விஜய்க்கு அதிகம் நடிக்க வாய்ப்பு கொடுத்த படம் மெர்சல்… – சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் பார்த்துள்ளார்.

அப்படத்தை பாராட்டியுள்ள அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை தன் கைப்பட எழுதி பகிர்ந்துள்ளார்.

அதில் சுசீந்திரன் எழுதியுள்ளதாவது…

பிரம்மாண்டமான பட்ஜெட்-ல் நல்ல சமூக கருத்து.

விஜய் சாருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பு கிடைத்த திரைப்படம், அதை சிறப்பாக செய்துள்ளார். விஜய் சார் என்றால் மாஸ், சமந்தா – விஜய் சார் காதல் காட்சிகள், விஜய் சாரின் நக்கல் கலந்த வசன உச்சரிப்பு, வடிவேலு சாரின் இந்தியாவின் தற்போதைய நிலையை “இந்தியாவுல எல்லாரும் பொறக்க கையதா நக்கிட்டு இருக்கானுங்க” என்று ஏடிஎம் கார்டுஐ பற்றி கூறுவது, அனல் அரசு-வின் சண்டைக் காட்சிகள், ஷோபி மாஸ், கேமிரா மேன் விஷ்ணு, அட்லி என அனைவரும் கடினமாக உழைத்து உள்ளனர்.

ரஹ்மான் சாரின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே செம. ‘மெர்சல்’ விஜய் ரசிகர்களுக்கு விருந்து.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Director Suseenthiran praises Vijay and Mersal movie team

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அட்லியுடன் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி மற்றும் மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்ற செய்திகளை பார்த்தோம்.

இதை தன் சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார் அட்லி.

மெர்சலை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

அதற்குள் அடுத்த பட கதையை நான் தயார் செய்துவிடுவேன். அதை விஜய் அண்ணாவிடம் தெரிவிப்பேன்.

அதன்பின்னர் அவர் ஓகே செய்யும் பட்சத்தில் அடுத்த படத்தை ஆரம்பிப்போம் என தெரிவித்துள்ளார்.

After AR Murugadoss film 3rd time Vijay teams up with Atlee

ரசிகர்களை நினைச்சா கீர்த்தி சுரேஷுக்கு பயமா இருக்காம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது சாவித்ரி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம், சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம், மற்றும் விக்ரம் உடன் சாமி ஸ்கொயர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி.

இவரது பெரும்பாலான படங்கள் வெற்றிப் பெறவே, ராசியான நடிகையாக மாறிவிட்டார்.

ஆனால் தொடரி படம் தோல்வியை சந்திக்க பல மீம்ஸ்கள் உருவாக காரணமாகிவிட்டார் கீர்த்தி.

இதுகுறித்து தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது..

என் ரசிகர்கள் விரும்பும் படியான நடிப்பை என்னால் முடிந்தவரை கொடுக்க நினைக்கிறேன்.

சில சமயம் ரசிகர்களின் மீம்ஸ்களை பார்த்தால் பயமாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

I am afraid of memes says Keerthy Suresh

மெர்சல்-பாஜக மோதல்; விஜய்யை ஆதரிக்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜ கட்சியை சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த காட்சிகளை நீக்குமாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அந்த வசனங்களை பேசிய விஜய்க்கு தங்கள் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்காக பல மீம்ஸ்களை உருவாக்கி இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith fans supports Vijay in Mersal and BJP Leaders clash

மெர்சல் படத்தை மெகா ஹிட்டாக்கிய அனைவருக்கும் விஜய் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே ரசிகர்கள் மெர்சல் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, சமந்தா, காஜல், நித்யாமேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள் என அடுத்தடுத்த தகவல்கள் வந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை போலவே, படமும் நேற்று முன்தினம் (தீபாவளி அக்.18ல்) ரிலீஸ் ஆகி வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் முதல் நாளில் மற்ற தமிழ் படங்கள் படைத்த சாதனைகளை தெறிக்கவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள் என தளபதி விஜய் தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Thalapathy Vijay said Thanks to all for making Mersal as big success

பாஜக எதிர்ப்பு எதிரொலி; ஜிஎஸ்டி வசனங்களை நீக்க விஜய் தரப்பு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் கடந்த அக். 18ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் சில காட்சிகளில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளை எதிர்த்து பேசியிருந்தார் விஜய்.

இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், பாஜ கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பற்றிய காட்சிகளை நீக்க விஜய் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தயாரிப்பாளர் முரளி இது தொடர்பாக போனில் பேசியதாகவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

Mersal producer decided to remove GST dialogues from the movie

More Articles
Follows