தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மந்திரமூர்த்தி இயக்கி சசிகுமார் நடிப்பில் உருவான படம் ‘அயோத்தி’.
இப்படத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.
‘அயோத்தி’ திரைப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நாளுக்கு நாள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்திற்காக இயக்குனர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.
மேலும், சுசீந்திரன் சசிகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “சூர்யா சார், சசிகுமார் போன்றோர் தான் சமூக கண்ணோற்றத்துடனும் திரைப்படம் நடிக்கிறார்கள்…மனிதத்தை போற்றும் அயோத்தியை ஆதரிப்போம்…சசிகுமார் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்..சிறப்பான திரைப்படம்…” என சசிகுமாரை பாராட்டியுள்ளார்.
குறிப்பு..
சுசீந்திரன் இயக்கி 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கென்னடி கிளப்’ படத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Susienthiran lauds Sasikumar’s ‘Ayothi’
