‘இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு…’ தனுஷ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் எனை நோக்க பாயும் தோட்டா.

இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பரஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது.

இன்று 8.30 மணிக்கு இப்பட டீசர் வெளியாக உள்ளது.

இதற்கு இன்னும் 1.30 மணி நேரமே உள்ள நிலையில், தனுஷ் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில்… இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Dhanush ‏@dhanushkraja 5m5 minutes ago
#erangiadikkalaamnumudivupanniyaachu

தோனியுடன் விஜய்.. இது ‘பைரவா’வின் பேட் கனெக்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் 2017 பொங்கலுக்கு வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையைமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் சண்டை காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.

அதில் ஒன்றில் கிரிக்கெட் சண்டைக்காட்சியும் உள்ளதாம்.

இது ரசிகர்களுக்கு செம்ம விருந்தாய் அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சண்டைக்காட்சியில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி பயன்படுத்தும் பேட்டை விஜய் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கமல்-சூர்யா-விஜய்யை முந்தி ரஜினியை நெருங்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு ஆண்டு முடியும்போது, அந்த ஆண்டின் சிறந்த பிரபலங்கள் யார்? என்ற பட்டியல் வெளியாகும்.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு முடியும் தருவாயை எட்டியுள்ளதால், உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் 100 நட்சத்திரங்களை பட்டியல் இட்டுள்ளது.

ஆனால் இந்த பட்டியலில் டாப் 10ல் தென்னிந்திய அளவில் யாரும் இல்லை.

13வது இடத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.

இவரைத் தொடர்ந்து மற்ற இடங்களை பிடித்துள்ள நடிகர்களை பார்ப்போம்…

  • 30வது இடத்தில் ரஜினிகாந்த்
  • 33வது இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு
  • 46வது இடத்தில் ஸ்ருதிஹாசன்
  • 47வது இடத்தில் தனுஷ்|
  • 49வது இடத்தில் கமல்ஹாசன்
  • 51வது இடத்தில் சூர்யா
  • 53வது இடத்தில் காஜல் அகர்வால்
  • 61வது இடத்தில் விஜய்
  • 72வது இடத்தில் சீயான் விக்ரம்
  • 90வது இடத்தில் பிரபுதேவா

Forbes Magazine released 2016 Celebrity 100

பெரும் தொகைக்கு அஜித் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் தீபாவளிக்கு அஜித்தின் வேதாளம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தை பிரபல நிறுவனமான ஜாஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது.

வாங்கிய தொகையை விட டபுள் மடங்கு லாபம் பெற்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து ரஜினியின் கபாலி படத்தின் உரிமையையும் இந்நிறுவனமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘தல-57’ படத்தையும் அந்நிறுவனமே வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Jazz cinemas bought TN rights of Thala 57 movie

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் இணையும் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி புயலாக வீசிய வடிவேலு, சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.

இதனிடையில் ரஜினியின் லிங்கா படத்தில் நடிக்க வாய்ப்பும் வந்தும் மறுத்தார்.

தற்போது விஷாலின் கத்தி சண்டை படம் மூலம் ரீஎண்ட்ரீ கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

‘தல-தளபதி’யை தொடர்ந்து சிம்புவின் நியூ இயர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ஆகியோரின் படங்களை சில திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.

இதனால் புதிய வருடம் பிறக்கும் அன்றே தங்கள் அபிமான நடிகரின் படங்களை பார்க்க உள்ள சந்தோஷத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இவர்களைத் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு நியூ இயர் அன்று விருந்து வைக்க உள்ளார் சிம்பு.

சிம்பு நடித்துள்ள “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில் உள்ள ட்ரெண்ட் பாட்டை அன்று வெளியிட இருக்கிறார்களாம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

நாயகிகளாக ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த 2016ஆம் ஆண்டு பிறந்த தினம் அன்று தள்ளிப்போகாதே என்ற பாடலை வெளியிட்டார் சிம்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows