அடங்கமறு அனைவருக்கும் பிடிக்கும் விதமா இருக்கும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்லா வகை படங்களோடு ஒப்பிடுகையில் ‘வணிக ரீதியான பொழுதுபோக்கு’ படங்களை கொடுப்பது தான் மிகவும் கடினமான விஷயம் என்பது மறுக்க முடியாத உண்மை. நிச்சயமாக, ஒவ்வொரு ‘உணர்ச்சியும்’ ஒரு ‘வகையான’ சினிமாவை குறிக்கும். அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து கொடுப்பது தான் இயக்குனர்களின் பெரிய சவால். அது ஒரு சில இயக்குனர்களுக்கே கை வந்த கலை. அடங்க மறு மொத்த குழுவும் நம்பும் ஒரு விஷயம் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் அத்தகைய திறமையை கொண்டிருக்கிறார் என்பது தான். இயக்குனர்கள் சரண், அமீர் மற்றும் சேரன் போன்ற பிரபலமான இயக்குனர்களின் பள்ளியில் இருந்து வந்தவர் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

“மிகத் திறமையானவர்கள் இருக்கும் ஒரு குழுவில் இருந்து இது போன்ற ஒரு தீர்ப்பை கேட்பது பெரிய விஷயம். குறிப்பாக, சுஜாதா மேடம் அதை சொல்வது பெரிய ஆசீர்வாதம். ஆரம்ப நிலையிலிருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தவர், அவரின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குழு மற்றும் அடங்க மறு படத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது ஒரு சரியான பொழுதுபோக்கு படம் என கூறுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயத்தில், எல்லா பாராட்டும் ஜெயம் ரவி சாருக்கே செல்ல வேண்டும். ஆரம்பத்தில், என் ஸ்கிரிப்ட் மிகவும் சீரியஸான ஸ்கிரிப்டாக இருந்தது, அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் மாற்ற அவர் தான் தொடர்ந்து வலியுறுத்தினார். அவருக்கு நிறைய கதைகள் காத்திருந்தன, அவர் நினைத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை எளிதில் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு, எனக்கு உறுதுணையாக இருந்தார் என்பது நான் அவரிடம் வியந்த விஷயம். இது தான் ஒரு நல்ல படமாக மாற முக்கிய காரணமாகவும் இருந்தது” என்றார்.

மேலும், இந்த படத்துக்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் நம்பமுடியாத முயற்சியை மேற்கொண்டனர். அப்படிப்பட்ட நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் நான் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்” என்றார்.

இந்த அடங்க மறு படத்தை டிசம்பர் 21ஆம் தேதி க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் உலகெங்கும் வெளியிடுகிறது. ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.

ஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதி போராளிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’.. குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஜிப்ஸி படத்தின் படபிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இப்படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின் குரலாகவும், கள போராளிகளின் குரலாகவும்,‘ வெரி வெரி பேட் ..‘ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை யுகபாரதி எழுதியிருக்கிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் படமாக்க திட்டமிட்டபோது, தமிழ் சமூகத்தில் உண்மையாகவே களத்தில் போராடும் போராளிகள் இந்த பாடல் காட்சியில் இடம்பெற்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று எண்ணினார்கள். அதைத் தொடர்ந்து தோழர் நல்லக்கண்ணு, தோழர் திருமுருகன் காந்தி, தோழர் முகிலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சுற்றுசூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ப்யூஷ் மனுஷ், திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் க்ரேஸ் பானு, ஆதி தமிழர் பேரவையைச் சோர்ந்த தோழர் ஜக்கையன், தோழர் வளர்மதி ஆகியோரை சந்தித்து அனுமதி கேட்டனர். அதற்கு அவர்களும் மனமுவந்து ஒத்துழைப்பு அளித்தனர்.

இவர்கள் அனைவரும் பங்குபெற்ற படபிடிப்பு சென்னையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்றது இவர்களுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்அவர்களும் கலந்து கொண்டார்,
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு படத்தின் ப்ரமோ பாடலுக்காக வெளிபுறப் படபிடிப்பில் கலந்து கொண்டு, நடித்து ஒத்துழைப்பு கொடுப்பது இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது,

இதன் படபிடிப்பின் போது தொன்னூறு வயதைக் கடந்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள் படபிடிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பை அளித்ததுடன், வித்தியாசமான முறையில் விளிம்பு நிலை மக்களுக்கான சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் இந்த பாடலுக்கு தங்களாலான உதவியை மனமுவந்து அளிக்க வந்த ஏனைய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கள போராளிகளுடன் இணைந்து கலந்துரையாடியது அனைவரையும் கவர்ந்தது.
பெரிய அதிர்வை ஏற்படுத்தவிருக்கும் இந்த படத்தின் ப்ரமோ பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Breaking தயாரிப்பாளர் சங்க ஆபிஸ் பூட்டை உடைத்த விஷால் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடிகர் விஷால் முடிவெடுப்பதாக கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த எதிர் அணியினர் அண்ணா சலையில் உள்ள சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அணியில் உள்ள ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதல்வரை இன்று சந்தித்து பேசினர்.

எனவே சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையில் இன்று காலை 11 மணியளவில் அங்கு வந்த விஷால், இந்த சங்கத்தின் தலைவர் நான். என் அலுவலகத்திற்கு இன்னொருவர் பூட்டு போட்டுள்ளனர்.

யாரோ ஒருவர் போட்ட பூட்டுக்காக ஏன் இவ்வளவு பாதுகாப்பு என போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்தார்.

பதிவாளரிடம் வழங்கப்பட்ட சாவியை பெற்றுவந்து சங்கத்தை திறக்க விஷாலை போலீசார் வலியுறுத்தினர்.

ஆனால் பூட்டை உடைத்தே தீருவேன் என விஷால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எனவே வேறு வழியின்றி நடிகர் விஷாலை போலீசார் கைது செய்தனர். அவருடன் நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர்கள் அனைவரும் தி.நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதை தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை திறந்தனர்.

உள்ளே சென்ற அவர்கள், சங்கத்திற்குள் ஆய்வு நடத்தி பார்வையிட்டனர்.

Vishal arrested while he trying to enter producers council office

2019 புத்தாண்டு சமூக நீதிக்கான விடியலாக மாற ரஞ்சித் புது முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத்திருவிழா” நடக்க இருக்கிறது.

வானம் கலைத்திருவிழா பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவினரின் பாடல்களுடன் தொடங்கிய பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது,

கலை மக்களுக்கானது என்று மாவோ சொல்வார், அப்படியானால் யார் மக்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. சிறுவயதில் நான் பார்த்த எத்தனையோ கலைகள் இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டன.

மேடை ஏற்றப்படாத பல கலைகளைப்பற்றி நான் யோசிக்கும்போது அதெல்லாம் கலைகள் இல்லையா… என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.

அப்படி நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு விழா நடத்தவேண்டும் என்று நினைத்தோம்.

அதன் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்த கலைவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்த கலைவிழா யாருக்கும் போட்டிக்காக நடத்தப்படும் விழா என்று நினைத்துவிடவேண்டாம். ஒற்றுமை தான் முக்கியம். கலைவழியே அதை சாத்தியப்படுத்தவே இந்த விழாவை நடத்துகிறோம்.

விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தைகளுக்கான மற்றும் இளைய தலைமுறைக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப்பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்று பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம், ஆணவக்கொலையை கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப்பேசும் புத்தகங்களைக்கொண்ட மிகப்பெரிய லைப்ரரி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் சினிமா சாராத இன்டிபென்டட் இசை ஆல்பம் “மகிழ்ச்சி” வெளியீடு, சமூக சிந்தனையுடன் கூடிய கவிதைகள், புத்தகங்கள் வெளியீடு இப்படி இன்னும் பல நிகழ்வுகளுடன் வானம் கலைத்திருவிழா நடக்க இருக்கிறது.

கலைகளின் சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்தி, அந்த விவாதங்களின் வழியே சமத்துவத்தையும் சமூக நீதியையும் முன்னெடுக்க வேண்டும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த வானம் கலைவிழாவின் முக்கிய நோக்கம்.

டிசம்பர் மாதத்தில் இதை நடத்த மிக முக்கியமான காரணம், இந்த வருடத்தின் கடைசி இரவு விடியும் போது சமூக நீதிக்கான விடியலாக அது இருக்கட்டும் என்று நினைத்தது தான் காரணம் என்று கூறினார் இயக்குநர் பா.இரஞ்சித்.

டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாள்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடக்கும் வானம் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கட்டணம் எதுவும் கிடையாது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

2019 பொங்கலில் அஜித்துக்கு வழிவிட்டு பாய தயாராகும் ரஜினி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘பாட்ஷா’ திரைப்படம் தான் பொங்கலுக்கு வெளியான கடைசி ரஜினி படம்.

தற்போதுதான் 23 வருடங்களுக்கு பிறகு 2019 பொங்கல் பண்டிகைக்கு பேட்ட படம் ரிலீஸாகவுள்ளது.

அதே நாளில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸாகி மோத உள்ளது.

ஒரே நேரத்தில் இவர்கள் மோதினால் வசூல் பாதிக்கும் என பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் இரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மாறி மாறி பொங்கல் ரிலீஸை உறுதிப்படுத்தி உள்ளன.

பொங்கல் பண்டிகை திருநாள் ஜனவரி 15 செவ்வாய் கிழமை வருகிறது.

எனவே அதற்கு முந்தைய வாரத்தில் அஜித் & சிவா கூட்டணி விதிப்படி வியாழன் சென்டிமெண்டில் ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைக்கு வருகிறது.

அதற்கு அடுத்த நாள் 11ஆம் தேதி வெள்ளியன்று ரஜினியின் பேட்ட படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரிரு தினங்களில் பேட்ட படம் சென்சார் செய்யப்படவுள்ளது.

எனவே விரைவில் சென்சார் தகவல் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

ரஜினி படத்தில் அரசியல் இருக்காது.; மாஸ் இருக்கும்.. : ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படம் வெளியான பிறகு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இப்பட தயாரிப்பாளர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

ஆனாலும் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.

இதனிடையில், ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் இது குறித்து பேசியதாவது…

“ரஜினி சாரை வைத்து நான் இயக்கும் படம், அரசியல் படம் கிடையாது. ஆனால், மாஸ் என்டெர்டெயினராக இருக்கும்.

நீண்ட காலமாக நான் ரஜினியின் ரசிகன். இது என்னுடைய கனவுப்படம்” என பேசினார்.

More Articles
Follows