சிவகார்த்திகேயன்-கீர்த்தி-அனிருத் பற்றி ஷங்கர் ருசிகர தகவல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி இணைந்து நடித்துள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசியதாவது…

“ரஜினிமுருகன் படம் பார்த்தேன். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அனைத்தையும் அதில் செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அவர் நினைத்திருந்தால் இன்னும் ஐந்து, பத்து வருடங்களுக்கு அதுபோன்ற கமர்ஷியல் படங்களை செய்திருக்கலாம்.

ஆனால் ரெமோ படம் மூலம் வேறு ஒரு கட்டத்திற்கு அவரை எடுத்துக் செல்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

அதில் நடித்த கீர்த்தி சுரேஷையும் பார்த்தேன். ரொம்ப க்யூட் அவர். அழகான நடிப்பு. சினிமாவுக்கே உள்ள முகவெட்டு அவரிடம் உள்ளது. நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இப்போது அனிருத்தை சந்தித்த போது, ‘என்ன சார் பிஸியா இருக்கீங்களா? எனக் கேட்டேன்.

இல்ல சார்.. படங்களை குறைச்சிட்டேன். நிறைய படங்களை கமிட் செய்துவிட்டால் ஒரு மெஷின் போல பாடல்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.

என்ஜாய் பண்ண முடியல அப்படின்னு சொன்னார். நல்ல ஆரோக்கியமான முடிவு எடுத்திருக்கிறார் அனிருத். பாராட்டுக்கள்.”

இவ்வாறு ஷங்கர் பேசினார்.

ஆடி மாசம் முன்பே அஜித்தின் ‘தல-57’ ஆரம்பம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் தல-57’ படத்தை சிவா இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார் என்ற தகவல்களை பலமுறை பார்த்துவிட்டோம்.

இப்படத்தை தயாரிக்கவுள்ள சத்யஜோதி நிறுவனம் இதற்கான முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் லொக்கேசன் தேர்வு, கலைஞர்கள் தேர்வு உள்ளிட்ட இதர பணிகளுக்காக வெளியில் சென்றிருந்த படக்குழு தற்போது சென்னை திரும்பிவிட்டதாம்.

எனவே விரைவில் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.

ஆடி மாதம் தொடங்குவதற்குள் அதாவது ஜீலை 16ஆம் தேதிக்குள் இதை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.

‘ரெமோ’வை நான் தயாரிக்கல, நான் தயாரிச்சிருந்தா…’ சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர். டி ராஜாவின் 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களது முதல் படைப்பாக ரெமோ படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா நடைப்பெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் பேசும்போது…

இப்படத்தை நான்தான் தயாரிப்பதாக நிறைய பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

ஆர் டி ராஜாவை எனக்கு மெரினா படத்தின் போதே தெரியும். அவர்தான் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

நான் முதலில் தயாரிக்க நினைத்தேன் என்பது உண்மைதான்.

ஒருவேளை நான் தயாரித்திருந்தால், ஒரு எஃப் எம் ஸ்டேஷனில் நானும் அனிருத்தும் சேர்ந்து இந்த டைட்டில் ட்ராக்கை வெளியிட்டு இருப்போம்.

நிச்சயமாக இவ்வளவு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து இருக்க மாட்டேன்.

அதுபோல் ராஜா நினைத்திருந்தால் இப்படத்தை ரூ. 10 கோடியில் தயாரித்து, 20 கோடியில் விற்பனை செய்திருக்கலாம்.

ரஜினிமுருகனுக்கு பிறகு அப்படி ஒரு வியாபாரம் கிடைத்திருக்கும்.

ஆனால் அவர் எப்போதும் இயக்குனர் ஷங்கரை போல மிகப்பிரம்மாண்டமாக செய்ய ஆசைப்படுபவர். அவரது எண்ணம்போல் எல்லாம் அமையும்.” என்றார்.

‘என்னால்தான் சிவகார்த்திகேயன் ஹீரோ ஆனார்…’ – சதீஷ் ஓபன் டாக்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ பர்ஸ்ட் லுக் மற்றும் 24AM ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லோகோ வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர், மோகன் ராஜா, பிசி ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், கீர்த்தி, சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சதீஷ் பேசியதாவது…

“இப்படத்தில் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இன்று சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ ஆவதற்கு நான் தான் காரணம்.

நாங்கள் இருவரும் ஒன்றாகதான் Short Films குறும்படங்களில் நடிக்க தொடங்கினோம்.

அப்போது தான் ஒரு பெரிய காமெடியன் ஆக வேண்டும் என அடிக்கடி சிவகார்த்திகேயன் சொல்வார்.

நீ அழகா நல்லா இருக்க. நீ காமெடியனாக நடிக்க கூடாது என்று அடிக்கடி அவரிடம் சொல்லி ஹீரோ ஆக்கிவிட்டேன்.

அவர் ஹீரோ ஆனால்தான் நான் காமெடியான இருக்க முடியும்.

அவரே காமெடியனாக ஆகிவிட்டால் நான் என்ன ஆவது? எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்” என பேசினார்.

சிவகார்த்திகேயனை அடுத்து நிவின்பாலிதான்… ஆர்டி ராஜா அறிவிப்பு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24AM ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தங்களது முதல் படைப்பாக ரெமோ படத்தை தயாரித்து வருகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனனர். இசை அனிருத்.

இதன்பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள மற்றொரு படத்தை தயாரிக்கிறது இந்நிறுவனம்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க மோகன் ராஜா இயக்குகிறார்.

இதனைத் தொடர்ந்து, மூன்றாவதாக நிவின் பாலி நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளதாம் 24AM ஸ்டூடியோஸ்.

அடுத்த சூப்பர்ஸ்டார் எதிரொலி… தனுஷ்-ஜிவி.பிரகாஷ் பனிபோர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அவரை வாழ்த்தும் போது அடுத்த சூப்பர் ஸ்டார் என வாழ்த்தினார் ஜி.வி. பிரகாஷ்.

இது ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களிடைய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் கார்டு லோகோவை கவர் போட்டோவாக வைத்துள்ளார்.

இதற்கு முன்பு வேறு படங்களை வைத்திருந்த தனுஷ், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கருத்துக்கு பிறகுதான் இப்படி மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஜி.வி.பிரகாஷ்க்கு பதிலடி கொடுக்கத்தான் தனுஷ் இப்படி செய்துள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

சிலநாட்களுக்கு முன்பு, ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை தனுஷ்தான் முதல் இடம் என அறிவித்தபோது, கருத்துக் கணிப்பில் விஜய்தான் முதல் இடம் என ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ஜி.வி. பிரகாஷ்.

அன்றுமுதல் இவர்களுக்குள் பனிப்போர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows