தான் அதிர்ஷ்டசாலி என்பதை ஓபிஎஸ் மீண்டும் நிரூபித்திருக்கிறார்… ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா தற்போது சென்னை, அடையாறில் நடைபெற்று வருகிறது.

இந்த மண்டபம் ரூ.2.80 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு வந்த ரஜினிக்கு ஓ.பி.எஸ் பொன்னாடை போர்த்தினார். கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தினார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது….

நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜிகணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி.

என்னை இந்த விழாவுக்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினருக்கு நன்றி.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி. அவர் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதை இங்கே மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைக்கும் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

சிவாஜி ஒரு நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படவில்லை.

பல சுதந்திர போராட்ட வீரர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் நடிகர் திலகம்.

பல புராணக் கதைகளில் உள்ள கேரக்டர்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் என்பதால்தான் இந்த மணிமண்டபம்” என்று பேசினார்.

Deputy CM OPanneer Selvam is lucky person says Rajinikanth

 

மீண்டும் சினிமா மீது வரிவிதிப்பு; ஏற்கமுடியாது என விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது.

இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

அதன் முடிவில் வேலை நிறுத்தத்தை  தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மொழி படங்களுக்கு 10%, மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி தமிழக அரசு விதித்துள்ளது.

மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர தமிழ் திரையுலகினர் முயற்சித்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியதாவது…

அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது.

அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது . விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.

100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல. திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா?? அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்த வரியை ஏற்றுக்கொள்கிறோம்.

வங்கிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. ஏற்கனவே, அதிக வட்டி விகிதத்துக்கு பணத்தை வாங்கி படங்கள் தயாரிக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அரசு அமைச்சக அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர் உட்பட அனைவரிடமும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

நாளை சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல்ஹாசன் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் பங்கேற்று இருந்தால் இந்த மணிமண்டப திறப்பு விழா சிறப்பாக இருந்திருக்கும்.

அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பனி முடிவுக்கு வரும் அதில் MGR மற்றும் சிவாஜி கணேசன் சிலைகள் வைக்கப்படும்.

அதில் MGR மற்றும் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறும்” என்று பேசினார் விஷால்.

Vishal refuse to accept Local entertainment tax on Tamil Cinema

போலீஸ் யூனிபார்மில் பரத்; தீபாவளிக்கு டைட்டில் பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.

இவர் நாளைய இயக்குநர் சீஸன்=3 இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா.

இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசும் போது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.’ என்றார்.

‘இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை தீபாவளியன்று வெளியிடப்படும் ’ என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான M.S. சிவநேசன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bharath as a cop for the first time in a suspense thriller movie

பெண்களை மதிப்பதில் ரஜினி-அஜித்தை தட்டிக்க ஆளே இல்லை… நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோவுக்காக மட்டும்தான் படம் பார்ப்பீங்களா? ஹீரோயினுக்காக பார்க்க மாட்டீங்களா? என்று கேட்காமல் தன் நடிப்பால் பார்க்க வைத்தவர் நயன்தாரா.

இவரது நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் இவரது சமீபத்திய டிவி பேட்டியில் அஜித்தை பற்றி கேட்டுள்ளனர்.

அவர் அதற்கு பதிலளிக்கும்போது ரஜினியை சேர்த்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது…

அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்த்தே இல்லை. சூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார்.

அவரும் சரி ரஜினி சாரும் சரி. பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

நம் அருகே பெண்கள் வந்தால் இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார்கள்.

அந்த விஷயத்தில் அவர்களை தட்டிக்க ஆளே இல்லை. அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ளது’ என்று பேசினார்.

Rajini and Ajith are Topper in giving respect to ladies says Nayanthara

டிஆர்-தன்ஷிகா மோதல் குறித்து வெங்கட்பிரபு-கிருஷ்ணா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை என்பதால் விழித்திரு’ பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகாவை தன் வார்த்தைகளால் கடுமையாக தாக்கினார் டி.ராஜேந்தர்.

அப்போது டிஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் அவரை அசிங்கப்படுத்தியதால் தன்ஷிகா அழத் தொடங்கினார் என்பதை பார்த்தோம்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சர்ச்சையாக உருவாக்கியுள்ளது.

இதனால் சீனியர் நடிகரான டிஆருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட வெங்கட்பிரபு, கிருஷ்ணா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வெங்கட்பிரபு தெரிவித்திருப்பதாவது…

வயதில் பெரியவர்களுக்கு எப்போதும் மரியாதை தர வேண்டும் என்று தான் என்னை வளர்த்திருக்கிறார்கள். டி.ஆர் அவரது எண்ணங்களை ‘விழித்திரு’ விழாவில் பேசியிருந்தார்.

முதலில் நாங்கள் கிண்டல் என நினைத்த ஒன்று போகப் போக தீவிரமடைந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.

தன்ஷிகா துறைக்குப் புதியவர். பொது மேடையில் எப்படி பேச வேண்டும் என்ற அனுபவமற்றவர். ஒழுங்காக வழிநடத்துவது எங்களைப் போன்ற துறையில் மூத்தவர்களின் பொறுப்பு என நினைக்கிறேன்.

வழிகாட்டுதலே கடவுளின் செயலும். யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். காயப்படுத்துவதால் நமக்கு எதுவும் லாபமில்லை. இந்தக் கருத்தை நான் எப்போதும் போல மரியாதையுடன் வெளிப்படுத்துகிறேன்.

இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார்.

மேலும் கிருஷ்ணாவும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது…

சுயமரியாதை இருப்பவனாக, ஒழுக்கமாக நடப்பவனாக, கடந்த சில வருடங்களாக ஒரு பெண் குழந்தையின் கல்விக்கு உதவுபவனாக நான் இருந்து வருகிறேன். மேடையில் எனது அமைதியை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

அனைவரும் சமம் என்பதை மதிப்பவன் நான். முதலில் ஒரு நகைச்சுவையாக ஆரம்பித்தது சட்டென தீவிர வசையாக மாறி அவமதிப்பாகிவிட்டது. எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் குறித்து நாங்கள் யாரும் எதுவும் செய்திருக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரையில் டி.ஆர் போல ஒரு மூத்த நடிகர் பேசுவதை மறிப்பது சரியான மேடை நாகரீகம் ஆகாது. அந்த மேடையில் இருந்தவர்கள் அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தன்ஷிகாவை பற்றி சொன்ன அவமரியாதையான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது. ஆண், பெண் என யாருக்கு நேர்ந்திருந்தாலும் அது அவமரியாதையே.

அந்த நேரத்தில் யாராவது அவருக்கு ஆட்சேபணை தெரிவித்திருந்தால், ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தேவையில்லாத குழப்பமான சூழலும், விவாதமும் வந்திருக்கும்.

துறையில் மூத்தவர்கள் இளையவர்களை மன்னித்து அவர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்புகிறேன். நாம்தான் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியும்.

இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்

Venkat Prabhu and Krishna clarifies TR and Dhanshika issue at Vizhithiru Press Meet

இன்று பிக்பாஸ் பைனலில் கலந்து கொள்ளும் ஓவியா; வின்னர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 99 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

தற்போது இந்த போட்டியில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகிய நான்கு ஆண்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்களில் யார் வெற்றியாளர் என்பது இன்று (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் தெரியவர உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேற்றப்பட்ட ஓவியா, பரணி, காயத்ரி ரகுராம், ஸ்ரீ, ஜூலி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவருமே இறுதிப் போட்டியின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இதில் ஓவியா இவரது முன்னாள் காதலர் ஆரவ்வை சந்திப்பார் என கூறப்படுகிறது.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்றையு நிகழ்ச்சியில் வெளியிட உள்ளனர்.

Oviya participating in Bigg Boss 100th day show Who will be the winner

More Articles
Follows