தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘விடுதலை’.
இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் தமிழ்நாட்டின் திரையரங்குகளின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியது.
சமீபத்திய தகவல்களின்படி, ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை மார்ச் 31 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும், மார்ச் 8 ஆம் தேதி ‘விடுதலை’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
director Vetrimaaran’s ‘Viduthalai’ Release Date Announcement
