அட்லி படத்திலும் விஜய்யின் ராசி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் விஜய்க்கு ராசியான திருவிழா பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறதாம்.

அதற்கான செட் அமைக்கும் பணிகளில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறதாம்.

தன் கிராமத்து ரசிகர்களை கவர பெரும்பாலும் விஜய் படத்தில் திருவிழா பாடல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தியை பார்த்தோம்.

சற்றுமுன் இவர்கள் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

96 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரேம்குமார் இயக்குகிறார்.

இவர் சுந்தரபாண்டியன் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் இப்படத்தை தயாரிக்க, கோவிந்த் மேனன் இசையமைக்கிறார்.

விக்ரம் வேதா, கருப்பன் உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதியும், ‘சதுரங்க வேட்டை 2’, ‘கர்ஜனை’, ‘1818’ உள்ளிட்ட படங்களில் த்ரிஷா நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Trisha Starring 96 movie first look released

சுசீந்திரனின் அடுத்த படைப்பு “அறம் செய்து பழகு”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படத்திற்கு அறம் செய்து பழகு என்று பெயரிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தை “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இதில் சந்தீப்க்கு ஜோடியாக “கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா” என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் (Mehreen) இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

’’வெண்ணிலாக் கபடிகுழு’’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் J.லஷ்மண் M.F.I. மீண்டும் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார்.

முதன்முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி.

தற்போது வரை 80% சூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Suseenthiran’s next titled ARAM SEIDHU PAZHAGU

‘சிங்கம்3’ படத்தின் தெலுங்கில் பதிப்பில் வேற கதையாம்!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த சி3 படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது.

இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் செம வசூலை அள்ளி வருகிறதாம்.

நாகார்ஜீனாவின் படங்களை விட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.

இந்நிலையில் இந்த தெலுங்கு பதிப்பில் ஒரு சிறிய மாறுதலை செய்துதான் அப்படத்தை அங்கு வெளியிட்டாராம் இதன் இயக்குனர் ஹரி.

அதாவது தமிழ் பதிப்பில் தமிழ்நாட்டு போலீஸ்காரர் ஆந்திரா சென்று வில்லன்களை வேட்டையாடுவார்.

ஆனால் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா போலீஸ் ஆக இருக்கும் இவர் கர்நாடகாவுக்கு சென்று வேட்டையாடுவாராம்.

Director Hari changed Singam 3 story in Telugu version

‘ஒண்ணுமே ஆகலே…’ பாடிட்டு இப்படி அசத்திட்டாரே அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் கூட்டணி போல சினிமாவில் ஒரு சிலரின் கூட்டணிக்கு அதிக மவுசு உள்ளது.

அதில் ஒன்றுதான் அனிருத் விக்னேஷ் சிவனின் கூட்டணி என்று சொல்லலாம்.

இவர்களின் கூட்டணி வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பாடலகள் இளைஞர்களிடையே மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வரிகளுக்கு அனிருத் இசையமைத்து பாடிய ஒண்ணுமே ஆகலே என்று தொடங்கும் பாடலை பாடி யூடிப்பில் வெளியிட்டனர்.

இப்பாடல் வெளியாகி இன்னும் 24 மணி நேரத்தை கூட கடக்காத நிலையில், இதனை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக விக்னேஷ் சிவன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

(டியூடிப் மற்றும் பேஸ்புக்கை சேர்த்து இந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது)

‘உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ‘காஸி’ சமர்ப்பணம்…’ ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1971ல் இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின் போது, இதுவரை யாரும் அறிந்திராத போர்க்கதைதான் இந்த காஸி.

ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாகும்.

முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுடபத்துடன் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சங்கல்ப்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே, பி.வி.பி யின் நிர்வாக இயக்குனருமான கே.கேயும் கலந்து கொண்டார்.

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி பேசிய போது…

என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை.

ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்படம் முழுநீள திரைப்படமாக தற்போது வெளிவந்துள்ளது.

இப்படமானது விசாகபட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும் என்றும்,ஒரு நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறினார்.

இப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில்…

என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்றும், இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறினார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில்…

இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.

இந்திய சினிமா வரலாற்றில் பல தேசப்பற்று படங்கள் வந்திருந்தாலும், சொல்லபடாத வரலாற்றை சொல்லிய இந்த காஸி இனி வரும் காலங்களில் சொல்லும் படியான வரலாற்றை படைக்கும்.

Rana Dagubaati shares his experience with Ghazi movie

More Articles
Follows