மகளிர் மட்டும் படம் பார்த்தா சூர்யா பட்டு புடவை கொடுப்பாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள மகளிர் மட்டும் படத்தை சூர்யா தன் 2டி நிறுவன சார்பில் தயாரித்துள்ளார்.

பிரம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை ஜிப்ரான்.

இப்படம் நாளை செப். 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்படம் பார்க்கும் பெண்களுக்கு மட்டும் இலவச பட்டு சேலையை வழங்கவிருக்கிறாராம் சூர்யா.

தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பெண்மணிக்கு மட்டுமே இந்த சேலை என்பது இது முதல் 3 நாட்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்-அஜித்-அனிருத் புதிய கூட்டணி; தயாரிப்பாளர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படம் ரிலீஸ் ஆனபின்னர் ஒரு ஆப்பரேசனை முடித்துவிட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் அஜித்.

இதனையடுத்து அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் விவேகம் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ்வான விமர்சனங்களால் தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைக்க இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷங்கர் – அஜித் கூட்டணியை உருவாக்கியதும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே அஜித் பேட்டி எதுவும் கொடுக்கமாட்டார். தற்போதுதான அவர் ஆப்பரேசனை முடித்துள்ளார்.

எனவே அவர் முழுவதும் குணமானவுடனேதான் இதற்காக விடை தெரியும் என எதிர்பார்க்கலாம்.

நடிகையாகனுமா அட்ஜஸ்ட் பண்ணு சொல்வாங்க… – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அழகான நடிப்பின் மமூலம் கோலிவுட்டை கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டாடி என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் ஒரு நடிகையாக எந்த மாதிரியாக பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என அதிரடியாக தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சில உப்புமா படங்களுக்கு கூட சினிமாவில் நடிக்கனுமா? அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள்.

அதற்கு அவர்கள் வைக்கும் பெயர்கள் என்ன தெரியுமா? அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என அழைப்பார்கள்.

ஒரு பெண்ணை நடிகையாக ஜெயிக்க வைக்க பெண்களை இப்படி வற்புறுத்துவது மிகவும் கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

To became heroine cine industry forcing to adjust says Aishwarya Rajesh

துப்பறிவாளன் ஓடும் தியேட்டர்களில் விஷால் பறக்கும் படை கண்காணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனுஇமானுவேல், பிரசன்னா, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள துப்பறிவாளன் படம் இன்று செப்டம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இதனையொட்டி தியேட்டர்களில் படத்தை செல்ஃபோனில் பதிவு செய்து பரபரப்புவதை தடுப்பதற்காகவும் அப்படி பதிவு செய்பவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் பிடித்து கொடுக்கவும் தமிழகமெங்குமுள்ள விஷால் நற்பணி இயக்கம் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளையும் கண்காணிக்க இருக்கிறார்களாம்.

இதற்காக இந்த பறக்கும் படைக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பான கடிதங்களில் யார்? யார்? வருவார்கள் என ஒவ்வொரு தியேட்டருக்கும் விஷால் அனுப்பியுள்ளார்.

Vishal flying squad will supervise in Thupparivalan theaters to avoid piracy

விஷாலின் துப்பறிவாளன் பட ரிலீஸில் சிக்கல்; கோர்ட் நிபந்தனை இதுதான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தை விஷால் தயாரித்து நடித்துள்ளார்.

இப்படத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமை தர்மபுரியை சேர்ந்த டி.என்.சி. சினி ஸ்கிரின்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் இந்த படத்தின் முழுமையான விநியோக உரிமையை நடிகர் விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி பெற்றது.
இதனால் தாங்கள் கொடுத்த 55 லட்ச ரூபாயை திருப்பி தரக்கோரி டி.என்.சி நிறுவனம் கேட்டது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து படத்தை வெளியிட தடைகோரி டி.என்.சி. சார்பில் சென்னை 5 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.என்.சி. நிறுவனத்துக்கு உடனடியாக 25 லட்ச ரூபாயை தரத் தயாராக இருப்பதாகவும், 18 திரையரங்குகளில் மட்டும் வெளியிடும் உரிமையை தருவதாகவும் விஷால் பட நிறுவனம் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, உத்தரவாதம் அளித்தபடி பணம் கொடுக்கப்படாவிட்டால், படத்தை இன்று வெளியிடக்கூடாது என தெரிவித்த நீதிபதி வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

எனவே துப்பறிவாளன் ரிலீஸில் இழுபறி நீடித்து வருகிறது.

Vishal movie Thupparivaalan release issue Court stay order

ரஜினி குடும்பத்தினர் கலந்துக் கொண்ட பாரத் யாத்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சமூக குற்றங்களை கண்டித்து நடக்கும் பாரத் யாத்ரா கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லியில் முடியும் ஒரு விழிப்புணர்வு நடைபயணமாகும்.

குழந்தைகளுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் விழிப்புணர்வு நடை பயணமாக இந்த பயணம் நடைபெறுகிறது.

செப்டம்பர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் அக்டோபர் 15 புதுடில்லியில் முடிவைடகிறது.

வரையறுக்கப்பட்ட பாதையில் பாரத் யாத்ரா ஏறத்தாழ 22 மாநிலங்களில் 11,000 கிமீ பயணமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில், ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொடியிடப்பட்டு நடை பயணம் தொடங்கியது.

இதில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்திஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் மந்திரி மா.பா.பாண்டியராஜனும் டாக்டர். அன்புமனி ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.

Rajini family participated in Shree Dayaa Foundations Bharat Yatra

More Articles
Follows