தன் 3வது படத்தையும் கன்பார்ம் செய்த கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துருவங்கள் பதினாறு படத்தின் முலம் பேசப்பட்ட கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது 3வது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில்,

‘‘எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!’ என்று பதிவிட்டுள்ளார்.

பொங்கல் ரேஸில் தூள் கிளப்ப ஸ்கெட்ச் போடும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் விளம்பரம், வியாபாரம், அதிக அரங்குகள் என அனைத்திலும் முதலிடத்தில் உள்ளது கலைப்புலி தாணு வெளியிடும் விக்ரமின் ஸ்கெட்ச்.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

ஸ்ரீப்ரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த கமர்ஷியல் ஆக்ஷன் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாளை வெளியாகும் ஸ்கெட்ச் படத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்துக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் ஸ்கெட்ச் படம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழ் சமூகத்துக்கு ஜனவரி 14-ம் தேதி பொங்கல்

அந்த கொண்டாட்டத்தை இரு தினங்கள் முன்பாகவே தொடங்கி வைக்க நாளை வருகிறார் சீயான் விக்ரம்.

என்ன வேணாலும் நடக்கலாம்; அன்பாகவே இருக்க சூர்யா அறிவுரை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நாளை வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இதன் PRE RELEASE EVENT நடைபெற்றது.

இந்த விளம்பர நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவனாக அனிருத்தும், அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார்.

VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன்.

பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார்.

VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

அடுத்து VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அனிருத்திடம் கேட்டார்.

அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார். VJ அஞ்சனா சந்திரன் உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு அனிருத் கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா ?? என்று நகைசுவையாக பதில் அளித்தார்.

அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார். அடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளினி VJ அஞ்சனா சந்திரன் அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதைநாயகி யார் ? என்று கேட்டதற்கு அனிருத் நயன்தாரா என்று அனிருத் கூறியதற்கு அடுத்த நோடியே அரங்கமே அதிர்ந்தது.

நடிகர் சூர்யா நிகச்சியில் பேசியதாவது…

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும்.

அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “ தானா சேர்ந்த கூட்டத்தை “ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.

இப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது.

இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன். இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது.

நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.

நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்” என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.

Suriya speech at Thaana Serndha Kootam pre release event

ஹிச்சி படத்தை ஹிட்டாக்க ராணிமுகர்ஜியின் சூப்பர் புரோமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகை “ராணி முகர்ஜி” ஹிச்சி திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுளார்.

இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது.

“ராணி முகர்ஜி ” மிகச்சிறந்த நடிகை.எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.

ராணி முகர்ஜியின் திரைப்டப்படங்கள் வெளிவந்தால் நல்ல வரவேற்ப்பை பெரும் நிலையில் தற்போது ஹிச்சி படத்தில் சிறிது காலம் இடைவெளி விட்டு நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும்.

ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் “நைனா மாதுர் “எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2008 ம் ஆண்டுவெளியான “ஹிக்கி பிராட் கோஹன்னின்” புகழ்பெற்ற “ஹால்மார்க்” தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். ராணி முகர்ஜி “ஹிச்சி “படத்தை இரண்டு மாதங்களுக்குள் பரவலாக விளம்பர படுத்தவுள்ளார்.

ராணி முகர்ஜி தனது தாய்மை மற்றும் தொழில்ரீதியான கடமைகளை சமமான முறையில் 100 % செயல்படுத்த விரும்புகிறார்.

அவள் இரண்டு மாதங்களுக்கு படத்தை விளம்பரபடுத்திய பிறகு அவரது தாய்மைக் கடமைகளை செயல்படுத்த முழுமையாகத் திட்டமிட்டுள்ளார். ராணி தனது படத்தை நாடெங்கிலும் விளம்பரபடுத்த விரும்புகிறார்.

ராணி மீண்டும் நடிப்பதற்கு இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் காரணமாக அமையும் என நம்புகிறார். ராணி பத்து நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளிம் படத்தை விளம்பர படுத்த நடவடிக்கைகள் மேற்கொளள்வுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி பெற சவால் நிறைந்த அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்கு காட்டவுள்து இத்திரைப்படம்

ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.

Rani Mukerji promo plans to make hit of her movie Hichki

விக்ரம்-தமன்னாவின் ரொமான்ஸுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்சந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “ ஸ்கெட்ச்“.

இப்படத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கி‌ஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடித்துள்னர்.

கலை-மாயபாண்டி, இசை -எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு- சுகுமார், எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, பிருந்தா, ஸ்டண்ட் -ரவி வர்மன், தயாரிப்பு-மூவிங் பிரேம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய்சந்தர்.

இப்படம் பொங்கல் விருந்தாக நாளை ஜனவரி 12ல் வெளியாகவுள்ளது.

‘வாலு’ படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ள விஜய்சந்தர் இப்படம் குறித்து பேசியதாவது…

“நான் அதிர்ஷ்டசாலிங்க. விக்ரம் எவ்வளவோ பெரிய பெரிய டைரக்டர்களோட ஒர்க் பண்ணினவர் அவர். 2வது படம் எனக்கு தோள் கொடுத்து சாதிக்க வைச்சிட்டார்.

வடசென்னையில் வசிக்கும் எல்லாருமே கஷ்டப்படு றாங்கனு நினைச்சிட்டிருக்கோம். அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு.

பொருளாதாரத்தில் இருந்து லைஃப் ஸ்டைல் வரை எல்லாம் மாறிடுச்சி.

இந்தக் கதைக்காக பல வருஷம் உழைச்சிருக்கேன். வடசென்னை மக்களோடு மக்களா பழகி, அவங்களோடவே வாழ்ந்து இந்தக் கதையை ரெடி பண்ணினேன்.

விக்ரம் சார், அவரோட ஸ்பீடு, எனர்ஜியாலதான் ஒரே மூச்சுல ஷூட் முடிச்சிட்டோம். படத்துல ரெண்டு பாடல்கள் எழுதியிருக்கேன்.

இதுல ‘கனவே கனவே…’ பாடலை விக்ரம் சாரே பாடியிருக்கார்.

இந்த ஸ்கெட்ச்-சில் நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரம் சாரோட ஸ்ரீமன் நடிச்சிருக்கார். இதுல விக்ரம் சாரோட முதல் முறையா சூரி சேர்ந்திருக்கார். அவருக்கு ஜோடியா தமன்னா நடிக்கறாங்க.

இந்தக் கதையை கேட்ட முதல் நாள்ல இருந்தே தமன்னா, கேரக்டராகவே மாறிட்டாங்க. இதுல அவங்க காலேஜ் பொண்ணா ஹோம்லியிலேயும் அசத்தியிருக்காங்க. அவங்க விக்ரமோட வர்ற ரொமான்ஸ் சீன்ஸ் ரொம்பவே கலர்ஃபுல்லா வந்திருக்கு.

தாணு சாரோட சகோதரர்கள் மகன்கள் பார்த்திபன், தினா -தான் இந்த படத்தை தயாரிச்சாங்க. அவங்களை புரொட்யூசர்ஸ்னு சொல்றதை விட நண்பர்கள்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

தாணு சார் இந்தப் படத்தை வெளியிடறார். இந்த ‘ஸ்கெட்ச்’ உங்கள் ஒவ்வொருத்தரையும் கவரும் விதத்தில் ஸ்கெட்ச் போட்டு ரெடி பண்ணி இருக்கோம்” என்றார்.

Vikram Tamannah romance will be colorfull in Sketch says Vijay Chandar

நட்பா? காதலா? எது வெல்லும் என்பதை சொல்லும் டீ கடை பெஞ்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “டீக்கடை பெஞ்ச் “

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்க நாயகியாக தருஷி நடிக்கிறார்.

இவர்களுடன் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் ராம் ஷேவாவிடம் படத்தைப் பற்றி கேட்டோம்..

இது செண்டிமென் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள்.

இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால் நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான்.

இறுதியில் அங்கே நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். ஜனரஞ்சகமான படமாக டீக்கடை பெஞ்ச் படம் உருவாகி உள்ளது.

ஐந்து பாடல்களும் சிறப்பா இருக்கும். கானா பாலா ஒரு பாடலை பாடி நடனமாடி இருக்கிறார்.
படப்பிடிப்பு பழனி கொடைக்கானல் பொள்ளாச்சி சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

ஒளிப்பதிவு – வெங்கடேஸ்வர் ராவ்
இசை – V.ஸ்ரீ சாய் தேவ்
கலை – அன்பு
எடிட்டிங் – ஆனந்த்
நடனம் – கிரீஷ், ஹபீப்
தயாரிப்பு நிர்வாகம் – சரவணன்.ஜி
தயாரிப்பு – V.J.ரெட்டி, S.செந்தில்குமார், N.செந்தில்குமார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ராம்ஷேவா.

Ramakrishnan starrer Tea Kadai bench movie updates

More Articles
Follows