தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து ஓரிரு படங்களை எடுத்திருந்தார்.
தற்போது இவரே தயாரிப்பாளராக அவதாரமெடுத்து இயக்கியுள்ள படம் பைசா.
இப்படத்தை Confident Film Cafe நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.
இப்படத்தில் பசங்க, கோலி சோடா புகழ் ஸ்ரீராம் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆரா, தீபிகா நடித்துள்ளனர்.
இவர்களுடன் நாசர், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதன் ராவ், ராம்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஜே.வி. இசையமைத்துள்ளார்.
இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படம் குறித்து இயக்குநர் மஜீத் கூறியதாவது…
“இப்படம் குப்பை பொறுக்கி வாழும் மனிதர்களை பற்றியதுதான். நாம் குப்பை போடுபவர்களை விட, அதை பொறுக்குபவர்களைத்தான் கேவலமாக பார்க்கிறோம்.
அவர்கள் ஒரு நாளில் மட்டும் ரூ. 500-700 வரை சம்பாதிக்கிறார்கள். காலை 6 மணி முதல் 10 மணிவரை. பின்னர் மாலை 3 முதல் 6 மணி வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.
இதில் துய்மை இந்தியா பற்றிய ஒரு நல்ல கருத்தும் உள்ளது. படம் பார்த்தபின் நாமும் நம்மை சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.” என்று பேசினார்.
