மீண்டும் விஜய்-அட்லி கூட்டணியில் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெறும் பைரவா படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கிறார் விஜய்.

இதனையடுத்து விஜய், தன் அடுத்த படத்தினையும் முடிவு செய்திருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, அட்லி இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் கூட்டணியில் வெளியான ‘தெறி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது.

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தை தொடர்ந்து அவரது இரு மகள்களும் சினிமா துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிப்பு துறையை விட்டு இயக்கத்திலும் தயாரிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள், ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, தற்போது சௌந்தர்யா ரஜினிக்கும் ஒரு துறையில் கௌரவ பதவி கிடைத்துள்ளது.

அதாவது இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் ப்ராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

 

சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் இரண்டு காமெடியன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்பதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சூர்யாவின் பெற்றோர்களாக கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடிக்க உள்ளனர்.

இதில் சுரபி முக்கிய வேடத்தில் நடிப்பதாக பார்த்தோம். ஆனால் அவர் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது காமெடியில் கலக்கி வரும் சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும் இணைந்து இருக்கிறார்களாம்.

எனவே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என நம்பி இப்படத்திற்கு போகலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் விவாகரத்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார்.

இளைய மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இவர்களிடையே கருந்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக சம்பந்தபட்ட தரப்பில் இருந்து எவ்விதமான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிகர்ஸ் உங்களை ப்ரதர்ன்னு கூப்பிடுறாங்களா? அப்போ இதை படிங்க..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் உருவாகும் திரைப்படங்களை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பார்ப்பது ஒருவகை என்றால், நம்மூர் படங்களை அடுத்த படத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது இன்னொரு வகை.

இதற்கெல்லாம் நமக்கு ஏது நேரம் என்று சிலர் அலுத்துக் கொண்டாலும், சிலர் இதையே வேலையாக செய்து கொண்டும் இருக்கின்றனர்.

அந்த நெட்டிசன்கள்தான் தற்போது ஒரு மீம்ஸை கிரியேட் செய்துள்ளனர்.

ராஜா ராணி படத்தில் ஆர்யாவைப் பார்த்து நஸ்ரியா ப்ரதர்னு கூப்பிடுவாங்க. அதில் சொன்னவர் இறந்து விடுவார்.

அதுபோல் தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியை அண்ணா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அழைப்பார். அவரும் இறந்துவிடுவார்.

எனவே எங்களை ப்ரதர்ன்னு கூப்பிட்டா உங்களை சீக்கிரமே எமன் கூப்பிடுவான் என்று மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர் கலக்கி வருகின்றனர்.

பாரதிராஜாவுடன் கைகோர்க்கும் மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படும் பாரதிராஜா, நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் நிதிலன் இயக்கி வரும் ‘குரங்கு பொம்மை’ படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க, இவருடன் விதார்த் நடிக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக்கை மலையாள நடிகர் மம்மூட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.

More Articles
Follows