ரஜினி குடித்த தேநீருக்கும் பெயர் வைத்த டார்ஜிலிங் ரிசார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றி உள்ள மலை பிரதேசங்களில் நடந்து வருகிறது.

30 நாட்கள் இந்த படத்துக்காக தனது தேதிகளை கொடுத்து இருக்கிறார் ரஜினி.

இந்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்.

இந்த விடுதியில் உள்ள டைரக்டர்ஸ் பங்களா என்னும் இல்லத்தில் தங்கினார்.

ரஜினி தங்கியதால் இந்த விடுதி பிரபலமாக மாறிவிட்டது. அவர் தங்கியதை நினைவு கூறும் வகையில் அந்த இல்லத்தின் பெயரையே ரஜினிகாந்த் வில்லா #3 என்று மாற்றி இருக்கிறார் விடுதியின் அதிபர்.

இது குறித்து விடுதியின் இயக்குனர் மேகுல் பரேக் கூறும்போது…

‘சூப்பர் ஸ்டார் எங்கள் விடுதியில் தங்கியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

அவரது நினைவாக ஒரு மரம் நட்டு, அதற்கு புதிதாக வண்ணம் பூச உள்ளோம்.

இனி அவர் தங்கிய அந்த விடுதி இல்லம் ரஜினிகாந்த் பெயரிலேயே அழைக்கப்படும்’ என்று கூறி இருக்கிறார்.

ரஜினி தங்கி இருந்த நாட்களில் பருகிய தேநீருக்கு தலைவா ஸ்பெ‌ஷல் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

அந்த தேநீர், விடுதியின் வரவேற்பறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டிரேயில் வைக்கப்பட்டுள்ளது.

Big Breaking : ஹிந்தி சொல்லில் மத்திய அரசை குறிக்கும் விஜய் 62 டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நாளை ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை ஜுன் 21ல் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இப்படத்திற்கு எஸ் -S என்று தொடங்கி ஆர் -R எழுத்தில் ஹிந்தி சொல்லில் டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த சொல் மத்திய அரசை குறிக்கும் என சொல்லப்படுகிறது.

டிராஃபிக் ராமசாமி படத்திற்கு இசையமைத்தது பெருமை..: பாலமுரளி பாலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு அறிக்கை…

நான் “பிச்சாங்கை” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை, எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இதுவரை பீச்சாங்கை, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்கள் எனது இசையில் வெளியாகியுள்ளது.

நாளை (22ம் தேதி, ஜூன் மாதம்) கீரின் சிக்னல் தயாரிப்பில், விக்கி இயக்கத்தில், பிரபல இயக்குனர் S.A.சந்திரசேகர் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “டிராபிக் ராமசாமி” படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

“டிராபிக் ராமசாமி” படத்திற்கு இசையமைத்துள்ளதை மிகவும் பெருமைக்குறிய விஷயமாக கருதும் அதே வேளையில் எனது மனமார்ந்த நன்றியை “டிராபிக் ராமசாமி” படக்குழுவினருக்கு தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆர்யா நடிக்கும் “கஜினிகாந்த்” மற்றும் “பல்லு படாம பாத்துக்க”, மீடியா மார்ஷல் தயாரிப்பில் அருள்.S இயக்கத்தில் உருவாகும் “தட்றோம் தூக்குறோம்” ஆகிய படங்களுக்கு நான் இசையமைத்துள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இத்தருணத்தில் எனது இசை பயணத்திற்கு முழுபலமாய் விளங்கும் பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிக்பாஸ் வீட்டில் ஜூலி நிலைமையில் பாலாஜி ஒய்ஃப் நித்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 கடந்த 17 – ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், பொன்னம்பலம் , பாலாஜி, டேனியல், சென்ராயன், மும்தாஜ் உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் , இரண்டாவது நாளிலிருந்தே சிறு சிறு பிரச்சனைகள் வரத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் சமையல் செய்வதில் தொடங்கிய பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது.

நடிகை மும்தாஜ், மற்றும் பாலாஜியின் மனைவி நித்யா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மும்தாஜ் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது போல் தனது மனநிலை இருப்பதாக சக போட்டியாளர்களிடம் கதறியபடி தெரிவிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இதேபோல நடிகர் பாலாஜி மறைமுகமாக தனது மனைவி குறித்து திட்டுவதை போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் நடந்த களேபரங்களை ரசித்த பார்வையாளர்கள் இந்த முறையும் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகளை எதிர்பார்ப்புடனேயே பார்த்து வருகின்றனர்.

கடந்த முறை ஜூலியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தது போலவே இந்த முறை நித்யாவை அனைத்து போட்டியாளர்களும் ஓரங்கட்டுவார்கள் என்றே கருதப்படுகிறது

ரஜினிகாந்த் படத்தில் தேசிய விருது பெற்ற 2 கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் லால் நடித்த ‘புலி முருகன்’ படத்தில் இடம் பெற்ற ஸ்டெண்ட் காட்சிகள்
பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தளவுக்கு தனது திறமைகளை காட்டி இருந்தார் ஸ்டெண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.

அவருக்கு அந்தப் படத்தி்ன் சண்டைகளை வடிவமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ரஜினிகாந்த் படத்திற்கு சண்டை பயிற்சியாளரக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே வெளியான ரஜினிகாந்தின் ‘எந்திரன்’,‘சிவாஜி’,‘கோச்சடையான்’ என சில படங்களுக்கு ஸ்டெண்ட் மாஸ்டராக பீட்டர் பணியாற்றியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் தேசிய விருது வாங்கிய கேமிராமேன் திருநாவுக்கரசு ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அவருடன் மேலும் ஒரு தேசிய விருது பெற்றவரான பீட்டர் ஹெய்ன்
இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் டிரெஸ் போட வெட்கப்படுகிறேன் என பேசிய நடிகை நிலானி கைது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக நிலானி கருத்து தெரிவித்தார்.

சின்னத்திரை நடிகையான நிலானி படப்பிடிப்பின் போது வெளியிட்ட அந்த வீடியோவில்,

“நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 13 பேரை கொன்றுள்ளனர்.

அமைதியான வழியில் போராடுகிறோம். நான் சூட்டிங்கில் இருக்கிறேன். இல்லை என்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன்.

நான் இந்தக் காவல்துறை உடையை அணிந்திருப்பதற்கு வெட்கப்படுறேன். உடம்பு கூசுது.

இந்தப் போராட்டம் இதோடு முடியப்போவதில்லை. இனிமேல்தான் ஆரம்பம். தமிழர்கள் தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர்.

அதுதான் அவர்களின் திட்டம். இலங்கை போல் தமிழகத்திலும் தமிழர்களை கொல்ல திட்டுமிட்டுவிட்டனர்.
அரசு வேலைகளை புறக்கணியுங்கள். விவசாயிகளையும், காவலர்களையும் அரசு மோத வைத்துள்ளது. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதுதொடர்பாக நிலானி மீது வடபழனி காவல்நிலையத்தில் காவல் உடை அணிந்து மோசடி செய்தல்(419), அவதூறு பரப்புதல்(500), கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுதல்(153) உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று நடிகை நிலானியை கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலானியை வடபழனி போலீசார் கைது செய்தனர்.

More Articles
Follows