Exclusive காலா நஷ்டமில்லை; கன்பார்ம் செய்து ரஜினிக்கு நன்றி சொன்ன தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ஜீன் 7 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் உலகமெங்கும் வெளியானது.

தனுஷ் தயாரித்து இப்படத்தை ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இப்படம் மிகப்பெரிய தோல்வி எனவும், 40 கோடி நஷ்டத்தை தனுஷ் திருப்பி கொடுக்கவுள்ளதாக செய்திகள் நிறைய ஊடகங்களில் வெளியானது.

நம் தளத்தில் இது வெளியாகவில்லை. மாறாக காலா படக்குழு இதனை தெளிவுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதன்படி தனுஷின் தயாரிப்பு நிறுவனமாக வுண்டர்பார் பிலிம்ஸ் தனது ட்விட்டரில் பக்கத்தில்…

காலா திரைப்படம் நஷ்டம் என வருவது வதந்தி. அப்படம் எங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தை கொடுத்த ரஜினிக்கு நன்றி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Dhanush clarifies Kaala is successful and profitable project

Wunderbar Films‏Verified account @wunderbarfilms
We would like to dispel rumours run in few articles on #Kaala. Contrary to it, #Kaala is a successful and profitable project for Wunderbar Films and we thank Superstar for the opportunity given to us. We also thank the audience for the positive response given to the film.

சிவா இயக்கும் விஸ்வாசத்தில் அஜித் மகளும் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதில் நயன்தாரா டாக்டராக நடிக்கிறார். இவர்களுடன் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இமான் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தை 2019 பொங்கலுக்கு ரிலீஸ் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்-த்ரிஷாவுக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

Anika joins with Ajith in Viswasam movie

குறும்படங்கள் & திரைப்படங்களுக்கு *டீக்கடை சினிமா விருது* விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துபவர்களின் பேசுபொருள் அரசியலை விட சினிமாவே அதிகமாக இருக்கும். ஒவ்வொரு டீக்கடையிலும் எதிர்காலக் கனவுகளுடன் எத்தனையோ இளைஞர்கள் இன்றும் கூடி சினிமா பற்றிப் பேசுகிறார்கள் ; கனவுகளைப் பகிர்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட இளைஞர்கள் டீக்கடையோடு பேசிக் கலைந்து சென்று விடக் கூடாது. அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்ட வேண்டும் என்று கவலைப்பட்டு உதயமானதுதான் ‘ டீக்கடை சினிமா ‘ அமைப்பு.

இதன் தொடக்கப் புள்ளியை உதயகுமார் போட, கிருபாகரன், நிஷாந்த், விவேக் ஆகியோரும் இணைந்து கை கொடுக்கவே அது நால்வர் அணியாக உருவாகியிருக்கிறது. இவர்கள் இம்முயற்சியை முன்னெடுக்கவே இப்போது ‘டீக்கடை சினிமா ‘ திரைக்கனவு சுமந்த 1000 பேர் கொண்ட அமைப்பாக மாறியிருக்கிறது .

“கைதட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே “என்கிற உணர்வோடு சக கலைஞர்களை ஊக்குவிக்க முனைந்த இந்த அமைப்பினர் சென்ற ஆண்டு சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளைவழங்கினர், இவ்வாண்டு சிறந்த குறும்படங்களுக்கு மட்டுமல்ல சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கவுள்ளனர்.

முறைப்படி நடுவர்களை வைத்தே இப்படிப்பட்ட படங்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு என முப்பது விருதுகளை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப் படங்களாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’, “‘மாநகரம்’, ‘அறம் ‘, ‘அருவி’, ‘ஒரு கிடா யின் கருணை மனு. ‘, ‘குரங்கு பொம்மை’, ‘8 தோட்டாக்கள் ‘ ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களுக்கும் , குறும்படங்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வை R. G. எண்டர்டெயின்மென்ட், கிரிஷ் மீடியாவும் நிஷான் மீடியாவும் இணைந்து நடத்துகின்றன.

திரையுலகின் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கேற்கவுள்ள இவ்விழா வரும் 11. 7. 18 புதன் கிழமை சென்னை அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் உள்ள டைனஸ்டி ஹாலில் நடைபெறவுள்ளது.

Tea Kadai cinema awards event going to happen in Chennai

சினிமாவில் நடிக்க வருகிறார் சமூக போராளி டிராஃபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

80 வயது இளைஞரும் சமூக போராளியுமான டிராஃபிக் ராமசாமி வாழ்க்கையை படமாக்கினார் விக்கி என்ற இளைஞர்.

இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்ஏ. சந்திரசேகர் நடித்திருந்தார்.

இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தற்போது டிராஃபிக் ராமசாமியே ஒரு படத்தில் நேரிடையாக நடிக்கவுள்ளார்.

புது இயக்குநர் ஒருவர் சமூக பிரச்னையை மையமாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் டிராபிக் ராமசாமியை, தியாகியாக நடிக்கச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு அந்த படத்தின் சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

Traffic Ramasamy entry in Tamil cinema

பிரபுதேவா-நிவேதா கூட்டணியில் பாகுபலி வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுதேவா மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள யங் மங் சங் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு ஏ.சி.முகில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.

இதில் அவர் முதன்முறையாக போலீசாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் பிரபாகர் நடிக்கிறாராம்.

இவர் யார் தெரியுமா..? ராஜமவுலியின் பாகுபலி படத்தில் காளகேயா மொழியில் பேசும் வேற்று நாட்டு அரசனாக நடித்திருந்தாரே. அவரே தான்.

இந்த படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Baahubali Actor To Play The Villain For Prabhu Deva

பாரிஸில் இருந்து தாய்லாந்து பறக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியை இயக்கவுள்ளார் எஸ்.யு.அருண் குமார்.

இதில் விஜய் சேதுபதிடக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

‘சேதுபதி’ படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னாவே இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

இதுவரை இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

தென்காசியில் தொடங்கிய சூட்டிங் விரைவில் தாய்லாந்து எல்லையில் தொடங்கவுள்ளது.

அண்மையில்தான் ‘ஜுங்கா’ படத்திற்காக பாரிஸ் சென்று நடித்து கொடுத்தார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi going to Thailand for Arun Kumar project

More Articles
Follows