடம்) அடங்காது.

தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது – பொதுவாக, நெருப்பில் தண்ணீர் ஊற்றினால் அணைந்துவிடும் (அடங்கிவிடும்).

நீர், போதாதிதற்கு யாமும் வேண்டும் – ஆனால், கொரோனா எனும் நெருப்புக்கு தண்ணீர் மட்டும் போதாது. மக்களாகிய நாமும் வேண்டும் (மரணம்)

மக்களைக் காக்க மக்களே மருந்து – மக்கள்தான் மக்களைக் காப்பாற்ற முடியும். அதாவது, வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தால் சமூகப்பரவல் மூலம் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

மனம் மாறு அரசே மதம் மாறவல்ல – மதத்தின் பெயரால் அரசியல் செய்ய இது நேரமல்ல. அரசு மனம் மாறவேண்டிய நேரமிது.

எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் – மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பது மட்டுமே எம் கட்டளை.

Kamal talks about 3rd Corona lock down extend

BREAKING மே 17 வரை ஊரடங்கு நீடிப்பு; தளர்வுடன் முழு தகவல்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உடத்தரவு அமலில் உள்ளது.

முதன்முறையாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 14வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அப்போதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பதாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்து வருவதாலும் 2வது முறையாக மே 3 வரை ஊரடங்கு இருக்கும் என அறிவித்தார் மோடி.

தற்போது மே 3 ஆம் நெருங்கி வரும் வேளையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு. அதாவது மே 4 முதல் மே 17 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.

சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் .

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.

மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Centre extends the Nation wide Corona lock down till May 17

ரஜினி கொடுத்துட்டார்.. கமல் அஜித் விஜய் சூர்யாகிட்ட கேட்டுருக்கேன்.. – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை மக்களும் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

சமூக சேவை மனப்பான்மை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் 3 கோடி ரூபாயை முதற்கட்டமாக கரோனா நிவாரண நிதிக்காக கொடுத்தார்.

அதன்பின்னர் 25 லட்ச ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார். பின்னர் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக கொடுத்தார்.

இதன்பின்னர் நடிகங் சங்கம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் நிதியை அளித்துக் கொண்டே இருக்கிறார்.

அவரின் உதவியை நாம் அவ்வளவு எளிதாக பட்டியலிட முடியாது.

இந்த நிலையில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படும் ஆதரவற்ற பெரியோர் மற்றும் உணவின்றி தவிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உணவளிக்க முடிவெடுத்துள்ளார்.

தொகை பற்றாக்குறை காரணமாக தன் தம்பி எல்வினிடம் தன் எண்ணத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து லாரன்ஸ் கூறியதாவது..

என் தம்பி எல்வின் ஆலோசனைப்படி என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் உதவியை கேட்டேன்.
கேட்ட உடனே 100 மூட்டை அரிசிகளை சுதாகர் சார் மூலமாக அனுப்பினார். அவருக்கு நன்றி.

மேலும் எனது வேண்டுகோளை கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரிடமும் தெரிவித்துள்ளேன்.

இவையில்லாமல் நிறைய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களிடம் தெரிவித்துள்ளேன்.

யாராக இருந்தாலும் பணமாக கொடுக்காமல் நிவாரண பொருட்களாக கொடுக்க வேண்டுகிறேன்.

இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

LARENCCE CHARIRABLE TRUST
2/4 1ST CROSS STREET. 3RD AVENUE, ASHOK NAGAR
CHENNAI 83. PHONE 877 8338209

என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Raghava Lawrence request to Kollywood top Actors

More Articles
Follows