தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை விஜய் திருப்திபடுத்திடுவார்… : ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிட்டுள்ளனர்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட காலா டைரக்டர் ரஞ்சித் பேசியதாவது….

ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது.

அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார்.

ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்திடுவார் என நம்புகிறேன்.” என்று பேசினார்.

சொத்துக்கள் அனைத்தையும் சஞ்சய்தத்துக்கு உயில் எழுதிய ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் என்பார்கள்.

அவர்கள் நடிகர்களுக்காக எதையும் செய்வார்கள் என்ற பேச்சு பல காலமாகவே இருந்து வருகிறது.

நடிகருக்கு பேனர் வைப்பது, கட்அவுட் பாலாபிஷேகம் செய்வது, ஏன் நடிகரின் பெயரில் அன்னதானம் செய்வது, அவருக்காக தேர் இழுப்பது என்று பல செய்திகளை கேட்டிருப்போம்.

சிலர் தெய்வமாக மதித்து அவருக்காக உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக நடிகை குஷ்பூக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் தமிழகத்தில்தான் உள்ளனர்.

தற்போது கோலிவுட்டைப் போல் பாலிவுட்டில் இப்படியொரு ரசிகை இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஹரிச்சந்திரா திரிபாதி என்ற பெண் ரசிகை ஒருவர் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

தனது நோய்க்காக கடந்த சில மாதங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் மரணம் அடைந்தார்.

அந்த பெண்ணின் வங்கி கணக்கு, லாக்கர் ஆகியவற்றை வங்கி அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது, ‘தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் இருக்கும் தனது பொருட்கள் அனைத்தையும் நடிகர் சஞ்சய்தத்துக்கே கொடுக்க வேண்டும்’ என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

ரசிகையின் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி சஞ்சய்தத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சய்தத் அதை ஏற்க மறுத்த அனைத்தையும் அவருடைய குடும்பத்தாருக்கே கொடுக்க ஏற்பாடு செய்து விட்டாராம்.

மார்ச் 16 முதல் சினிமா சூட்டிங்கும் நடத்தக்கூடாது; விஷால் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே திரையரங்குகள் வெறிச்சோடிக் காணக் கிடக்கின்றன.

புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஹிட்டான பழைய படங்களை சில தியேட்டர்களில் திரையிட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்குகளுக்கு சுமார் 12 முதல்15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல் பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்கள்.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது.

இப்படி அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளால் திரையுலகம் முழுவதும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கமல்-அஜித்-சூர்யா… கவுதம்மேனனின் அடுத்த பட ஹீரோ யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில்் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதனையடுத்து அவர் தான் இயக்கி ஹிட்டாக்கிய ஒரு படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்கவிருக்கிறாராம்.
அந்த பட்டியலில் தற்போது 3 படங்கள் உள்ளது.

1. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு

2. சூர்யா நடித்த காக்க காக்க

3. அஜித் நடித்த என்னை அறிந்தால்

இதில் எந்த நாயகன் முதலில் ஓகே சொல்கிறாரோ அவர் படத்தை இயக்குவாராம் கௌதம்மேன்ன்.

அனேகமாக அவர் சூர்யாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜோதிகா இடத்தில் நானா..? ஸாரி முடியாது..; அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ், இவானா ஆகியோர் நடித்த படம் நாச்சியார்.

இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

எனவே இதன் தெலுங்கு உரிமையை கல்பனா என்பவர் வாங்கியிருந்தார்.

படத்தின் முக்கிய அம்சமே ஜோதிகாதான் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க அனுஷ்காவை அனுகியுள்ளார்.

ஆனால் அவர் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் 6 மாதத்திற்கு கால்ஷீட் தர முடியாது என கூறிவிட்டாராம்.

இதனால் நாச்சியார் கேரக்டரில் பிரபல நடிகை யாராவது நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

கருத்துகளை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் டைட்டில் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட “கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look.

இப்படம் Facebook பயன்படுத்தும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas..

ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது..

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – மனோகர்

இசை – கணேஷ் ராகவேந்திரா

பாடல்கள் – சொற்கோ

கலை – மனோ

நடனம் – எஸ்.எல்.பாலாஜி

ஸ்டண்ட் – ஆக்‌ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை – D.B.வெங்கடேசன்

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இணை தயாரிப்பு – JSK கோபி

தயாரித்து இயக்குபவர் ராகுல்.

More Articles
Follows