தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அந்த வீடியோ இதுவரை இல்லாத அளவுக்கு வைரலானது.
தினமும் யோகா, தியானம் செய்யும் ஒரு நேர்மையான மனிதர் பொதுவெளியில் இவ்வளவு கோபத்துடன் நடந்துக் கொள்ளலாமா? என பல்வேறு தரப்பினரும் அவர் மீது கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள்.
இதனையடுத்து செல்போனை தட்டி விட்டது ஏன்? என சிவகுமார் விளக்கமும் கொடுத்தார்.
இந்நிலையில் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ இயக்குநர் லெனின் பாரதி, சிவகுமாரின் செயலை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
செல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவகுமாரின் கை, குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா…?
இவ்வாறு லெனின் பாரதி பதிவிட்டுள்ளார்.
Director Lenin Bhharathi condemns Sivakumar Cellphone knocking issue
