‘ராட்சசி’ ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோதிகா நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்களிடையை நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதில் கீதாராணி என்ற கேரக்டரில் ஜோதிகா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார்.

அரசுப்பள்ளியின் அவல நிலையை இதில் காட்டியிருந்தனர்.

ஆசிரியர்களும், ஆசிரியைகளும் ஒழுங்காக பாடம் நடத்தாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, ஜாதி வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் இருந்தன.

மேலும் அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாக காட்டப்பட்டு இருந்தன.

இந்த காட்சிகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து இணையத்தில் பேசி வருகின்றனர்

கரகாட்டக்காரன் 2 ரெடி..; ராமராஜன் & கவுண்டமணி நடிப்பார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா எத்தனை காலங்களை கடந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத படம் கரகாட்டக்காரன்.

கங்கை அமரன் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீசாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் 500 நாட்களை திரையரங்கில் ஓடியது.

இந்த நிலையில் விரைவில் கரகாட்டக்காரன் 2 உருவாக வாய்ப்புள்ளது.

”ராமராஜன், கவுண்டமணி சம்மதித்தால், இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிப்பர்,” என டைரக்டர் கங்கை அமரன் தெரிவித்து உள்ளார்.

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்ப்பது போல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் இணைந்துள்ளார் என்பது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். இந்த இருவரும் ஒன்றிணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் – அதுல்யா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ என்ற சமீபத்திய படம் ஒன்றில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன. இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்” என்றார்.

‘சீதக்காதி’ படத்தில் நடித்த வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், அவர் இங்கே வில்லனாக நடிக்கிறாரா? என்று யூகம் வரலாம். அது குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் கூறும்போது, “இல்லை, அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக நடிக்க நாங்கள் இன்னும் யாரையும் இறுதி செய்யவில்லை” என்றார்.

இப்போது, இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் (இசை), ஜே.பி.தினேஷ் குமார் (ஒளிப்பதிவு), வல்லினம், காஷ்மோரா, ஜூங்கா, மான்ஸ்டர் புகழ் விஜே சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவின் சில அழகான இடங்களிலும் படமாக்கப்படும்

சசிகுமார், சரத்குமார் இணையும் ‘நா நா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது தான் கதையின் முக்கிய அம்சங்களை அதிக தாக்கத்துடன் சொல்கிறது. சில நேரங்களில், அதுவே படத்துக்கான ஈர்ப்பின் முக்கிய ஆதாரமாக கூட மாறுகிறது. அதுவே படம் எதை பற்றியது என்பதை அறியும் ஆர்வத்தையும், கதையுடன் அதன் பொருத்தத்தையும் அறிந்து கொள்ள தூண்டுகிறது. சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கும் “நா நா” படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகுமாருடன் சரத்குமார் தோன்றும் படத்தின் முதல் தோற்றம், கதாநாயகனுக்கு இணையான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறாரா? என்பது குறித்து ஒரு உடனடி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் என்.வி.நிர்மல்குமார் இது குறித்து கூறும்போது, “ஆம், சரத்குமாரின் பங்கு நிச்சயமாக கதாநாயகன் சசிகுமார் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திரைக்கதையை எழுதும்போதே, இது ஒற்றை கதாபாத்திரத்தால் இயக்கப்படும் படம் அல்ல, ‘இரட்டை கதாபாத்திரங்கள்’ மூலம் கதை நகரும் என்பதை என்னால் எளிதாக உணர முடிந்தது. நான் மற்றும் எனது குழுவில் உள்ள அனைவருமே சசிகுமார் மற்றும் சரத்குமார் சார் ஆகியோர் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாகவும், முழுமையாகவும் இருப்பார்கள் என்று உணர்ந்தோம். இப்படத்தின் பெரும்பாலான பகுதிகளை சென்னை மற்றும் மும்பையில் இப்போது படமாக்கி இருக்கிறோம்” என்றார்.

“நா நா” என்ற தலைப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்று இயக்குனர் என்.வி. நிர்மல்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, “இதுதான் உண்மையான ரகசியம். முழு படத்தையும் நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக தலைப்பு நியாயமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தான் ராமேஸ்வர் இசையமைக்கிறார். எஸ்பி ராஜா சேதுபதி (படத்தொகுப்பு), ஆர்.சக்தி சரவணன் (சண்டைப்பயிற்சி), வாசுகி பாஸ்கர் (உடைகள்) மற்றும் கபிலன் வைரமுத்து, ஏக்நாத் (பாடல்கள்), கனிஷ்க் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

28 மணி நேரம் நாடகம்; கின்னஸ் சாதனை படைக்க தயாராகும் ‘கவசம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கப்பூரில் ‘கவசம்’ என்னும் நாடகத்தை மேடையேற்ற இருக்கிறது ‘அதிபதி’ நாடகக்குழு. சுமார் 600 பக்க வசனங்களோடு 60 நாடகக் கலைஞர்களோடு தொடர்ந்து 28 மணி நேரம் நாடகம் நடைபெறவிருக்கிறது.

‘இந்த கதையில் பல திருப்பங்களையும் மர்மங்களையும் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்நாடகத்தின் மையக் கதாபாத்திரமான ஈசனை சுற்றி ஐந்து கதாபாத்திரங்கள், கதை முழுவதும் பயணிப்பார்கள்.

இந்த கதை துணைக்கதைகளாக பயணிக்கும் என்று இக்கதையினை எழுதி இயக்கியிருக்கும் திரு. புகழேந்தி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் தமிழ் நாடகம் என்றும் ‘சிங்கப்பூர் புக் ஆப் ரெக் கார்ட்ஸில்’ சிங்கப்பூரில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் நாடகம் என்றும் சாதனை படைக்கவிருப்பது ’கவசம்’ நாடகத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம்.

இந்நாடகத்தின் மூத்த கலைஞர் திருவாட்டி செல்வராஜ் சாவித்திரி இந்த சாதனை நிகழ்வினை பற்றி கூறும்போது, ’உறக்கமின்றி தொடர்ந்து 28 மணி நேரம் நாடகம் நடத்தவிருப்பதால், கலைஞர்கள் அனைவருக்கும் மிகவும் நேர்த்தியாக பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தொடர்ந்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நாடகத்தை மேடையேற்றும் முயற்சியில் நான் ஈடுப்பட்டதால், தூக்கமின்றி நடிப்பது எனக்கு ஒரு சுமையாக தெரியவில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதை சிறப்பாக செய்ய இந்த அனுபவம் கற்று கொடுத்துள்ளது, எனது தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது.’ என்றார்.

‘கவசம்’ வரும் சனிக்கிழமை, 13 ஜுலை அன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெறும். இயோ சூ காங் கிராஸ்ரூட்ஸ் கிளப் அரங்கத்தில் மேடையேற இருக்கும் இந்நாடகத்திற்கு நுழைவுச் சீட்டுகளைப் பெற 90998510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேல் விபரங்களுக்கு, www.facebook.com/Athipathi.Theatre என்ற இணைய தளத்தை நாடலாம்.

இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் ஆரம்பிக்கும் இந்நாடகத்தை யூ-டியூப் தளத்தில் நேரலையாக காணலாம்…

28 Hours Stage Drama going to make Guinness World Record

More Articles
Follows