ரஞ்சித் தயாரிப்பில் சம்படி ஆட்டம் போடும் பரியேறும் பெருமாள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது, தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன.

அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால்… வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள “பரியேறும் பெருமாள்” திரைப்படம் லைக்கா நிறுவன வெளியீடாக வரவுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல், “கருப்பி என் கருப்பி” பிப்ரவரி மாதம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாவது பாடல் “எங்கும் புகழ் துவங்க…” வெளியாகியுள்ளது.

அசல் கிராமத்தையும் கிராமத் திருவிழாவையும் கண்முன்னே நிறுத்தும் இந்தப்பாடலில் 90களில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற சம்படி ஆட்டக்கலைஞராக கலக்கிய அந்தோணி தாசன் மற்றும் இன்று கொண்டாடப்படும் சம்படி ஆட்டக்கலைஞரான கல்லூர் மாரியப்பன் இருவரின் பாடலுடன் கதைநாயகன் கதிர், கதைநாயகி ஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போடும் ஆட்டமும் அப்படியே ஒரு கிராமத்து விழாவில் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

சான்டி நடனம் அமைத்திருக்கும் இப்பாடலை எழுதி இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.

‘சம்படி’ ஆட்டத்தை ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குநர் மாரி செல்வராஜின் ஆசையை மிக சிறப்பாக நிறைவேற்றி வைத்திருக்கிறாரார்களாம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்.

Engum Pugazh song from Pariyerum Perumal goes viral

தன் ரசிகர் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிலம்பரசன்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை பாடி, ஆடி நடித்திருக்கிறார்.

தற்போது முன்னணி நாயகர்களின் வரிசையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தாலும் இவரது சமீப கால படங்கள் வெற்றியைப் பெறவில்லை.

ஆனால் இவருக்கான ரசிகர் கூட்டம் எப்போதும் குறையாமல் கூடிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் சிம்புவின் ரசிகர் மதன் என்பவர் மரணமடைந்து விட்டார்.

முதன்முறையாக எந்த நடிகரும் செய்யாத ஒரு காரியத்தை தன் ரசிகருக்காக சிம்பு செய்துள்ளார்.

அந்த ரசிகரின் 16ஆம் நாள் நினைவு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவரே தெருக்களில் ஒட்டியுள்ளார்.

தற்போது அது தொடர்பான படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கதாநாயகனாக நடிக்கும் விவேக்கு கைகொடுக்கும் சிம்பு-விஷால்-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்கியிருக்கும் படம் எழுமின்.

வையம் மீடியாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 21-ஆம் தேதி நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

ஆர்.ஜே.பாலாஜியின் எல்கேஜி-யில் இணைந்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேடியோவில் ஆர்.ஜே. வாக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

சில தினங்களாக இவர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

அது அரசியல் கட்சி இல்லை ஏதாவது பட அறிவிப்பாக இருக்கும் எனவும் சிலர் கருத்து கூறி வந்தனர்.

அதன்படி அவர் கதை எழுதி நாயகனாக நடிக்கும் எல்கேஜி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த எல்கேஜி என்ற தலைப்பில் கட்சி கொடியை போன்று வண்ணங்களும் ஜல்லிக்கட்டு காளை படமும் இடம் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் பேசப்போகும் இப்படத்தில் அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத் நடிக்க, படத்தின் நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

ஒரு டீ கடை வைத்து தற்போது நாட்டின் முதல்வராக உயர்ந்துள்ள நரேந்திர மோடி கதையை சித்தரிக்கும் வகையில், ஆர்.ஜே.பாலாஜி ஒரு டீ கடையில் இருப்பதும், அதன் பின்னர் பாராளுமன்ற வாசலில் அவர் நிற்பதும் போன்ற படங்களை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரமாதேவி-யாக அசத்தும் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆபாச படங்களில் நடித்து ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வந்தவர் நடிகை சன்னி லியோன்.

தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் உருவானாலும் கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதற்கு முக்கிய காரணம் சன்னி லியோனுக்கு இந்தியாவில் இருக்கும் மவுசுதான் என கூறப்படுகிறது.

தமன்குமார்-மியாஸ்ரீ இணையும் கண்மணி பாப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ள திரைப்படம் “கண்மணி பாப்பா”

நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம்.

கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார்.

அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார்.

ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார்.

அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது.

இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன்.

தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும் போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள்.

எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன?, அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?, குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றை எல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? என்பதை முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி.

இப்படத்தில் “தொட்டால் தொடரும்”, “சட்டம் ஒரு இருட்டறை ”, “6 அத்தியாயங்கள்” போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி பாப்பாவாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

M A ராஜதுரை ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, கிருஷ்ணமூர்த்தி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய்தேவ் இசையமைப்பில், பாடல்களை M C சாரதா, சிவசங்கர் எழுதியிருக்கிறார்கள். நடன இயக்குநராக மது, பாம்பே பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஸ்டண்ட் இயக்குநராக S R முருகன் பணிபுரிந்துள்ளார்.

More Articles
Follows