மே 10ஆம் தேதிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என திரையுலகில் பன்முகம் கொண்ட தனுஷ் அண்மையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

மேலும் கோலிவுட், பாலிவுட் வரை சென்ற இவர் வருகிற மே 14ஆம் தேதி முதல் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

நடிப்பு உலகில் இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களை கடந்துவிட்டார்.

இந்நிலையில் இவர் சினிமா உலகில் கால் பதித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாம்.

எனவே, வருகிற மே 10ஆம் தேதி இதனை கொண்டாட தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தன் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா மூலம் அறிமுகமானார் தனுஷ்.

இப்படத்தின் திரைக்கதை வசனத்தை செல்வராகவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘படையப்பாவுக்கு பிறகு பாகுபலிதான்..’ விநியோகஸ்தர் சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி பாகுபலி2 வெளியாகி இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தவாரம் மே 5ஆம் தேதி வெளியாகவிருந்த எய்தவன் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளார் இதன் விநியோகஸ்தர் சக்திவேலன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…
“15 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் இருக்கிறேன். இப்படியொரு ரசிகர்கள் கூட்டம் எந்தவொரு படத்துக்கும் வரவில்லை.

ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்துக்குக் கூட இவ்வளவு கூட்டம் தியேட்டருக்கு வரவில்லை.

குடும்பம் குடும்பமாக மக்கள் பாகுபலியை பார்க்க வருகிறார்கள்.

சினிமாவுக்கே செல்லாதவர்களையும் இப்படம் இழுத்து வந்திருக்கிறது.

‘படையப்பா’ படத்துக்குப் பிறகு, மக்கள் இவ்வளவு கூட்டம் கூட்டமாக வருவது ‘பாகுபலி 2’ படத்துக்குத்தான்.

தமிழக விநியோகத்தில் கண்டிப்பாக இப்படம் முந்தைய சாதனைகளையும் முறியடிக்கும்” என்றார்.

இந்தியளவில் அதிக வசூல் செய்த ‘தங்கல்’ படத்தின் சாதனையை ‘பாகுபலி 2’ முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் தாடி ரகசியம் இதுதானாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளன் இயக்கத்தில் கிருஷ்ணா, சந்திரன், நந்தினி, கருணாஸ், கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கிரகணம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பட நாயகன் கிருஷ்ணா பேசும்போது, தன் அண்ணன் வைத்துள்ள தாடி பற்றிய ரகசியத்தை கூறினார்.

அதில்…

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22 தான்.

அதனால் சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்பு தரவில்லை.

அதனால் தான் எங்கள் தந்தை பட்டியல் சேகரே தயாரிப்பாளராக மாறினார். அதன்பின் பெரிய ஆளாக தெரிவதற்காக தாடி வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன் இன்றுவரை தாடியை எடுக்காமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணி வருகிறார்.

அஜித்தின் பில்லா (2007), ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்-கௌதம்மேனன் படத்தில் இணைந்த சுனைனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடித்தி வருகிறார்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் கௌதம்மேனன் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இதில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளரை பெயரை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகிறார் கௌதம் மேனன்.

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நாயகியாக சுனைனா இணைந்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தொகுப்பாளர் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மை காலமாக தனியார் விளம்பரங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இதனைத் தொடர்ந்து முதன்முறையாக ஒரு தொகுப்பாளராக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகிறார்.
இது பற்றி கமல் கூறுகையில்…

‘என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது.

தற்போது, எதிர்மறையாக நான் மற்றவர்களின் அசைவுகளை கண்காணிக்கப் போகிறேன்.

யார் 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கி இந்த சவால்களை வென்று வெற்றிப் பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சி விதிமுறைகள்…
இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாள்கள் தங்க வேண்டும். போன், இணையம், கடிகாரம், நாளிதழ்கள் இப்படி எந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் அந்த வீட்டில் இருக்காது.

வீட்டின் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். யார் நூறு நாள்கள் தங்கி இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் போட்டியின் கான்செப்ட்.

இந்த நிகழ்ச்சி ஜீன் 18முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணி

சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணி

அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை… பிரபாஸ் செய்த பாக்கியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ நட்சத்திரங்கள் ஜொலித்தாலும், பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார் பிரபாஸ்.

ஆனால் இப்படத்திற்காக ஐந்து வருடங்களாக இவர் உழைத்த உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற Madame Tussauds மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரபாஸ் அவர்களுக்கு பிரத்யேக சிலை ஒன்றை வைத்துள்ளனர்.

இந்த அருங்காட்சியத்திற்கு வரும் அனைவரும் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

பாகுபலியில் நடித்த பாக்கியம் என்பதை விட வேறென்ன சொல்ல முடியும்தானே.

More Articles
Follows