சாமானியன் தியேட்டருக்கு எப்படி வருவான்?.; சூர்யா-கார்த்திக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியாவதற்கு திரையுலகில் ஒரு தரப்பு ஆதரித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தான் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார் சூர்யா. இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்களிடம் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா திரைத்துறையினருக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது..

“ஒவ்வொரு கலைஞனும், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்குவருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை.

மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான். பாதிக்கப்பட்ட தயாரிப்பளகர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT.

வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப் போக்கில் நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம். இதற்கு நாம் கடந்த காலங்களில் வீடியோ பைரஸிக்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரானபோராட்டம், கேபிள் டிவிக்கு எதிரானபோராட்டம், DTH-க்குஎதிரான போராட்டம்… என சொல்லிக் கொண்டே போகலாம்.

இறுதியில் எல்லாவற்றையும் பின்வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம்.

என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட் விலையை விட பாப்கார்ன், பார்க்கிங் டிக்கெட் விலை அதிகம். ஒருசாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்.? அதனால் தான் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள்ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த கொரோனா காலக் கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதர நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும் அறிவோம். இப்பொழுதுதான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள்.

தியேட்டரை திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து விட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சிலப் பிரச்சினைகளை பேசிதீர்ப்பது நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

குறிப்பாக, மக்கள் நலனில் அக்கறைகொண்டு தியேட்டரில் 35 சதவிகிதம் முதல் 50 சதவீதத்துக்குள் சமூக இடைவெளியுடன் தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம்.

50 சதவீதம் மக்களை அனுமதித்தால் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனை வாரங்கள் திரையிடப்படும்? ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலே தூக்கிவிடுவார்கள்.

அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப் போவார்கள். குறைந்தது ஒரு திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும். பிறகு தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

தயாரிப்பாளர்களின் எங்களது நீண்டநாள் கோரிக்கையான VPF (virtual print fee) தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது. இதை vpf சேவை வழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துகொண்டு எங்களுக்கான சுமையை கருத்தில் கொள்ள முன்வரவேண்டும்.

தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான டிக்கெட் விற்பனையை தயாரிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணைய தளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

எடுத்துமுடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால் தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். நாமும் நன்றாக இருப்போம். ஆகையால் , தமிழ்திரைத்துறை நலிந்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும். உடனடியாக
தீர்க்கப்படவேண்டும்.

தயாரிப்பாளர்களை வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும். சிறப்பாக இருக்கும். பிரச்சினைகள் இப்படி இருக்க அதைவிடுத்து , பிரச்சினையை வேறுபக்கம் திருப்புவது சரியாக தோன்றவில்லை.

சமீப நாட்களில் OTT-க்கு எதிரானப் பிரச்சினையை சூர்யாவுக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விசயமாகும்.

இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒரு சிலரே அதில் சூர்யாவும் குறிப்பிடத்தகுந்தவர்.

சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் OTT-யில் வரக்கூடாது, திரையில் தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான். அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது.

அதை திரையில் கொண்டுவர முன் வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில்சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.

என் நண்பர் சிவக்குமாரின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என்வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள. அவர்களின் மனித நேயப்பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன்.

இவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்தபொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள். இவர்களை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம்வலிக்கிறது.

இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான், இதை நம்பி வாழும் தொழிளாலர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா மிரட்டியுள்ள சூரரைப்போற்று திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் முத்திரைபதிக்கும் தமிழனைப் போற்றும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டாவ காணோம்’ ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தயாரிப்பில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள படம் ‘அண்டாவ காணோம்’.

வேல்மதி இயக்கியுள்ள இப்படம் தயாராகி பல மாதங்கள் ஆனாலும் இதன் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது கொரோனா பரவல் உள்ளதால் தியேட்டர்களும் மூடப்பட்டது.

இதனையடுத்து ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தார் தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார்.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதாவது… அவுட் டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும், சங்கையா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்… பட தயாரிப்புக்காக அவுட்டோர் யூனிட் உபகரணங்களை சப்ளை செய்ததாகவும், அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடனும் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வாடகை மற்றும் கடன் தொகையை அவர் உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்பதால் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும், தனக்கு அளிக்க வேண்டிய கடன் பாக்கியை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் ‘அண்டாவ காணோம்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையடுத்து ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஸ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

For unavoidable reasons #Andavakaanom we have post ponded the release on 28th August soon after resolving issues will announce date

கே.ஜி.எஃப் 2 படத்தில் யஷ் உடன் இணைந்தார் பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களை போல கன்னட திரைப்படங்கள் குறித்து பலரும் அறிவதில்லை.

ஆனால் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கன்னட படங்களில் மிக முக்கியமானது கே.ஜி.எஃப் திரைப்படம்.

இப்படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படத்தில் யஷ் என்பவர் நாயகனாக நடித்திருந்தார்.

படம் வெளியான 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

முதல் பட ரிலீசின் போதே இதன் 2ஆம் பாகம் அறிவிப்பும் வெளியானது.

தற்போது கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகத்தில் அதிரா பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் தடைப்பட்டது.

தற்போது அப்பட சூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் பிரகாஷ்ராஜூம் இணைந்துள்ளார்.

அவர் கலந்துக் கொண்ட சூட்டிங் ஸ்பாட் போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி-தமன்னாவை கைது செய்ய வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும், அதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் மெட்ராஜ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக அந்த மனுவில் கூறியிருந்தார்.

சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ப்ளூவேல் விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்தனர் என்றும் அதற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவன விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

கடவுள் நம்பிக்கையில்லை..; விநாயகர் சிலைக்கு உதயநிதி விளக்கம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சிலை படம் ஒன்றை பதிவிட்டார்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையானது.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கட்டிக்காத்த பகுத்தறிவு (நாத்திகம்) கொள்கையை உதயநிதி மோசம் செய்துள்ளதாக சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய பாசிச பாஜக மற்றும்‌ மாநில அடிமை எடுபிடி அரசுகளின்‌ மக்கள்‌ விரோத நடவடிக்கைகள்‌, ஊழல்கள்‌ குறித்து நான்‌ பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள்‌ தற்போது பிள்ளையார்‌ சிலையின்‌ புகைப்படத்தைப்‌ பகிர்ந்ததைப்‌ பரபரப்பாக விவாதிக்கிறார்கள்‌. நாட்டில்‌ எவ்வளவோ பிரச்சினைகள்‌ இருக்கும்போது அதையெல்லாம்‌ விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக்‌ கயிறு திரிப்பதைப்‌ பார்க்கையில்‌, இங்கு எது நடந்தாலும்‌ அதைக்‌ கழகத்துக்கு எதிரானதாகத்‌ திசைதிருப்பும்‌ சந்தர்ப்பவாதிகளின்‌ சதி வேலைகளைப்‌ புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு விஷயத்தை இங்கே நான்‌ தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.

எனக்கோ, என்‌ மனைவிக்கோ கடவுள்‌ நம்பிக்கை கிடையாது. ஆனால்‌ என்‌ தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும்‌ அறிவர்‌. எங்கள்‌ வீட்டில்‌ ஒரு பூஜை அறையும்‌ உண்டு.

அதில்‌ எங்கள்‌ மூதாதையர்களின்‌ உருவப்‌ படங்கள்‌ உள்ளன. மேலும்‌ என்‌ தாயார்‌ நம்பும்‌ சில கடவுள்‌ படங்களும்‌ உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின்‌ படங்கள்‌ முன்‌ நின்று அவர்களை மனதில்‌ நினைத்துவிட்டு செய்வது எங்கள்‌ வழக்கம்‌.

பிள்ளையார்‌ சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார்‌ சிலையை வாங்கியிருந்தார்‌. அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என்‌ மகள்‌, “இந்த சிலையை எப்படி செய்வார்கள்‌” என்று கேட்டார்‌.

இந்த சிலை களிமண்ணில்‌ செய்தது. தண்ணீரில்‌ கரைக்க எடுத்துச்‌ சென்றுவிடுவார்கள்‌” என்றேன்‌. “இந்த சிலையை எதற்குத்‌ தண்ணீரில்‌ போடணும்‌’ என்று கேட்டார்‌. அதுதான்‌ முறை என்கிறார்கள்‌. அடுத்த வருஷத்துக்குப்‌ புதிதாக வேவறான்று வாங்குவார்கள்‌” என்றேன்‌.

“கரைப்பதற்கு முன்‌ இந்த சிலையுடன்‌ ஒரு போட்டோ எடுத்துக்‌கொடுங்கள்‌” என்று கேட்டார்‌. அவரின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ நான்தான்‌ அந்தப்‌ புகைப்படத்தை எடுத்தேன்‌. மகள்‌ ரசித்த அந்த சிலையை அவரின்‌ விருப்பத்துக்காக என்‌ டிவிட்டர்‌ பக்கத்திலும்‌ பகிர்ந்தேன்‌. அவ்வளவே.

பாஜக கூண்டில் கர்நாடக சிங்கம்..; முன்னாள் IPS அண்ணாமலை விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்கவுள்ளார் என்பதை அறிவித்துள்ளார்.

அதே சமயத்தில் ’நான் முதல்வர் வேட்பாளர் இல்லை’ என தெரிவித்திருந்தார்.

எனவே பலரும் தங்களின் இஷ்டப்படி கர்நாடகாவில் கம்பீரமாக பணியாற்றிய கர்நாடக சிங்கம் என அழைக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை என்பவர் தான் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என கூறிவந்தனர்.

இது தொடர்பாக ரஜினி ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. ஆனால் ரஜினியை வம்பிழுக்கவே இப்படியொரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது…

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

அந்த குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருப்பதாக கூறினார்.

மேலும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி எடுக்கும் முடிவும் நான் கட்டுப்படுவேன் என கூறினார்.

More Articles
Follows