விஐபி2 ரிலீஸ் தேதி; ட்விட்டரில் தனுஷ் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிக்காமல் மௌனம் காத்து வந்தனர்.

இன்று மாலை 7 மணிக்கு அறிவிப்போம் என தெரிவித்து இருந்தார் தனுஷ்.

அதற்குள் சிலர் ஆகஸ்ட் 11 ரிலீஸ் என்றும் ஆகஸ்ட் 18 ரிலீஸ் என்றும் அவர்களாகவே முடிவு செய்து வெளியிட்டனர்.

மேலும் சில ஊடகங்களும் ரசிகர்களும் இதை பின்பற்றி சொல்லத் தொடங்க அதுவே டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில்… வதந்திகளை நம்ப வேண்டாம். நானே இன்று 7 மணிக்கு அறிவிக்கிறேன். காத்திருக்கவும் என பதிவிட்டுள்ளார்.

Dhanush made announcement on VIP2 release date

Dhanush‏Verified account @dhanushkraja 9m9 minutes ago
Requesting fans nd media not 2 speculate d release date of #vip2.Will announce myself today at 7.Thank u 4 your understanding nd patience.

அஜித்துக்காக சிலை உருவாக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்துள்ளவர்களில் பட்டியலில் முக்கியமானவர் தல அஜித்.

இவர் நடிப்பில் அண்மையான வெளியான படங்கள் வீர்ம், ஆரம்பம், வேதாளம் ஆகிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிப் பெற்றன.

எனவே அடுத்து வெளியாகவுள்ள விவேகம் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரது நெல்லை ரசிகர்கள் அஜித்துக்கு 7அடி உயரத்தில் வெண்கலச் சிலை அமைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ரசிகர்கள் பங்கேற்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல் கும்பகோணத்தைச் சார்ந்த ரசிகர்களும் அஜித்துக்கு சிலை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்தான உறுதியான தகவலை அஜித் ரசிகரான அஜித் முரளி என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘விவேகம்’ படத்தின் ரிலீஸ் அன்று இந்தச் சிலை நிறுவப்படும் என கூறப்படுகிறது.

Fans making Statue for Actor Ajith

தங்கம் பரிசளித்து டெக்னீஷியன்களை மெர்சலாக்கிய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கும் மெர்சல் படத்தில் 3 வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் சூட்டிங் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

படத்தின் சூட்டிங் முடியும் தருவாயை எட்டியுள்ளதால் தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் தளபதி.

இவருடன் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு 1 மற்றும் 2 கிராம் தங்க நாணயத்தை பரிசளித்தாராம் விஜய்.

கிட்டதட்ட 150 பேருக்கு இந்த பரிசினை விஜய் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுடனும் போட்டோ எடுத்துக் அவர்களை மகிழ்வித்து உள்ளார் விஜய்.

Vijay gifted Gold coins to Mersal Technicians

விவேகம் விலகியதால் ரிலீசை அறிவித்த படங்கள் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

எனவே அன்றைய தினத்தில் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு விவேகம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

எனவே மற்ற படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள அந்த படங்களை தற்போது பார்ப்போம்.

ராம் இயக்கத்தில் வசந்த்ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்துள்ள தரமணி. யுவன் இசையைமைத்துள்ளார்.

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி, நிவேதா, சூரி நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம். இமான் இசையமைத்துள்ளார்.

நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா நடித்துள்ள குரங்கு பொம்மை.

ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள தப்பு தண்டா.

தயாரிப்பாளர் சிவி குமார் முதன்முறையாக இயக்கியுள்ள மாயவன்.

ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இத்துடன் சிபிராஜின் சத்யா, விக்ரம் பிரபுவின் நெருப்புடா ஆகிய படங்களும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஐபி 2 ரிலீஸ் தேதி இன்று மாலை வெளியாகவுள்ளது.

இவற்றைத் தொடர்ந்து வேறு சில படங்களும் இதே நாளில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

Due to Vivegam postponed 6 movies announced their release date on 11th Aug 2017

 

ரஜினி-கமல் அரசியல் பேசுவாங்க; வரமாட்டாங்க… – விஜயகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி மற்றும் கமல் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோதே அவர்களுக்கு இணையாக பேசப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த்.

இவர் தற்போது சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி, அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழன் என்ற சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அரசியலுக்கு வந்ததையடுத்து, இவரின் நண்பர்களான ரஜினி, கமல் ஆகியோரும் வரக்கூடும் எனத் தெரிகிறது.

அண்மைக்காலமாக ரஜினியும் கமலும் அரசியல் கூத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டியளித்தார்.
அப்போது…

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக கமல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அதில் தவறு இல்லை. அவர் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.

அதுபோல் அரசியல், நடிப்பு என இரட்டைக் குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்வது கஷ்டம் என ரஜினியே ஒருமுறை என்னிடம் கூறினார்.

எனவே ரஜினிகாந்த்தும் அவரும் வரமாட்டார்.

தமிழக அரசு நிர்வாகம் மோசமடைந்து வந்தாலும், தங்கள் பதவியை தக்க வைக்கவே ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர்.” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajini and Kamal wont enter into politics says Captain Vijayakanth

ஆர்ப்பாட்டமில்லாமல் வெளியான விஜய்சேதுபதியின் 96 பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் உருவாகும்போதே தலைப்பிட்டு அதற்கான பூஜை போட்டு தொடங்குவது வழக்கம்.

ஆனால் அண்மைகாலமாக சூட்டிங் நடந்துக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். அது படத்தின் தலைப்பாக இருக்காது.

படத்தின் தலைப்பை எப்போது அறிவிக்கப் போகிறோம்? என்பதை இன்று மாலை அறிவிப்போம் என்பார்கள்.

உடனே அது டிரெண்டாகும். பின்னர் அறிவிப்பு வந்த உடன் அந்த தேதி டிரெண்டாகும்.

அதன்பின்னர் பர்ஸ்ட் லுக், டீசர் 1, டீசர் 2, டிரைலர் 1, டிரைலர் 2 என வெளியாகும்.

இதனையடுத்து சிங்கிள் ட்ராக் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகும். அதன் பின்னர் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகும்.

படம் வெளியாகும் சில தினங்களுக்கு முன்னர் சீனிக் பீக் என்ற படத்தின் ஒரு காட்சி வெளியாகும்.

இதுதான் நவீன கால சினிமாவின் மார்கெட்டிங் தந்திரம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் சத்தமின்றி 96 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ஆனால் இப்படத்தின் தலைப்பு இப்படி சில டிரெண்ட்டிங்கில் இடையே வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய்சேதுபதி அருகில் ஒரு கேமரா இருக்கிறது. எனவே அவர் கேமராமேனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi Trisha starring 96 first look released

More Articles
Follows