நண்பர்களுக்காக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி ஹீரோவாக படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பாடல்களையும் பாடி வருபவர் சிம்பு.

தற்போது முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுக ஆகிறார்.

சந்தானம் மற்றும் விவேக் இணைந்து நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்தின்தான் இந்த இசை அவதாரம்.

இத்தகவலை சற்றுமுன் சந்தானமே உறுதிப்படுத்தியுள்ளார்.

சேதுராமன் இயக்க, விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ‘சர்வர் சுந்தரம்’ நாயகி வைபவி ஷாந்தலியா, ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விடிவி கணேஷ் மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் என்பது தாங்கள் அறிந்ததே.

its my #Godfather & #Humane @iam_str #str who is gonna be the #MusicDirector for the 1st time for #sakkapodupoduraja #Grateful #Blessed
— Santhanam (@iamsanthanam) December 18, 2016

First time Simbu compose Music for Sakka Podu Podu Raja

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் சாகச படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் அவரது புகைப்படங்களும் படங்களும்தான்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததால், கிடைக்கும் படங்களை வைத்து இணையத்தில் டிரெண்டாக்கி வருவது ரசிகர்களின் வழக்கம்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு புகைப்படத்தை இயக்குனர் சிவா வெளியிட்டார்.

தற்போது தல57 படத்தின் இரண்டாவது புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித் பைக்கில் சாகசம் செய்வது போன்ற காட்சி உள்ளது.

மேலும் இது தொடர்பான சிறிய வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது.

இதனை பகிரும் ரசிகர்கள் #DareDevilHeroAJITH என்ற ஹேஷ்டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Ajith bike stunt on the sets of Thala 57 photo trending in internet

‘பேரே காப்பாத்துங்க…’ சூர்யாவிடம் கமல் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் மகளிர் மட்டும்’

இதே பெயரில் கமல் தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

தற்போது இந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்ள கமலின் அனுமதியை பெற்று இருக்கிறாராம் சூர்யா.

அப்போது “கண்டிப்பாக இத்தலைப்புக்கு நீதி செய்வீர்கள் என நம்புகிறேன்” என்று சூர்யாவிடம் கமல் சொன்னாராம்.

அவரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு படம் உருவாகி வருவதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் உறுதியளித்துள்ளார் சூர்யா.

Kamal request to Suriya on Magalir Mattum title

பொங்கலுக்கு ‘கடம்பன்’ ரிலீஸ்… யாரைய்யா கலாய்க்கிறார் ஆர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த வருடம் 2017 பொங்கல் பண்டிகைக்கு அரை டஜன் படங்கள் வெளியாகவுள்ளது.

பைரவா, யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய கடம்பன் படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது என ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.

அத்துடன் இது ச்சும்மா என்றும் பதிவிட்டுள்ளார்.

யாரை கலாய்க்க இப்படி ட்வீட் செய்தார் ஆர்யா? என்பதுதான் புரியவில்லை.

Looks like there r lots of freebies for Pongal .. even I am announcing my film #Kadamban for Pongal #justforfun #Kadamban4Pongal
— Arya (@arya_offl)

வாய்ஸ் கொடுக்க ரஜினி மறுப்பு… அமீர்கானின் ஆசை நிறைவேறுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டங்கல்’ இந்தி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு ரஜினியை வாய்ஸ் கொடுக்க வேண்டினாராம் அமீர்கான்.

தங்களது முகத்திற்கு என்னுடைய வாய்ஸ் மேட்ச் ஆகாது என அமீர்கானிடம் ரஜினி மறுத்துவிட்டாராம்.

இருந்தாலும் ‘டங்கல்’ படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதை தெரிவித்த அமீர்கான்… “நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் 2.ஓ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

அஜித்-சசிகலா இடையே கடும் போட்டி…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 புத்தாண்டு நெருங்கி விட்டது. எனவே பிரிண்டிங் பிரஸ்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

பொதுவாக இயற்கை காட்சிகள், கடவுள்கள், கட்சித் தலைவர்கள் படத்தை போட்டு காலண்டரை பிரிண்ட் செய்வார்கள்.

அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்களின் காலண்டர்களும் படுபிரபலம்.

இந்தாண்டு புதிதாக சசிகலாவின் படங்கள் போட்ட காலண்டர்கள் அதிகளவில் பிரிண்ட் செய்யப்பட்டு வருகிறதாம்.

மேலும் திருப்பூரை சேர்ந்த அஜித் ரசிகர்கள், அஜித் படக் காலண்டர்களை அதிகளவில் பிரிண்ட் செய்து வருகிறார்களாம்.

இவர்கள் இருவருக்கும் இடையேதான் தற்போது கடும் போட்டி நிலவி வருவதாக அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

More Articles
Follows