‘பவுடர்’ படத்தில் பவர்புஃல் வில்லனாக மிரட்டும் இயக்குநர் விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு பி.ஆர்.ஓ ஆகப் பணிபுரிந்து வருபவர் நிகில் முருகன்.

சில நடிகர் நடிகைகளுக்கு மேனேஜராகவும் பணிபுரிந்துள்ளார். இவரை ‘பவுடர்’ படத்தில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீ.

இவர் தான் தற்போது மோகன் & குஷ்பூ ஜோடியாக நடித்து வரும் ‘ஹரா’ படத்தையும் இயக்கி வருகிறார்.

‘பவுடர்’ படத்தில் வித்யா ப்ரதீப், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ஆதவன், சில்மிஷம் சிவா, சிங்கம் புலி, தர்மா, உள்ளிட்டோலும் நடித்துள்ளனர்.

இப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜீ இதில் பவர்ஃபுல் வில்லனாக நடித்திருக்கிறார்.

இவரே ஜீ மீடியா சார்பாக படத்தை தயாரித்துள்ளார்.

ராஜாபாண்டி ஒளிப்பதிவு செய்ய குணா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீஸரை 2021ல் தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து வெளியிட்டனர். டீஸருக்கு மட்டும் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ஜூன் 3ல் ரத்த தெறி தெறி பாடல் ரிலீசானது. இந்த பாடலுக்கும் படத்துக்கும் லியாண்டர் லீமார்ட்டி இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க ஒரே இரவில் சென்னை பகுதிகளில் படத்தைப் படமாக்கியுள்ளது படக்குழு.

2022 ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் பவுடர் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளனர்.

Director Vijay Sri as Powerful villain in ‘Powder’

தமிழக முதல்வரை திருமணத்திற்கு அழைத்த நயன்தாரா – விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின.

அங்கு 150 விருந்தினர்கள் வரை திருமணத்தில் கலந்துகொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதனாலே இப்போது திருமணத்தை மகாபலிபுரத்தில் நடத்தவுள்ளனர்.

மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி விமரிசையாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கவுள்ளது.

திருமண நிகழ்வை தனியார் ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வெளியிட உள்ளது.

இந்த நிலையில் திருமணத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர் மணமக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

இந்த சந்திப்பின் போது நயன்தாரா உடன் இரண்டு படங்களில் (நண்பேன்டா & கதிர்வேலன் காதல்) நாயகனாக நடித்த உதயநிதி உடனிருந்தார்.

Nayanthara – Vignesh Sivan invited the Chief Minister of Tamil Nadu for a wedding

பூரிஜெகன் & விஜய் & பூஜா இணையும் படத்தை தயாரிக்கும் ‘தளபதி 66’ பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜேஜிஎம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தெலுங்கு திரை உலகின் பாதையை திசை திருப்பிய படைப்பாளிகளில் முக்கியமானவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘ஜேஜிஎம்’.

பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் ‘ஜேஜிஎம்’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது.

இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான ‘ஜேஜிஎம்’ திரைப்படத்தை அவருடைய சொந்த பட நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

தயாரிப்பில் சார்மி கவுர், வம்சி பைடிபள்ளி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

(தளபதி 66 படத்தை வம்சி பைடிபள்ளி தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முதன் முறையாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்ட அட்டவணையுடன் தொடங்குகிறது. இதில் நடிகை பூஜா ஹெக்டே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுப் படைப்பான ‘ஜேஜிஎம்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல சர்வதேச நாடுகளில் தொடர்கிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் பிரத்யேக காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் , நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை திரையில் கண்டிராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். அதே தருணத்தில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திரையுலக பயணத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ‘ஜேஜிஎம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பூரி ஜெகன்நாத் எழுதி, இயக்கி வரும் ‘ஜேஜிஎம்’ திரைப்படம், அடுத்த ஆண்டு 2023 ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்:

விஜய் தேவரகொண்டா, பூஜா ஹெக்டே.

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: சார்மி கவுர் மற்றும் வம்சி பைடிபள்ளி

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

Vijay Deverakonda, Pooja Hegde, Puri Jagannadh, Puri Connects & Srikara Studios’ ‘JGM’ First Shoot Schedule Commences!

ஜூன் 24 முதல் ‘கடமையை செய்’-ய வரும் சூர்யா யாஷிகா.; கை கொடுக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ். ஜே சூர்யா நடிப்பில் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடமையை செய்’.

இந்த படத்தில் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க இவர்களுடன் பட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தினை தனது கணேஷ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் ரமேஷ் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ‘கடமையை செய்’ படத்தை ஜூன் 24-ம் தேதி வெளியிடுகிறோம் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை நடிகர் சிம்புவின் குடும்ப நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.

Kadamaiyai sei will release on june 24th

அண்ணா எப்படி சொல்றது? – சூர்யா.; சாரி தம்பி சார் – கமல்.; ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன், பகத்பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், மைனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தமிழில் உருவான இப்படத்தை தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்த நிலையில் நேற்று ஜூன் 3ல் உலகமெங்கும் வெளியிட்டனர்.

படம் வெளியான நாளிலிருந்து முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் வெளியானதால் ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் & விமர்சகர்கள் இடையே சிறப்பான பாராட்டுகளை இப்படம் பெற்றுள்ளது.

சூர்யா திரையில் தோன்றுவது வெறும் ஐந்து நிமிடங்களே என்றாலும் முழு படத்திலும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.

கமல் படத்திற்கு முதன்முறையாக இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதில் ஆக்ஷன் அப்பா மகன் சென்டிமென்ட், தாத்தா பேரன் சென்டிமென்ட் ஆகியவை கலந்து இருப்பதால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் கமலுடன் ‘விக்ரம்’ படத்தில் நடித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

அன்பான கமல் அண்ணா, எப்படி சொல்றது…? உங்களுடன் திரையில் தோன்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிஜமாகி விட்டது. இதை ஏற்படுத்தி தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி.

இவ்வாறு சூர்யா பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ளார் கமல்…

‘சூர்யா தம்பி, இது உங்களுக்கு கொடுக்க வேண்டிய பல நாள் நிலுவை என்பது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே இருக்கும் ரசிகர் கூட்டம் தற்போது அதிகப்படுத்துங்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி, சாரி தம்பி சார்’ என்று பதிவிட்டுள்ளார்..

இந்த படத்தில் சூர்யாவின் கேரக்டர் பாரட்டப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா எந்த ஒரு சம்பளமும் பெறவில்லை என கூறப்படுகிறது.

Dearest @ikamalhaasan Anna எப்படி சொல்றது…!?
This is a dream come true to be on screen with you..!
Thank you for making this happen! @Dir_Lokesh Overwhelmed to see all the love!! #Rolex #Vikram

Dear @Suriya_offl Thambi,
This was long overdue you know it. Love, you already had. Now increase that demography. All the very best for you my thambi , sorry Thambi Sir.

Kamal Haasan-Suriya-Karthi combo in an unexpected mega project?

வியக்க வைக்கும் ‘விக்ரம்’ வசூல்.; தமிழகம் – இந்தியா – உலகளவில் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன், பகத்பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், மைனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தமிழில் உருவான இப்படத்தை தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்த நேற்று ஜூன் 3ல் உலகமெங்கும் வெளியிட்டனர்.

படம் வெளியான நாளிலிருந்து முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் வெளியானதால் ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் & விமர்சகர்கள் இடையே சிறப்பான பாராட்டுகளை இப்படம் பெற்றுள்ளது.

கமல் படத்திற்கு முதன்முறையாக இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதில் ஆக்ஷன் அப்பா மகன் சென்டிமென்ட், தாத்தா பேரன் சென்டிமென்ட் ஆகியவை கலந்து இருப்பதால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று ஒரேநாளில் தமிழ்நாட்டில் மட்டும் 20.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் ரூ 1.70 கோடி வசூலித்துள்ளது.

கேரளாவில் ரூ.5 கோடியும் ஆந்திரா & தெலங்கானாவில் ரூ.3.80 கோடியும், கர்நாடகாவில் ரூ. 4 கோடியும் வசூலித்துள்ளது.

இந்தியளவில் ரூ.32 கோடியை கடந்துள்ளதாம். உலகளவில் ரூ.49 கோடியை எட்டியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Here’s the details report on Vikram collection

More Articles
Follows