Breaking : இயக்குனர் கௌதம்மேனன் விபத்தில் சிக்கினார்; லாரி மோதியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கிளாசிக் இயக்குனர் கௌதம்மேனன்.

இவர் சற்றுமுன் சென்னையருகேயுள்ள செம்மஞ்சேரி அருகே காரில் சென்றுள்ளார்.

அப்போது அதன் அருகில் வந்த டிப்பர் லாரி ஒன்று இவரின் காரின் மீது மோதியுள்ளது.

காரின் பெரும்பாலான பகுதிகள் நொருங்கியுள்ளது.

ஆனால் இயக்குனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்.

Director Gautham Menon car accident near chennai

நிவின்பாலி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக பிரியா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளா மாநிலத்தில் காயம்குளம் என்ற பகுதியில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் கொச்சுன்னி.

இருப்பவர்களிடம் இருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுத்தவர்தான் இந்த கொச்சுன்னி.

தற்போது இவரது பெயரில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.

ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிவரும் மெகா பட்ஜெட் படமான இதில் காயம்குளம் கொச்சுன்னியாக நிவின்பாலி நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அந்தப் படங்களும் இணையத்தில் வெளியாகியது.

ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சினையால் அமலாபால் விலக, அவருக்கு பதிலாக ப்ரியா ஆனந்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

காயம்குளம் கொச்சுன்னி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் தேவதை படத்தில் இணைந்தார் ஜிமிக்கி கம்மல் புகழ் பாடகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கியவர் தாமிரா.

இவர் தற்போது ஆண் தேவதை என்ற படத்தை இயக்கி வருகிறார்’.

சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் மலையாள இயக்குனரும் நடிகரும், ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் பாடகருமான வினீத் சீனிவாசன் ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

ஆனால் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் வெளியாவதற்கு முன்பே ‘ஆண் தேவதை’ படத்தில் பாடல்பாடி கொடுத்து விட்டாராம் வினீத் சீனிவாசன்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

செல்வராகவன் படத்திற்கு பிறகு சூர்யாவை இயக்கும் லோகேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சொடக்கு மேல சொடக்கு போட்டு சூர்யா ஆடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் அடுத்த வருடம் 2018 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்து விட்டு செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதனிடையில் மாநகரம் படம் மூலம் ரசிகர்களை வசியப்படுத்திய இயக்குனர் லோகேஷ் அவர்களிடமும் கதை கேட்டுள்ளாராம் சூர்யா.

அவர் சொன்ன கதையும் பிடித்து போக இந்த கூட்டணி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஓவியா இடத்தில் ஜூலி; சன்பிக்சர்ஸின் விஜய்-62 படத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிய மெர்சல் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விஜய்யின் 62ஆவது படமாக உருவாகும் இப்படத்தில் நாயகி யார்? என்று இன்னும் முடிவாகவில்லை.

ஆனால் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஓவியாவிடம் கேட்டுள்ளார்களாம்.

ஆனால் ஹீரோயின் வேடம் என்றால் ஓகே என்றாராம்.

இதனால் ஓவியா நடிக்க மறுத்த கேரக்டரில் ‘பிக்பாஸ்’ புகழ் ஜூலி நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது

Breaking: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானியை சந்தித்தார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட நடிகர் விஷால் மனுதாக்கல் செய்தார்.

ஆனால் சில காரணங்களால் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

எனவே விஷால் இதுதொடர்பாக முறையீடு செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சற்றுமுன் சந்தித்தார்.

அப்போது தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை அவரிடம் விளக்கியுள்ளார்.

முதலில் வேட்பு மனுவை ஏற்றதாக அதிகாரி அறிவித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது எனவும் அவர் ராஜேஷ் லக்கானியிடம் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு விவகாரத்தில் தன்னிடம் மட்டுமே பாரபட்சம் காட்டப்பட்டதாக லக்கானியிடம் விஷால் புகார் அளித்துள்ளார்.

Vishal met TN election commissioner Rajesh Lakhani to discuss his rejection of Nomination

More Articles
Follows