தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.
இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
‘விடுதலை’ படம் கடந்த மார்ச் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகியது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதையடுத்து ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘விடுதலை -2′ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விடுதலை -2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தங்களில் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
‘Viduthalai 2’ shoot begins Soori shares a video