மீனவர்களுக்கு GPS-Radar-Satellite phone வழங்க ஜிவி.பிரகாஷ் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பலரும் இதுவரை கரை திரும்பவில்லை.

ஒரு சில மீனர்வர்கள் சில தீவுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிலர் கடலில் அடித்து செல்லப்பட்டு சடங்களாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இன்னும் பல மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதிக்கு நேரடியாக சென்றார் ஜிவி. பிரகாஷ் என்பதை பார்த்தோம்.

தற்போது அவர் ட்விட்டரில் மீனவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது..

நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவனை முறையிலும் அரசு வழங்க வேண்டும். இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசிடம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். இதில் அனைத்து மீனவ கூட்டமைப்புகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஜிவி.பிரகாஷ் பாடியுள்ள ரொமான்டிக் மியூசிக் ஆல்பம் எனக்கெனவே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது.

அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படத்துறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இனைந்து “ எனக்கெனவே “ என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன் சேகர். இவர் தான் G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த “ ப்ருஸ் லீ “ திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான்தான் கொப்பன் டா “ சிங்கள் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலை இயக்குநர் M.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார்.

கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் / பாடகர் / நடிகர் என்று பன்முகம் கொண்ட G.V. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். கபாலி, பைரவா போன்ற சூப்பர் ஸ்டார் படங்களின் படத்தொகுப்பை கவனித்த தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு :- சுந்தர் ராகவன் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜின் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் , நடனம் :- அசார், கலை:-மதன், விளம்பர வடிவமைப்பு:- மணிகண்டன்.

அழகிய காதல் பாடலான எனக்கெனவே – வில் நாயகனாக ராகேஷ் ராஜன் , நாயகியாக ஸ்முருத்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெட்ராஸ் டெக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெகதீசன் R.V , நவநீத பாபு , நரேன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

விரைவில் இப்பாடலின் First Look ப்ரோமோ வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து முழு பாடலும் வெளியாகும். பாடலை உருவாக்கியுள்ள இதே குழு ஒன்றாக இனைந்து அடுத்து திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

GV Prakash crooned for Romantic Music Album Enakkenave

வடசென்னை மக்களை கௌரவிக்கும் வாண்டு படம்; சமுத்திரக்கனி பாராட்டு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் “வாண்டு”, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர், இயக்குனருமான சமுத்திரகனி மற்றும் காமெடி நடிகர், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு கலந்து கொண்டனர்.

இதில் சமுத்திரகனி பேசுகையில்…

சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஏன் என்றால் நானும் ஆரம்ப காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன், ஒரு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் இல்லை இல்லை ரொம்ப கடினம் தான் இந்த படத்தின் இயக்குனர் வாசன் ஷாஜியை ஆரம்ப காலத்தில் இருந்தே தெரியும் ரொம்ப நல்ல மனிதர் இவர் படம் வெற்றிப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது கடின உழைப்பால் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

வடசென்னை மக்கள் தான் இம்மண்ணின் மைந்தர்கள். இப்படத்தின் டிரெய்லர் பார்க்கும்போது கோலிசோடா படம்தான் நினைவுக்கு வருகிறது என்று கூறினார்.

கஞ்சா கருப்பு பேசுகையில்…

நான் ஆரம்ப காலத்தில் ஒரு ஒரு ஆபீஸ் செல்லும் போது எந்த ஆபீஸ் பாத்தாலும் ஆபீஸ் பக்கத்திலோ அல்லது டீ கடையிலோ இயக்குனர் வாசன் ஷாஜி நின்று கொன்று இருப்பர் நான் அவரிடம் பேசுகையில் சும்மா வந்தன் தலைவரே என்று கூறுவார்.

அன்று முதல் இன்று வரை அவர் ஓடி கொண்டுதான் இருக்கிறார் நல்ல நண்பரும் கூட கடந்த 10 வருடமா எனக்கு அவரை தெரியும் கடின உழைப்பு என்றும் வீன் போகாது உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Samuthirakani praises Vaandu director and his team

கஜினிகாந்த் பர்ஸ்ட் லுக்கில் ரஜினிகாந்தாக மாறிய ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 11ஆம் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள்.

இதே நாளில்தான் நடிகர் ஆர்யாவும் தன் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

இதனையடுத்து இன்று டிசம்பர் ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த படமான கஜினிகாந்த் பட பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இதில் அவர் ரஜினிகாந்த் போல் வேடமேற்று இருக்கிறார்.

அதாவது தர்மத்தின் தலைவர் படத்தில் ஞாபக மறதியுள்ள ரஜினி, ஒரு காட்சியில் வேஷ்டி அணியாமல் பட்டாப்பட்டி மட்டும் அணிந்திருப்பார்.

அதே போன்ற தோற்றத்தில் தற்போது ஆர்யா போஸ் கொடுத்துள்ளார்.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார்.
ஹரஹர மகாதேவகி புகழ் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்க, பாலமுரளிபாலு இசையமைத்து வருகிறார்.

In Ghajinikanth first look Arya became like Rajinikanth

காலா செகண்ட் லுக் ரிலீஸ்; ரஜினி பிறந்தநாளில் தனுஷ் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 12.12.2017 தனது பிறந்தநாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கொண்டாடுகிறார்.

இது அவரது 67வது பிறந்தநாள் ஆகும்.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள அவரது காலா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கபாலி படத்தை தொடர்ந்து காலா படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா’ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush revealed Kaala 2nd look poster on Superstar Rajini Birthday

தன் தீவிர ரசிகர் சிபிராஜின் நடிப்பை பாராட்டிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தல் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான சத்யா படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

சத்யராஜ் தயாரித்திருந்த இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஷணம்’ என்ற படத்தின் ரீமேக் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

பலரின் பாராட்டை பெற்ற இப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த விஜய், சிபிராஜை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிராஜ் பதிவு செய்துள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகர் சிபிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows