செல்வராகவனை அடுத்து, கௌதம் மேனனுடன் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில்லுக்கு துட்டு படத்தை தொடர்ந்து, சர்வம் சுந்தரம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

இதனிடையில் ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இதன்பின்னர் மீண்டும் ஹீரோவாக செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில நடிக்கும் போதே கௌதம் மேனன் இயக்கும் ஒரு குறுகிய கால படத்திலும் நாயகனாக நடிக்கிறாராம்.

காமெடியான ஜொலித்த சந்தானம் தற்போது முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிப்பது திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

60 நாட்களில் விஜய்சேதுபதியின் 3 படங்கள்; சூப்பர் ஜி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு வருடங்களுக்கு விஜய்சேதுபதியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விறுவிறுப்பாக முடித்து கொடுத்து வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி சீனுராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள தர்மதுரை படம் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து செப்டம்பர் இரண்டாம் வாரத்தில், மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆண்டவன் கட்டளை படம் வெளியாகிறது.

அக்டோபர் 7ஆம் தேதி, ரத்னசிவா இயக்கியுள்ள றெக்க படம் ரிலீஸ் ஆகிறது.

கிட்டதட்ட 60 நாட்களில் விஜய்சேதுபதியின் 3 படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷின் அம்மா தயாரிக்கும் படத்திற்கு இப்படியொரு பெயரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ரஹைனா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

‘யோகி அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவருடன் சுபா மற்றும் வாசுகி ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அசார் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். விஜய் டிவி புகழ் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், விஜய் டிவி ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் விஜய் டிவி அர்ச்சனா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரெஹானாவே இசையமைக்கிறார். படத்தொகுப்பை பிரேம் குமார் கவனிக்க, ஒளிப்பதிவாளராக வம்ஷிதரன் பணிபுரிய இருக்கிறார்.

தலைக்கு எண்ணெய் வைக்காததால், படத்தின் நாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறாராம். அதிலிருந்து தப்பிக்க அவர் என்ன செய்கிறார்? என்பதை படத்தின் ஒருவரிக் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன் மகன் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கிறாராம் ஏ.ஆர்.ரஹைனா.

அருண் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதில் அஜித்-த்ரிஷா நாயகன் நாயகியாக நடிக்க, வில்லனாக அசத்தியிருந்தார் அருண்விஜய்.

தற்போது மீண்டும் ஹீரோவாக அறிவழகன் இயக்கியுள்ள ‘குற்றம் 23’ படத்தில் நடித்துள்ளார்.

மெடிக்கல் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

ஐஸ் இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார் அருண் விஜய். இசை விஷால் சந்திரசேகர்.

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கிடைத்த நட்பினால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

தனுஷுக்கு அவருடன் நடிக்க ஆசை… அவருக்கு அஜித்துடன் நடிக்க ஆசை.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் ஈ மற்றும் புலி ஆகிய படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கிச்சா சுதீப்.

தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் முடிஞ்சா இவன புடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சுதீப்பின் சமீபத்திய பேட்டியில்…. அஜித்து;ம் நானும் நண்பர்கள் என்றாலும் அவர் படத்தில் இதுவரை நடிக்கவில்லை.

அட்லீஸ்ட் அவருக்கு வில்லனாக நடித்து விட ஆசை என தெரிவித்துள்ளார்.

சிலநாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிஞ்சா இவன புடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுதீப்புடன் நடிக்க தனக்கு ஆசை என தனுஷ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘சாலை’ படத்தை எடுத்து மறுபிறவி எடுத்த சார்லஸ் குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முகிலன் சினிமாஸும் தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படம் “சாலை”.

‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா (KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் நடிக்கின்றனர்.

“நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களை தொடர்ந்து சார்லஸ் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கியுள்ளனர்.

ஆபத்தான கொட்டும் பனிப்பொழிவுக்களுக்கிடையில் நாற்பத்தைந்து நாட்கள் இப்படத்தை படமாக்கி இருக்கிறார்களாம்.

ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, வேத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“சாலை படத்தை பொறுத்தவரை ‘பனி’ என்பதுதான் கதையின் த்ரில்லிங் பாயிண்ட்.

அழகிலும், பயத்திலும் ஒரு விஷுவல் ட்ரீட்டை இப்படம் தரும். சூட்டிங் முடித்து திரும்பியதே தங்களின் மறுபிறவி போல உள்ளது.” என்றார்.

More Articles
Follows