தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் வடசென்னை மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வளர்ந்து வருகிறது.

மேலும் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், வரலட்சுமி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வருகிறது ‘மாரி 2’.

இப்படப்பிடிப்பினை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

இப்படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது.

இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கவிருக்கிறது.

இதுகுறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.

அறம் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷை இயக்கும் கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து கோபி இயக்கிய படம் ‘அறம்’.

இப்படம் மிக பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து இப்படம் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று படக்குழு கூறியிருந்தது.

ஆனால் தற்போது நயன்தாரா பிசியாக உள்ளதால் இப்படம் சற்று தள்ளிப்போயுள்ளது.

இதனால் இடைப்பட்ட காலத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை கோபி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தின் 50 ஆண்டு கால தண்ணீர் பிரச்னையை சொல்லவரும் கேணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான்.

கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.

ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது.

இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.

“காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர்.

அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார் என மிகப்பெரிய பட்டாளமே இந்த கதைக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். “ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ்” சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் இணைந்து “கேணி” திரைப்படத்திற்காக பாடியிருக்கும் “அய்யா சாமி” பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

பெண் கொடுமைக்கு எதிரான படம் தமிழனானேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.

அதனை அன்றைய ஆதித்தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகுவான்? அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ’தமிழனானேன்’

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ‘தமிழனானேன்’. கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன், அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார்.

சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ராமையா இசை அமைத்துள்ளார்.படம் பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

“இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன.

படம் மூன்று வித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் போலத் தெரியும்.

இன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது.

மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை . கயிறுகள், பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள் தான்.

இப்படம் இம்மாதம் 23 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது ” என்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

ஏண்டா தலைல எண்ண வெக்கல படம் அடல்ட் ஒன்லி படமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’.

ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.

புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது.

இதை முன்னிட்டு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரகுமான் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தி பேசினார்.

20 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பாளர் யோகி, சுபா எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள்.

என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு படம் பண்ணனும் என சொல்லிட்டே இருப்பாங்க. நான் தான் சினிமா ரிஸ்க், வேணாம்னு சொல்லிட்டே இருந்தேன்.

பின் ஒரு நாள் ரெஹானா மேடம் வழிகாட்டுதலில் படத்தை துவங்கியதாக சொன்னார்கள். கதை ரொம்ப நல்லா இருந்துச்சி.

எனக்கும் திருப்தியாக இருந்தது. பாடல்களும், ஒரு சில காட்சிகளும் பார்த்தேன், சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோரையும் ஈர்க்கும் தலைப்பாக அமைந்துள்ளது.

ரெஹானாவின் இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. துருவங்கள் 16 படத்தை போலவே இதுவும் முழுக்க புதுமுகங்கள் நடித்த படமாக இருந்தாலும் அதே போலவே பெரிய வெற்றியை பெறும் என்றார் சிறப்பு விருந்தினர் நடிகர் ரகுமான்.

படத்தின் ட்ரைலர் மாதிரியே மொத்த படமும் ரசிகர்களை சிரிக்க வைக்கும். ரெஹானா மேடம் படத்துக்கு பெரிய பில்லர்.

தயாரிப்பாளர்கள் யோகி, சுபா இருவரும் நினைத்திருந்தால் பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் எங்களை நம்பி படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

புதுமுகமான எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம் என்றார் நாயகன் அசார்.

என் முதல் படத்திலிருந்தே மீடியா எனக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக தான் நினைத்து நடித்து வருகிறேன். அசார் ரொம்ப திறமையான நடிகர்.

ரெஹானா இசையில் வச்சி செய்றேன், அம்மா பாடல் என சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது புது அனுபவம். இந்த தலைப்பு பலரையும் படத்தை பற்றி பேச வைத்துள்ளது என்றார் நாயகி சஞ்சிதா ஷெட்டி.

நான் கனடா போனபோது ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க சுபா. ஒரு பட்ஜெட் கொடுத்தேன். சென்னை வந்தப்புறமும் அவங்க கேட்டுட்டே இருந்தாங்க. நானும் நிறைய பேரை பார்த்தேன்.

அதில் கிடைத்தவர் தான் விக்னேஷ் கார்த்திக். காமெடி படம் தான் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன், அவர் சொன்ன கதையும் ரொம்ப நல்லாவே இருந்தது.

அசார் எனக்கு முன்னாடியே அறிமுகமானவன், விக்னேஷ் கார்த்திக் கிட்ட சொன்னப்போ அவரும் அசார் என் நண்பன் தான், எனக்கு ஓகேன்னு சொன்னார்.

சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், ஈடன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க. காமெடிக்கு பஞ்சமில்லை என்றார் இணை தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளருமான ஏஆர் ரெஹானா.

விக்னேஷ் கார்த்திக், அசார், சஞ்சிதா ஷெட்டி மூணு பேரும் என் பிள்ளைகள் மாதிரி. முதல் தடவை விக்னேஷ் கார்த்திக் பார்த்தப்போ ரொம்ப சின்ன பையனா இருக்காரே, இவர் எப்படி படத்தை இயக்குவார்னு சந்தேகமா இருந்துச்சி.

முதல் நாள் ஷூட்டிங்கிலேயே எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். நாயகன் அசார் மாத்திட்டு வேற ஹீரோ புக் பண்ண நினைச்சேன், ஆனால் அசார் மிகவும் திறமையானவர் என்பதை நிரூபித்தார்.

சூது கவ்வும் நாயகி சஞ்சிதா ஷெட்டி தான் நாயகின்னு சொன்னதும் உடனே புக் பண்ண சொல்லிட்டேன் என்றார் தயாரிப்பாளர் சுபா தம்பி பிள்ளை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க. இந்த படத்தோட ட்ரைலரே படத்தை பத்தி சொல்லும்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாமே சிறப்பாகவே அமைஞ்சிருக்கு. அசார் ரொம்ப இயல்பான நடிகர். ட்ரைலர், பாடல்கள் பார்த்துட்டு சிம்பு சாரும், சந்தானம் சாரும் ஃபோன் பண்ணி அசாரை வாழ்த்துனாங்க. அவர்களுக்கு என் நன்றிகள் என்றார் சிங்கப்பூர் தீபன்.

சேஃபா ஒரு காமெடி படம் பண்ணலாம்னு தயாரிப்பாளர்கள் நினைக்குறப்ப, ஒரு வித்தியாசமான படத்தை பண்ணலாம்னு முன்வந்த தயாரிப்பாளர்களுக்கும், ரெஹானா மேடத்திற்கும் நன்றி.

கல்லூரிக்கு போகும் ஒரு நாயகனா அசார் கிடைச்சிருக்காரு. சஞ்சிதா ஷெட்டி ரொம்ப சின்சியரான நடிகை, ஒரு நாள் கூட அவரால் படம் தாமதமானது கிடையாது.

சிங்கப்பூர் தீபனுக்கு ஏன் பெரிய பிரேக் கிடைக்கலனு தெரில. இந்த படத்துல அவருக்கு நல்ல பேரு கிடைக்கும். கவிராஜ் என்ற உதவி இயக்குனர் சொன்ன தலைப்பு தான் இந்த ஏண்டா தலைல எண்ண வைக்கல.

பல பேருக்கு படத்தை கொண்டு போய் சேர்த்ததே இந்த தலைப்பு தான்னு சொல்லலாம். ஏண்டா தலைல எண்ணை வைக்கல லைன் மூலமாக தான் படம் ஆரம்பிக்கிறது என்றார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வம்சி தரன் முகுந்தன், எடிட்டர் சிஎஸ் பிரேம், தயாரிப்பாளர் யோகி தம்பி பிள்ளை, ஸ்டுடியோ 9 விஜித் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்புக்கு பதிலாக மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

சிம்புவின் திரை பயணத்தில் இப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது. அதில் நடிகர் மாதவன் நாயகனாக கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு இப்படத்தில் கமிட் ஆகாததுக்கு காரணம் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் என்று கூறப்படுகிறது.

கவுதம் மேனனின் இந்த முடிவு சிம்பு ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

More Articles
Follows