நடிகை மைனா நந்தினி வீட்டுல விசேஷம்… ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் மிகப் பிரபலமானவர் நடிகை நந்தினி.

மேலும் சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி உள்ளிட்ட ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் சின்னத்திரையை பொறுத்தவரை இவரை மைனா நந்தினி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.

இவர் வெண்ணிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளை தன் வீட்டில் சிறப்பாக கொண்டாடியுள்ளார் மைனா நந்தினி.

மேலும் இவர் தற்போது கர்ப்பமாகியிருக்கிறார்.

அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். எனவே ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது வழக்கமான பரிசோதனை தான் என தெரிய வந்துள்ளது.

அவர் நேற்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்பதால் அதிமுக தொண்டர்களிமையே இது பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்.க்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதால் இன்று மே 25 மாலை வரை மருத்துவமனையிலேயே இருக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

துணை முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நலம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி; விதிமுறைகள் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்த நிலையில் சில தளர்வுகள் தற்போது வணிக நிறுவனங்களை திறக்க மாநில அரசுகள் அனுமதித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

25 சதவீத தொழிலாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை.

மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் விடுப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசின் வழிகாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஹிந்தியை தமிழாக்கும் போனி கபூர்; அஜித்தை அடுத்து கை கொடுக்கும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்திருந்தனர்.

தற்போது அஜித் நடிப்பில் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு சூப்பர் ஹிட்டான ஹிந்தி படத்தையும் தமிழுக்கு கொண்டு வருகிறார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. அயுஷ்மன் குரானா நடித்திருந்த இந்த படத்தில் ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கதை இருக்கும.

அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதி தடங்கல்கள் வருவதும், அதனை அவர் முறியடிப்பதுமே படமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க போனி கபூர் தயாரிக்க அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ரீமேக் தொடர்பான செய்தியை நாம் 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தோம்.

அதற்கான லிங்க் இதோ…

https://www.filmistreet.com/cinema-news/ajith-movie-producer-team-up-with-arunraja-kamaraj-and-udhayanidhi/

நேரு ஸ்டேடியத்தை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.

நேற்று மட்டும் 760 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

தமிழகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,510 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே 624 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,989 கடந்துள்ளது.

இந்த நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் அங்கு தங்க வைக்கப் படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்க இந்தியாவிலேயே இல்லைன்னு சொல்லிக்கோ..; பட்டைய கிளப்பும் க/பெ ரணசிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருமாண்டி என்பவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் க/பெ ரணசிங்கம்.

இப்பட பர்ஸ்ட் லுக்கை அடுத்து இப்பட டீசரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நிமிடம் 40 நொடிகள் ஓடும் இந்த டீஸரில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் கிராமத்து மக்களுக்கும் இடையே நடக்கும் தண்ணீர் பிரச்சனையை மைய்ப்படுத்தி எடுத்துள்ளனர்.

தண்ணியையும் காத்தையும் வச்சுதான் அரசியல் செய்றாங்க என்ற வசனத்தோடு இந்த பட டிரைலர் ஆரம்பிக்கிறது.

அரசாங்கமும் அரசு ஊழியர்களும் நினைத்தால் அப்பாவி மக்களை அடிமையாக ஆட்டிப் படைக்கலாம் போன்ற காட்சிகள் உள்ளது.

அதே சமயத்தில் மக்கள் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என்பது போலவும் காட்சிகள் உள்ளது.

‘ரேஷன் கார்டுல இருந்து பேரை எடுத்துடுவிடியா.. எடுத்துக்கோ.. நாங்க இந்தியாவிலேயே இல்லைன்னு சொல்லிக்கோ போ’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் பேசும் வசனம் தற்போது நடக்கும் நிஜ அரசியலை மையப்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

More Articles
Follows