தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தான் இயக்கிய நரகாசூரன் படத்தை தயாரித்த கெளதம் மேனன் தன்னை ஏமாற்றி விட்டதாக ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மோதல் குறித்து வெளிப்படையாக கௌதம் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.
என்னை பற்றி கார்த்திக் நரேன் அப்படி ட்வீட் செய்துவிட்டதால், நான் அப்செட் ஆகிவிட்டேன். அதனால் தான் பதில் டுவீட் ஒன்றை பதிவு செய்தேன்.
நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. எனவே நான் கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நரகாசூரன் திரைக்கதை விஷயத்தில் நான் தலையிட்டதே கிடையாது. அதுமட்டுமின்றி அவர் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு நான் முதலீட்டாளர்களிடம் கூறினேன்.
அவருக்கு முழு சுதந்திரம் அளித்தேன். அவர் கேட்ட நடிகர்களை அதிகம் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தோம். இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர் எல்லாமே அவருடைய உழைப்புதான்.
பின்னணி இசையை மேசிடோனியாவில் உருவாக்கினார் கார்த்திக். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக நிறைய செலவு செய்துள்ளோம்.
துருவ நட்சத்திரம் போன்ற பெரிய படத்திற்கு நிதியை திருப்பிவிடும் அளவுக்கு இந்த படத்தின் பிசினஸ் பெரியது அல்ல.
நரகாசூரன் லாபத்தில் 50 சதவீதம் நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்று தெரியும்.
நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சியுடன் வெளியேற தயார்.
ஒரு வேளை நான் வெளியேறிவிட்டால் அந்த படம் என் பொறுப்பு அல்ல. சினிமா மார்க்கெட் தற்போது எப்படி உள்ளது என்பதை தெரியாமலும், சிலர் பேச்சை கேட்டும் நரேனுற்கு கோபம் வந்துள்ளது என நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார் கௌதம்.
Gautham Menon apologises to Karthick Naren
