சிம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தாரா சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான நெல்சன் என்பவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார்.

இந்த படத்தில் தான் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தாராம்.

சில நாட்கள் இதன் சூட்டிங் நடைபெற்ற பின் திடீரென நின்றது.

அதன்பின் சிம்பு வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.

லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படம் வெளியாகவுள்ளது.

ஸ்டிரைக் முடிஞ்சுட்டுன்னா மே1ல் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த விவேகம் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை.

இப்படம் தோல்வியை தழுவியதால் உடனடியாக அடுத்த ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அஜித்.

எனவே சத்யஜோதி நிறுவனத்திற்காக சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் அஜித் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

இந்த அறிவிப்பு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டாலும் இதுவரை சூட்டிங் தொடங்கவில்லை.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இன்னும் தாமதம் ஆகி வருகிறது.

விரைவில் ஸ்டிரைக் முடிவடைந்துவிடும் என திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அப்படி சீக்கிரமே முடிவடைந்தால்  மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் படத்தலைப்பு முதல் பர்ஸ்ட் லுக் வரை அனைத்துமே சூட்டிங் முடிவடையும் தருணத்திலேயே வெளியானது.

ஆனால் விஸ்வாசம் படத்தின் தலைப்பு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதால் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சூட்டிங்குக்கு முன்பே வெளியாகவுள்ளதாம்.

சிம்புடன் இணைந்த அட்லி படம்; அட்லியின் அடுத்த பட தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமாரான படம் கொடுத்தாலே அடுத்த படத்திற்கு ரெடியாகிவிடுவார்கள் டைரக்டர்கள்.

ஆனால் விஜய்யை வைத்து மெர்சல் என்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு தன் பட அறிவிப்பை கொடுக்காமல் இருக்கும் அட்லியை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

அட்லியின் அடுத்த படத்தில் பாகுபலி பிரபாஸ் நடிப்பார். அது தெலுங்கு படம் என்ற பல செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு விருது விழாவில் என்னுடைய அடுத்த படமும் தமிழ் படம்தான். தெலுங்கு படத்தை இயக்கவில்லை. ஹீரோ யார்? என்பதை விரைவில் தெரியப்படுத்துவேன் என்றார்.

அந்த விழாவில் அட்லிக்கு 2017 ஆண்டில் மாஸ் இயக்குனர் விருது கிடைத்தது. அந்த விருதை அவருக்கு சிம்பு வழங்கி கௌரவித்தார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

After Mersal Atlee going to direct Tamil movie not Telugu

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை படத்தில் சோனியா காந்தி தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு, ’தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ (The Accidental Prime Minister) என்ற பெயரில் சினிமாவாக உருவாகிறது என்பதையும் இதில் மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடிக்கிறார் என்பதையும் நம் தளத்தில் பார்த்தோம்.

மன்மோகன் சிங் அவர்களைப் பற்றி சஞ்சய் பாரு (SanjayBaru) எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

விஜய் ரத்னாகர் என்பவர் இயக்கும் இந்தப் படத்தை போரா பிரதர்ஸ் தயாரிக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக்கை அனுபம் கெர் வெளியிட்டார்.

இப்படத்தில் சோனியா காந்தியின் கேரக்டரில், ஜெர்மன் நடிகை சுஸானே பெர்னர்ட் நடிக்கிறார். இவர் சில இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

மற்றும் பிரியங்கா காந்தியாக அஹனா கும்ரா, சஞ்சய் பாருவாக அக்‌ஷய் கண்ணா நடிக்கவுள்ளனர்.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

Who will act as Sonia Gandhi in Manmohan Singh biopic

 

வேலையின்றி தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ. 10 லட்சம் கொடுத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலாட்டா டாட்காம் என்ற இணையதளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சென்னையிலுள்ள சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள்.
இதை கமல்ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்டார்.

அதன்பின்னர் அதே மேடையில், பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அதே 10 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால்.

அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.

சினிமா வேலை நிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இது அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Vishals noble deed for FEFSI workers

Breaking: காவிரியை கேட்டால் துணை வேந்தரை தருகிறீர்களா..? கடுப்பாகும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு தமிழரை நியமித்து இருக்கலாமே என இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

துணைவேந்தராக நியமிக்க தமிழகத்தில் தகுதியான பேராசிரியர்கள் இல்லையா? கர்நாடகாவை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பது தமிழக உரிமையை பாதிப்பதுபோல் உள்ளது எனவும் கண்டனங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பதிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துணை வேந்தர் நியமனத்தை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவுகள்…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 55m55 minutes ago

We asked for water from Karnataka and we get a vice-chancellor from Karnataka instead. The gulf between people and the government cannot be more obvious. Are they taunting us so we react adversely? I wonder what their game plan is

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 36m36 minutes ago

கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?

More Articles
Follows