தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய்யின் இந்த 3 படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது தளபதி 65 படத்திற்காக இவர்கள் இருவரும் இணையவுள்ளனர். இந்த படத்தை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
எனவே ரசிகர்கள் இந்த படத்தின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இது தொடர்பான செய்திகளை பலமுறை பார்த்துவிட்டோம்.
ஆனால் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகளை இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்க விருப்பமில்லாமல் விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் அதில் இயக்குனருக்கு உடன்பாடு இல்லை என்பதால் இந்த விலகல் என கூறப்படுகிறது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டும் தான் எது உண்மை என்பது தெரியவரும். எனவே காத்திருப்போம்.
Director AR Murugadoss walks out of Thalapathy 65 ?
