ஆபாசத்துடன் பிராமணர்களை இழிவு படுத்தும் ’காட்மேன்’ டீசர் யூட்யூப்பில் நீக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ’காட்மேன்’ வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது.

ஜீ5 நிறுவனம் தயாரித்த இந்த வெப் தொடர் இந்த டீசர் வெளியான பின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் ஆபாச காட்சிகள் இருந்ததாகவும், ஒரு பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

பல்வேறு காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக இந்துமத அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்த எதிர்ப்பை தொடர்ந்து யூட்யூப்பில் இருந்து ’காட்மேன்’ டீசரை ஜீ5 நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இருந்த போதிலும் இந்த வெப்தொடர் திட்டமிட்டபடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் நியூ டீசர் வெளியாகவுள்ளது.

மம்மூட்டி & அருண் விஜய் மெகா கூட்டணி; டைரக்டர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேரம் மற்றும் ’பிரேமம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

இவரின் புதிய படத்தில் இரண்டு நட்சத்திரங்கள இணையவுள்ளனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அருண் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால் படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் தலைவர் அவரே..; வடிவேலுக்கு விவேக் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் உடனே அதற்காக மீம்ஸ் ஒன்று தயாராகிவிடும்.

இவை பெரும்பாலும் நெகடிவ்வான மீம்ஸ்களாக வரும் வருகின்றன.

இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் டிசைனில் வடிவேலுவின் சினிமா காட்சிகள் இடம் பெறாமல் இருக்காது.

அந்தளவு விதம் விதமான கேரக்டர்களை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் வடிவேலு.

அந்தளவு பல விதமான மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு வடிவேலு கண்டெண்ட் கொடுத்து கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் தலைவர் என்று நடிகர் வடிவேலுவை ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த் நடிகர் விவேக் ’உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் & த்ரில்லர்.. படம் இயக்க காத்திருக்கும் மரியான் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரபலமான நடிகை பார்வதி. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கமலின் ’உத்தம வில்லன், தனுஷின் ’மரியான்’ படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது லாக் டவுன் சமயத்தில் இரண்டு கதைகளை எழுதியிருக்கிறாராம்.

அதில் ஒன்று அரசியல் பின்னணி கொண்டதாம்.

மற்றொரு கதை சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாம்.

இந்த இரண்டு படங்களை விரைவில் இவர் இயக்கலாம் என தெரியவந்துள்ளது.

அசுரன் & பிகில் சூப்பரூ; தனுஷ்-அட்லியை புகழ்ந்து தள்ளிய கரண் ஜோஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர்.

இவரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இவர் அசுரன் மற்றும் பிகில் படங்களை பார்த்து தன் கமெண்டுக்களை தெரிவித்துள்ளார்.

“வெற்றிமாறனின் அசுரன் படத்தைப் பார்த்தேன். கடவுளே… அது மொத்தமாக என் மனதை புரட்டிப் போட்டது. தனுஷ் ஆச்சர்யமளிக்கிறார். பிரம்மிக்கவைக்கிறார். இருக்கையின் நுனியில் அமர்ந்து படத்தைப் பார்த்தேன்.

அட்லீ இயக்கிய பிகில் படத்தை விரும்பினேன். அது மிகப் பெரிய வெற்றிப் படம். நான் அவருடைய எல்லாப் படங்களையும் பார்த்துள்ளேன்.

அவர், மசாலா சினிமாவில் வித்தகர்” என்று கூறியுள்ளார்.

கரண் ஜோகரின் கருத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அட்லீ.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தை கரண் ஜோஹர் தயாரிப்பார் என கூறப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால், அந்த படம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சினிமாவை நசிந்து விடாமல் காக்க வேண்டும்..; முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பொது முடக்கம் சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

இந்த நிலையில் தியேட்டர்களை திறக்கவும் சினிமா படப்பிடிப்புகளை நடத்தவும் அனுமதி கேட்டுள்ள்ளார் பாரதிராஜா.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

“படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம்.

பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.

சினிமாவை நசிந்து விடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

முதல்வர் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும்.

திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”

More Articles
Follows