தீவிர சிகிச்சையில் விஷால்; எப்போது வீடு திரும்புவார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த படம் ‘அவன் இவன்’.

இப்படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்திருந்தார் விஷால்.

இந்த படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இந்நாள் வரை விஷாலுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை ஏற்பட்டது.

மேலும், ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த போது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த இரு பிரச்சினைகளுக்காகவும் கடந்த வாரம் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மூட்டுவலி, தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

எனவே அவர் இன்னும் 10 நாட்களில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி மரணத்தால் மறைக்கப்பட்ட பாலியல் கொடூரம்; பிரசன்னா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி(45).

கணவன் இறந்த நிலையில் 4 மகன்கள், 2 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

தனது கடைசி மகன் தமயன், மகள் தனம் ஆகியோருடன் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் சிறுவன் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதில் சிறுமி தனம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அதிகம் பேசப்படாதது ஏன் என்று பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா?” என்று எனக் கேட்டுள்ளார்.

மேலும் மனிதம் மரித்து விட்டதா? என ஆதங்கத்துடன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

Prasanna raised question on murder minor girl harrasament at Vilupuram

இந்தியன் 2 அப்டேட்ஸ்; ஊழலை தோலுரிக்கும் உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார் ஷங்கர்.

தற்போது கமல் அரசியல் களத்தில் வந்துள்ளதால் தன் ரசிகர்களை தொண்டர்களையும் கவரும் வகையில் பல அம்சங்களை சேர்க்க இருக்கிறாராம்.

1996-ல் வெளியான முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி காட்சிகளை வைத்திருந்தனர்.

தற்போது இரண்டாம் பாகத்தில் இன்றைய அரசியல்வாதிகளின் ஊழல் பற்றியும் வங்கிகளில் லோன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பணக்காரர்களை பற்றியும் சொல்லப் போகிறார்களாம்.

மேலும் மக்கள் ஆதரவை பெற பன்ச் வசனங்களை வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

கமல் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். மேலும் இந்தி நடிகர் அஜய்தேவ்கானும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Kamals Indian 2 story based on Corruption and Bank Loan

மது போதையால் ஸ்ரீதேவி மரணம்; துபாய் போலீசார் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.

அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார் என செய்திகள் வெளியாகின.

இதுவரை அவரது உடல் இந்தியா வரவில்லை. துபாய் நாட்டில் பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

எனவே அவரது மரணம் பற்றி ரசிகர்களிடையே அதிக சந்தேகம் அதிகரித்தது.

இந்நிலையில் அவரது மரணம் குறித்து தடவியல் மருத்துவர்கள் (உடற்கூறு அறிக்கை தகவல்) சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணிக்கவில்லை.

குளியல் அறை தொட்டியில் ஸ்ரீதேவி தவறி விழுந்துள்ளார்.

அதிக அளவு மது அருந்தி (ஆல்கஹால்) இருந்ததால் அவரால் தண்ணீரில் இருந்து எழ முடியவில்லை.

இதனால் அவர் தண்ணீரில் மூச்சு திணறி மூழ்கி இறந்துள்ளார். இது ஒரு விபத்துதான்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Autopsy report says accidental drawning cause of Sridevi death

விஜய் பற்றிய புத்தகம் THE ICON OF MILLIONS; நீதிபதி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

“THE ICON OF MILLIONS” என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் “கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் ” என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகம் நிவாஸ் என்பவரால் எழுதப்பட்டு ” THALAPATHY ONLINE FANS ” குரு, ரமேஷ்,மோகன், வர்ஷா, சீனிவாசன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இணைந்து திரு.ஹரிஹரன் என்பவரால் இப்புத்தகம் அச்சடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விசிறி படத்தில் நடித்த ராஜ சூர்யா, மெர்சல் பட புகழ் மாஸ்டர் அஸ்வாத் மற்றும் தொழிலதிபர் ரமேஷ் , தமிழகத்தின் அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்கள் ரிலீஸ் செய்ய தேசியவிருது பெற்ற எழுத்தாளர் “கலைமாமணி ” .பசுபதி ராஜன்  பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நீதிபதி திரு.டேவிட் அன்னுசாமி , இந்த புத்தகம் சிறிய வடிவில் இருந்தாலும் பல செய்திகளை உள்ளடக்கியது.

இது ஓர் விஜய் ரசிகனின் படைப்பு. தளபதி விஜய் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறார். சமுதாயமும் மேலோங்க வேண்டுமென்று நினைக்கிறார் என்பதை இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உரையாற்றினார்.

THE ICON OF MILLIONS Book launched in the name of VIjay

6 அத்தியாயம் பட இயக்குநருடன் கூட்டணி; அடுத்த அருவி-யாகும் அதுல்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’.

இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.

குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா நாயகியாக நடித்துள்ளார்.

இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது.

அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ஸ்ரீதர் வெங்கடேசன்.

த்ரில்லர் இவருக்கு பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தையும் முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார்.

ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இந்தப்படம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு ஆச்சர்யம்.

தமிழ்நாடு முழுதும் இந்த கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன், இந்தப்படத்தை த்ரில்லர் பாணியில் உருவாக்கியது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும்.

அதுமட்டுமல்ல மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்சுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது.

வழக்கமான பாடல் ( காதல் பாடல் ) போல் இல்லாமல் உணர்வு பூர்வமான பாடலாக இருக்கும். படத்தின் உயிர்நாடியாக இருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை கடத்தும்.

மேலும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.

சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனோராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்பது இந்தப்படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

இந்தப்படம் முடிவடைந்த நிலையில் படத்தை பார்த்த சிலர், இந்தப்படம் வெளியாகும்போது, ‘அருவி’ படம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆச்சர்யம் தெரிவித்தார்களாம்.

மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

போஸ்ட் புரொடக்சன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

More Articles
Follows