பாலியல் வன்முறைக்கு எதிரான டைட்டில் கார்ட் வேண்டும்..; விஜய் ஸ்ரீ வைக்கும் நியாயமான கோரிக்கை!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள்.

மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும்.

இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்”
என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம்.

தற்சமயம் நாட்டை கண்ணீரில் ஆழ்த்திய ஹாரித்துவார் சம்பவம் நம் தேசத்தின் மகள் கொடூராமாக தாக்கப்பட்டு தீயில் கருகிய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்

எங்கள் ”பொல்லாத உலகில் பயங்கர கேம்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில்
ஒரு சில கயவர்களால் பெண் ஒருவள் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், தொடர்ந்து அந்த கயவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கப்படுவதையும் படமாக்கியிருக்கிறோம்.

தாதா87 படத்தில் சாருஹாசன் பேசிய… “பெண்களை தொட்டால் கொளுத்துவேன்” என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பதை திரைப்பட வெற்றி பதிவு செய்தது. இன்று பல நாடுகளில் சட்டமானது.

பெண்களுக்கு ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனையும், சட்டமும் மட்டுமே அரணாக இருக்கும்.

தவறு இழைத்தவர்கள் மீது மத்திய அரசும் மாநில அரசும் இந்திய நீதித்துறையும் நிச்சயம் தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய, மாநில அரசு மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்ற எல்லா கோரிக்கைகளிலும் குரல் கொடுக்கும் தலைவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வை மத்திய செய்தி தொடர்பு அமைச்சகம் தணிக்கை குழுவினர் ஒருங்கிணைந்து, 2012 செப்டம்பர் 26ல் திரைப்பட “டைட்டில் கார்டில் வெகுஜன மக்கள் மத்தியில் ஒன்றுடன் கலந்த சினிமா மூலமாக விழிப்புணர்வை பதிய வைத்தார்கள்.

அதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையையும் பதிவிடுங்கள் என பொல்லாத உலகில் பயங்கர கேம் மற்றும் பவுடர் படத்தின் படக்குழுவினர் சார்பாக அனைவரும் ஒன்று கூடி வேண்டுகோள் வைக்கிறோம்.

இவ்வாறு டைரக்டர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

Dhadha 87 director Vijay Sri requests state and central government

‘இரண்டாம் குத்து’ சர்ச்சை.; கமல் படத்தை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..?? பாரதிராஜாவுக்கு சந்தோஷ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய ‘இரண்டாம் குத்து’ பட டீசர் வெளியானது.

இது தொடர்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்பட டீசருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

அதில்….

“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??

எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?

கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?.. என தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

இந்த செய்தியை காலையில் பார்த்தோம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

1981 ல் கமல், மாதவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தை எடுத்தீர்கள். அதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..? என கேள்வி கேட்டு டீ பீஸ் உடையில் மாதவி & கமல் இருக்கும் படங்களை தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

Irandam Kuthu director Santhosh reply to Bharathiraja

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின்

வணக்கம்.

சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது.

நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் சாதாரணமல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரமும்தான்… ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.

இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?

சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது?

நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.

கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??

எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?

கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?

இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது… நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா?

அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்.

சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்…? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி
பாரதிராஜா
08:10:2020

Director Bharathi Raja strongly opposes Irandam Kuthu film

மார்பகப் புற்றுநோயால் அவதிப்படும் ‘அங்காடித் தெரு’ சிந்து..; உதவும் உள்ளங்களுக்கு கோரிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எளிய மக்களின் பிரச்சினைகளை பேசிய “அங்காடி தெரு” திரைப்படம் மற்றும் பல பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்தவர் நடிகை சிந்து.

ஆரம்ப காலத்தில் இருந்து தன்னைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான எளிய மனிதர்களுக்கு, வறுமையில் வாடும் சக நடிகர் நடிகைகளுக்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட சிந்து, கொரோனா தொடக்க காலத்தில் பல ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, முக கவசம் போன்ற அடிப்படை பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவினார்.

இந்நிலையில் முன்பை போல் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு கஷ்ட நிலைக்குச் சென்ற சிந்து, தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதையும், அதை குணப்படுத்த முடியும் என்ற போதிலும் சிகிச்சைக்கான போதிய பண வசதி இல்லை என்பதையும் கூறி பொதுமக்களிடமும் சக நடிகர் நடிகைகளிடமும் உதவி கோரியிருந்தார்.

அனைத்து இந்திய இந்து மக்கள் பேரவை தலைவர் பாபா ராம்தாஸ் ஜி தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தன்னை சந்தித்து நலம் விசாரித்து சிகிச்சைக்கு 25000 ரூபாய் நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி கூறிவிட்டு, அடுத்தவருக்கு கஷ்டம் என்றால் தன்னுடைய நலனை பொருட்படுத்தாமல் ஓடி ஓடி உதவி செய்யும் கலைஞர்களை கண்ணீர் சிந்த விடாமல் சக சின்னத்திரை நடிகர்-நடிகைகளும் முன்னணி வெள்ளித்திரை நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நற்குணம் கொண்ட மனிதரை காப்பாற்ற முன்வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

Angadi theru sindhu requests top stars

உங்க பிள்ளைய ஸ்கூல் சேர்க்க போறீங்களா.? அப்போ அவுங்களுக்கு ‘ஆதார் கார்டு’ அவசியம் எடுத்துடுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு பிரச்னை மெல்ல மெல்ல குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

எனவே மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்புகளை ஒவ்வொரு பள்ளிகளும் வெளியிட தொடங்கியுள்ளனர்.

மாணவர் சேர்க்கைநின் போது, பல பள்ளிகள் குழந்தையின் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வலியுறுத்த தொடங்கியுள்ளன.

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எந்த பயோமெட்ரிஸ் தேவையில்லையாம்.

ஆனாலும் மக்கள்தொகை தகவல் மற்றும் முக புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தைகளின் யுஐடி அவர்களின் பெற்றோரின் யுஐடியுடன் இணைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக்ஸ் முறை கடைப்பிடிக்கப்படும்.

ஆதார் அட்டை பெற்ற ஒரு குழந்தைக்கு 5 மற்றும் 15 வயதாகும் போது, அவர்களின் பத்து விரல்கள், கருவிழி & முக புகைப்படங்களின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க… குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை விவரங்கள், முகவரி மற்றும் அடையாளச் சான்றுகள் தேவை.

Mandatory submission of Aadhar card details for all students

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுடன் இணைந்த ‘பிக்பாஸ்-4’ பாக்ஸர்.: யாருன்னு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் சோம் சேகர் இந்திய விமானத்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது. அட்மின் அந்த படத்தை போஸ்ட் செய்திருக்கலாம்.

சோம் சேகர் குத்துச் சண்டை வீரர். மேலும் மாடலிங்கும் செய்து விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

Bigg Boss 4 tamil som sekar is part of soorarai pottru

More Articles
Follows