நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம் – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘Boy Next Door”. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே “நம்ம வீட்டு பசங்க” என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா? படத்தை தயாரிப்பாரா? என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது” என்றார்.

மேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அவர்களை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சேட்டிலைட் சேனல்களில் சாதித்து பிரபலங்களாக இருக்கிறார்கள். ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பயில்வான் மூலம் அகில இந்தியாவை கலக்க இருக்கும் கிச்சா சுதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வழக்கமான வெற்றிகளுடன் திருப்தி அடைந்து அங்கேயே தேங்கி கிடக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அங்கேயே நின்று விடாமல் உழைக்கும் கலைஞர்களும் பலர் இருக்கிறார்கள். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து தங்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதன் மூலம் அவர்கள் தங்களை வெளிப்படையாக நிரூபித்துள்ளனர். ஆனால் ஒரு சில கலைஞர்கள் மட்டும் வெறுமனே தங்கள் வெற்றியையும் தாண்டி, தங்கள் சினிமாத்துறையை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறார்கள். கிச்சா சுதீபா அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக பல ஆண்டு காலமாக இருந்து வருகிறார். கிச்சாவாக தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர், ராம் கோபால் வர்மாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி பாலிவுட்டிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகராக மாறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘நான் ஈ’ படத்தில் வில்லத்தனமான நடிப்பால் வெகுஜன ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது அவர் பயில்வான் என்ற அகில இந்திய படத்தின் மூலம் மிகவும் மிகப்பெரிய அலைகளை உருவாக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது பயில்வான்.

ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்க, கிருஷ்ணா இயக்கும் இந்த திரைப்படம் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமா. இதில் கிச்சா சுதீபா ஒரு மல்யுத்த வீரராக, தன் கனவுகளை நனவாக்க அவர் மேற்கொள்ளும் பயணத்தையும், அதில் அவர் சந்திக்கும் சவால்களை பற்றிய கதை. அகான்ஷா நாயகியாக நடிக்க, மிகவும் திறமையான மற்றும் பிரபலமான நடிகர் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் கிருஷ்ணா இது குறித்து கூறும்போது, “பயில்வான் கதையை செல்லுலாய்டில் உருவாக்கும் இந்த பயணம் ஒரு சிறந்த கற்றல் அனுபவம். இது போன்ற மிகவும் பிரமாண்டமான படத்தை உருவாக்குவதையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக நான் கருதுகிறேன். முன்னணி நடிகர்களை தவிர, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங், ஷரத் லோகித்ஸவா, அவினாஷ் மற்றும் பலருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரில், கிச்சா சுதீபாவின் சட்டையில்லா தோற்றம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அது பற்றி எஸ்.கிருஷ்ணா கூறும்போது, “ஆம், படத்தை வடிவமைக்கும்போதே, நான் தனிப்பட்ட முறையில் சுதீபா ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், அப்படி உருவானது தான் சட்டையில்லாத தோற்றம். நிச்சயமாக, அவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு முற்றிலும் ஆதரவாக இருந்தது. அவரது அபாரமான உடலமைப்பு எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இருந்தது” என்றார்.

கிச்சா சுதீபாவின் குத்துச்சண்டை போஸ்டர்கள் 5 மொழிகளிலும் அந்தந்த துறையின் மிகப்பெரிய ஆளுமைகளால் வெளியிடப்பட்டது. இந்தியில் சுனில் ஷெட்டி, தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தமிழில் விஜய் சேதுபதி, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.

அர்ஜூன் ஜான்யா இசையமைக்க, கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம், ஹர்ஷா ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். இந்திய சினிமாவின் கொண்டாடப்படும் ராம் லக்‌ஷ்மண் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். கே ரவி வர்மா, லார்னெல் ஸ்டோவால் ஆகியோர் குத்துச்சண்டை காட்சிகளை வடிவமைக்க, ஏ விஜய் குஸ்தி காட்சிகளை வடிவமைத்துள்ளார். கிருஷ்ணா, மது, கண்ணன் (திரைக்கதை), நிதின் லுகோஸ் (ஆடியோகிராஃபி), யோகி-சேத்தன்-கணேஷ் (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில், சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” படத்தில் இணையும் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான “தயாரிப்பு எண் 3” உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை ‘சலீம்’ வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார் இயக்க, சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்வதோடு, சசிகுமார் நடித்த முந்தைய படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. குறிப்பாக, அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆடம்பரமான மும்பை மாநகரத்தில் தொடங்குகிறது, மேலும் சரத்குமார் இதில் கலந்து கொண்டு நடிப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்டபடியே, எல்லா வேலைகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், நிலையான வேகத்திலும் தொடர்ந்து நடக்கின்றன. நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. முக்கிய நடிகர்கள் நடிக்கும் படத்தை எந்த கால தாமதமின்றி குறித்த நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு இயக்குனர் அமைவது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பேரின்பம். எங்கள் படம் உருவாகி வரும் விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. சரத்குமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் புதிய தோற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஜூன் 6ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்கள் நடக்கிறது. இந்த மும்பை மாநகரத்தின் அழகிய இடங்களில் சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதால், இந்த கட்ட படப்பிடிப்பு உண்மையில் முக்கியமானதாக இருக்கிறது” என்றார்.

சரத்குமார் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கேட்டால், “வழக்கமாக, படக்குழுவினருக்கு ஒரு தயாரிப்பாளர் போடும் மிக கடுமையான விதி, படத்தை பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்பது தான், அதை நானே மீறக்கூடாது. ஆனால் படத்தில் அவரை பார்க்கும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். குறிப்பாக, சரத்குமார் – சசிகுமார் என்ற ஒரு வழக்கத்துக்கு மாறான, அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டணி, அனைவரின் கவனத்தையும் திருப்புகின்றன. ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிக ஆர்வத்துடன் உள்ளனர், இது ஒரு தயாரிப்பாளராக எனது தன்னம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கிறது” என்றார்.

கணேஷ் சந்திரா (ஒளிப்பதிவாளர்), ஆனந்த் மணி (கலை) மற்றும் சக்தி சரவணன் (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் உருவாகும் இசை ஆல்பங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறுவதேயில்லை. இந்த கூட்டணியில் சமீபத்தில் உருவான ‘ஏஞ்சலினா’ படத்தின் இசை இரு நாட்களுக்கு முன்பு FMல் வெளியானது. பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. மறுபுறம், திரை ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் வினியோக உரிமைகளை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்ஸாண்டர் பெற்றிருப்பதால், படம் மிகப்பெரிய அளவில் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து அலெக்ஸாண்டர் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்துவதும், பெரிய அளவில் வெளியிடுவதும் ஒரு நல்ல படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என்ற ஒரு வழக்கமான அனுமானங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் ஒரு நல்ல படம் தான் தயாரிப்பாளரையோ அல்லது வினியோகஸ்தரையோ உயர்த்தும். இயக்குனர் சுசீந்திரன் திரைப்படங்கள் எப்போதுமே திரை வணிகர்களின் பட்டியலில் ஒரு வலுவான நிலையை அடைய தவறியதே இல்லை. அழுத்தமான கருவை மிக நேர்த்தியாக வழங்கும் அவரது சூத்திரம் தான் அவரை தொடர்ந்து வெற்றியாளராக வைத்திருக்கிறது. புதுமுகங்களை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, சிறப்பான திரைப்படங்களை தொடர்ச்சியாக வழங்கிய இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இருக்குறார். அந்த வகையில் “ஏஞ்சலினா” படம் தொடக்கத்தில் இருந்தே கவனத்தை ஈர்த்துள்ளது, நான் தனிப்பட்ட முறையில் அதன் ஒவ்வொரு செய்தியையும் கவனித்து வருகிறேன். வண்ண மயமான, இளமையான விஷயங்களை காட்டும் அதே நேரத்தில், திகிலூட்டும் அம்சங்களை கொண்ட அற்புதமான கதையையும் கொண்டுள்ளது” என்றார்.

ஏஞ்சலினாவின் இசை வெற்றியை பற்றி அலெக்ஸாண்டர் கூறும்போது, “சுசீந்திரன் – டி இமானின் அசத்தல் கூட்டணி, அவர்கள் பயணத்தின் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய வெற்றியை பெறறு வருகிறது. ஏஞ்சலினா இசைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது, இசை ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட் பாடலான ‘ஒரு நாள்’ பாடல் எனக்கு பிடித்தமான பாடல். விரைவில் எங்கள் விளம்பர பணிகளை துவங்க இருக்கிறோம், சரியான ஒரு ரிலீஸ் தேதியை முடிவு செய்த பிறகு அதை அறிவிப்போம்” என்றார்.

க்ரிஷா குரூப், சரண் சஞ்சய், சூரி, தேவதர்ஷினி மற்றும் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இந்த ஏஞ்சலினா, காதல் அம்சங்களை கொண்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகை படம். ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கே.வி.சாந்தி தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.சூர்யா (ஒளிப்பதிவு), தியாகு (படத்தொகுப்பு), ஜிசி ஆனந்தன் (கலை), டி இமான் (இசை), விவேகா & கபிலன் (பாடல்கள்), அன்பறிவ் (சண்டைப்பயிற்சி) மற்றும் ஷோபி (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

நடிகர் சங்க தேர்தல்: நாசர் Vs பாக்யராஜ்; விஷால் Vs ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரும் ஜீன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இது சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

இந்த அணிக்கு எதிராக போட்டி அணியை உருவாக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து போட்டியிடவுள்ளார் பாக்யராஜ்.

உதயாவுடன் இணைந்து குட்டி பத்மினியும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிற்கிறார்.

இந்த அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நபர் பெயர் வெளியாகவில்லை.

இதற்கு ஜெயம் ரவி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் நடிகர் கார்த்தியை எதிர்த்து போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

Ishari Ganesh To Contest Opposite Vishal In Nadigar Sangam election

வாழ்க்கையை பற்றிய நேர்மறை அணுகுமுறை, உத்வேகம் மற்றும் எமோஷனை பேசும் IGLOO

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா என்பது வெறுமனே கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவங்களாக மட்டுமே கருதப்படுவதில்லை, இது வாழ்க்கையில் ஒரு தூண்டுதலாகவும் இருக்கும் அழகான கருத்துக்களையும் வழங்குகிறது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் “IGLOO” அந்த வகையான ஒரு படம் தான், அதில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது.

அறிமுக இயக்குனர் பரத் மோகன் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் மிகப்பெரிய ஆயுதம் என்பது நம் “நேர்மறை” சிந்தனைகள் தான். எமோஷனல் காதல் கதையான இந்த படமும் அப்படி ஒரு செய்தியை வலியுறுத்துகிறது. ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை அபாயகரமான ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது, அவர்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை காட்டும் படம். இதை கேட்டு விட்டு இது ஒரு சோகமான காதல் கதையா எனக் கேட்டால் அதை நீங்கள் திரையில் தான் காண வேண்டும். நல்ல ஒரு கருத்தை இந்த தருணங்கள் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த காரணத்திற்காக ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒட்டுமொத்த குழுவும் நம்புகிறோம்” என்றார்.

மேலும், பரத் மோகன் கூறும்போது, “நாங்கள் இந்த படத்தை மிக யதார்த்தமாக காட்ட விரும்பினோம். சினிமா மிகைப்படுத்தல்களை தவிர்த்திருக்கிறோம். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சிலவற்றால் ஈர்க்கப்பட்டு உருவானவை தான். அனைத்து கலைஞர்களும் அவர்கள் கதாபாத்திரங்களின் ஆழத்தை புரிந்துகொண்டு திறம்பட நடித்ததால், இது ஒரு சிறப்பான அனுபவம். முன்னணி கதாப்பாத்திரங்களில் அம்ஜத் கான் மற்றும் அஞ்சு குரியன் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். மேத்யூ வர்கீஸ், லிஸ்ஸி மற்றும் பக்ஸ் ஆகியோரும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இரட்டையர்கள் அனிகா மற்றும் அரோஹி ஆகியோர் படத்தின் ஆரம்ப 25 நிமிடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று” என்றார்.

அரோல் கொரேலி தனது இனிமையான இசைப்பதிவுக்காக புகழ்பெற்றவர், இப்படத்தில் மூன்று பாடல்கள் உண்டு. அவரின் இசை இந்த படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குகன் எஸ். பழனி ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சீனிவாசன் கலை இயக்குனராகவும், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

More Articles
Follows