நாய்கள் குரைக்கும்; கமலுடன் மீண்டும் வாழ்வது பற்றி கவுதமி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணம் செய்த கௌதமி தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இவருடன் இவரது மகள் சுபலட்சுமி வாழ்ந்து வருகிறார்.

அதன்பின்னர் திருமணம் செய்யாமலே நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து 13 ஆண்டுகள் வாழ்ந்தார் கவுதமி.

பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு தன் மகளின் வாழ்க்கை நலனுக்காக கமலை பிரிகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் கமலோடு இணைந்து வாழ கௌதமி முடிவெடுத்திருப்பதாக ஒரு இணையத்தளத்தில் தகவல் பரவியது.

இதுகுறித்து கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்…

‘முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும்.

நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

Gautami refuses and clarifies her decision of Live together again with Kamal

Gautami‏Verified account @gautamitads
Fools chatter & dogs bark. I’ve moved on & every1 else shld get on wit their lives & do something dat really matters

சிவகார்த்திகேயன் வெளியிட்ட நயன்தாரா படத்திற்கு இப்படியொரு பெயரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இப்படத்திற்கு கோலமாவு கோகிலா எனப் பெயரிட்டுள்ளனர்.

இதனை சுருக்கமாக கோகோ என்று அழைக்கின்றனர்.

தற்போது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 102-வது படம், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி இணையும் ‘சைரா’ படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நயன்தாரா.

அப்படங்களை முடித்துவிட்டு கோகோ படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் நயன்தாரா நடித்துள்ள அறம், கொலையுதிர் காலம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara next movie titled Colamavu Cokila produced by Lyca Music by Anirudh

கபாலி சாதனையை வீழ்த்த முடியாத விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள விவேகம் படம் நேற்று உலகளவில் வெளியானது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாலும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகு இப்படம் வெளியானதாலும் இது முந்தைய வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

முக்கியமாக கபாலியின் முதல் நாள் வசூலான ரூ. 21 கோடி வசூலை முறிடியக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழக அளவில் முதல்நாளில் ரூ. 17 கோடியை மட்டுமே பெற்றுள்ளது.

இதன் மூலம் ரஜினிக்கு அடுத்த இடத்தை வசூலில் பிடித்துள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

Vivegam failed to beat Kabali collection record in Tamilnadu level on First Day

மாநில வாரியாக விவேகம் முதல்நாள் வசூல் எவ்வளவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படம் நேற்று வெளியானது.

இப்படத்தின் லாஜிக்கில் சில குழப்பங்கள் இருந்தாலும் ஹாலிவுட் பாணியில் படம் இருப்பதால் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 17 கோடியை எட்டியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 1.8 கோடியை வசூலித்துள்ளது.

கேரளாவில் ரூ. 2,9 கோடியையும், கர்நாடாகாவில் ரூ. 3.75 கோடியையும் பெற்றுள்ளது.

மொத்தமாக இந்தியளவில் ரூ. 26 கோடியை பெற்றுள்ளதாம்.

வெளிநாடுகளில் ரூ. 7.25 கோடியை பெறும் உலகளவில் முதல்நாளில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vivegam box office collection in Indian states

விநாயகர் சதுர்த்தி அன்று 2.0 ட்ரீட்; டைரக்டர் ஷங்கர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தில் உள்ள சில காட்சிகளின் தொகுப்பை வெளியிட விருக்கிறாராம்.

இதனை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரூ. 400 கோடியில் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

Shankar going to release 2point0 movie Glimpses on Vinayagar Chathuruthi at 6pm

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரை டஜன் படங்களை கூட ஒரே சமயத்தில ஒப்புக் கொண்டு அசால்ட்டாக இசையமைத்து நடித்து வருபவர் ஜிவி.பிரகாஷ்.

இவரின் நடிப்பில் செம மற்றும் நாச்சியார் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 4ஜி, அஞ்சாதே, ஐங்கரன், 100% காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஈரம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் நாயகி மற்றும் இதர கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

GV Prakash teamsup with Director Arivazhagan

More Articles
Follows