சிவகார்த்திகேயனுக்கு முன்பே கௌதம் கார்த்திக் வரட்டும்; ஞானவேல்ராஜா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்துள்ள படம் மிஸ்டர். லோக்கல்.

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘தேவராட்டம்’.

இந்த இரண்டு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இதில் Mr லோக்கல் படத்தை மே 1-ந் தேதி திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டனர்.

ஆனால் தற்போது மே 17-ல் வெளியாகும் என வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

ஆனால் தேவராட்டம் படத்தை மே 1-ந் தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர்.

Gnanavel Raja’s sudden plan on Sivakarthikeyan and Gautham Karthik movies

இலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்; ரஜினி-கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாப்படுகிறது.

காலை நேரத்தில் சந்தோஷமாக கொண்டாடப்பட்ட அந்த வேளையில், இலங்கையில் சர்ச் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்த வெடிகுண்டுகள் வெடித்தன.

கிட்டதட்ட 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 210 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலுக்கு நல்ல உள்ளங்கள் அனைவரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் பதிவில்… ”ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை” எனக் கூறியுள்ளார்.

கமல் பதிவிட்டுள்ள பதிவு இதோ…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Violence can never be the final solution to human disagreements. Ironic that the island that spawned the word serendipity is not able to find it. My deepest sympathies to those affected by the bombs in Srilanka. The government should be impartial and swift in rendering Justice.

Rajini and Kamal condemns Sri lanks bomb blasts

காலேஜ் ஹாஸ்டலில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் ‘மயூரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K. அசோக்குமார் P.ராமன், G. சந்திரசேகரன், M.P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன்“.

மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் (இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியது…

சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது.

கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம்.

அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.

நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம்.

அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும் படம் தான் மயூரன்.

ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

ஒளிப்பதிவு – பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர்)
இசை – ஜுபின் (பழையவண்ணாரப்பேட்டை) மற்றும் ஜெரார்ட் இருவரும்.
பாடல்கள் – குகை மா.புகழேந்தி
எடிட்டிங் – அஸ்வின்
கலை – M. பிரகாஷ்
ஸ்டன்ட் – டான் அசோக்
நடனம் – ஜாய்மதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M.P. கார்த்திக்

Mayooran movie deals with College Hostel incidents

‘ஆகாசகங்கா-2’ படத்திற்காக ரம்யா கிருஷ்ணனை இயக்கும் விக்ரம் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ‘காசி’ படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டுவந்தவர் மலையாள இயக்குநர் வினயன்.

கடந்த 3௦ வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இவர், என் மன வானில், அற்புத தீவு உள்ளிட்ட படங்களையும் தமிழில் இயக்கியுள்ளார்.

மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறாக இயக்குநர் வினயன் இயக்கிய ‘சாலாக்குடிக்காரன் சங்காதி’ என்கிற படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தில் கலாபவன் மணியாக நடித்து அறிமுகமான ராஜாமணி என்பவர் தற்போது மலையாளத்தில் பிஸியான கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அதிரடியான ஒரு ஹாரர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார் இயக்குநர் வினயன்.

மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகிறது இந்தப்படம்.

2௦௦௦ல் வினயன் இயக்கிய சூப்பர்ஹிட் ஹாரர் படமான ‘ஆகாசகங்கா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.

ஆகாசகங்கா வெளியான சமயத்தில் அந்தப்படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து காமெடி கலந்த பல ஹாரர் படங்கள் உருவாக அது பாதை அமைத்துக் கொடுத்தது.

இதே ஹாரர் பின்னணியில் 2௦௦5ல் இயக்குநர் வினயன் இயக்கிய வெள்ளி நட்சத்திரம் படமும் சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது..

‘ஆகாசகங்கா-2’ படத்தில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி என பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாம் பாகமானது கிராஃபிக்ஸ் வேலைகளுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மிரட்டலாக உருவாக இருக்கிறது.

பஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைக்கிறார்.

பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

(ஏப்-16) இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாலக்காடு, கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

தமிழ் மலையாளமாக இருமொழியில் உருவாகும் “ஆகாச கங்கா 2” ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளது.

Malayalam film director Vinayan started his new film AKASHAGANGA 2

ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கும் லட்சுமண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடங்க மறு படம் வரை 24 படங்களில் நடித்து இருக்கிறார் ஜெயம் ரவி.

தற்போது அவரது 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ‘போகன்,’ ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்த லட்சுமணி இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இதுபற்றி டைரக்டர் லட்சுமன் கூறியதாவது:-

‘‘ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளத்தக்க கதைக்களத்தை கொண்ட படம், இது.

கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி படத்துக்கு இவர் இசையமைப்பது, இது நான்காவது முறை.

இதில் ஜெயம் ரவி விவசாயி கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது’’ என்றார்.

Jayam Ravi to play a farmer in his 25th film Produced by his Mother in law

ஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்யனும்… வடிவேலு பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார் நடிகர் வடிவேலு.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

இன்றைக்கு ஒவ்வொரு பிள்ளைகளின் கையிலும் செல்போன் இருக்கிறது.

யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. பிள்ளைகளே யாருக்கு ஓட்டு போட வேண்டும் என பெரியவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறாங்க.

இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும் கண்ணீர் சிந்த விடாமல் மக்களை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என பேசினார் வடிவேலு.

Vadivelu talks about Govt ruling party after election

More Articles
Follows