`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி.

திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான லலிதா ஷோபி அவர்கள், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், தளபதி விஜய் நடித்த பிகில், சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், ஜோதிகா நடித்த 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களிலும் மேலும் பல பிறமொழி படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர் சமீபத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. நரணிபுழா ஷானவாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இப்படத்தில் பணியாற்றியது தனக்கு மிகவும் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார் நடன இயக்குனர் லலிதா ஷோபி.

ரூ. 3 லட்சம் செலவில் கோல்ட் மாஸ்க்..; இது கொரோனாவுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

இதனால் உலகளவில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது.

இந்த கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க பல வழிமுறைகளை அரசாங்கம் சொல்லி வருகிறது.

அதில் முக்கியமாக முக கவசம் அணிய வேண்டும் என்பது தான்.

இதனால் அனைவரும் மாஸ்க் அணிந்தபடியே தங்களின் வேலைகளை கவனித்து வருகின்றனர்.

ஒரு சிலர் கர்ச்சீப்பை, துப்பட்டாவை முக கவசமாக அணிந்து செல்கின்றனர்.

சிலர் விலை உயர்ந்த மாஸ்க்குகளை வாங்கி அணிகின்றனர்.

இந்த நிலையில் பூனேவில் ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தில் மாஸ்க் செய்து அதனை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார்.

இந்த கோல்ட் மாஸ்கின் மதிப்பு கிட்டதட்ட ரூ. 3 லட்சம் என சொல்லப்படுகிறது. (தங்க விலை இன்றைய நிலவரப்படி..ஹி..ஹிஹி)

இந்த மாஸ்கில் மூச்சு விடுவதற்காக சின்ன சின்ன ஓட்டைகள் வைத்து டிசைன் செய்துள்ளனர்.

இது கொரோனா வராமல் தடுக்குமா? என தெரியாது. ஆனால் இதை அணிவதில் எந்த பிரச்சனையும் இல்லை என அவர் சொல்கிறார்.

மாஸ்க் மட்டுமில்லாமல் அவரின் கழுத்தில் பெரிய செயின், கையில் அனைத்து விரல்களில் மோதிரமும் உள்ளது. (படத்தை பார்க்கவும்.)

A Pune man wearing Gold Mask worth Rs 3 lakhs

விஷால் அலுவலகத்தில் அக்கௌண்டன்ட் ரம்யா ரூ. 45 லட்சம் மோசடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் சென்னை சாலிகிராமத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி. ரம்யா என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில்…

கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்துள்ளது.

எனவே ஊழியர்களை சோதனை செய்தபோது கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து தனது கணவரான தியாகராஜன் என்பவரின் பர்சனல் வங்கி கணக்கிற்கும், அவர்களது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் சிறுக சிறுக ரூபாய் 45 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

இந்த மோசடி செய்த கணக்காளர் ரம்யாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமலின் ‘குலசாமி’ படத்தில் வசனம் எழுதி நடிக்கும் விஜய்சேதுபதி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சண்டக்காரி, என் பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, கன்னிராசி, லக்கி உள்ளிட்ட படங்கள் நடிகர் விமல் கை வசம் உள்ளது.

இதில் கன்னிராசி படம் எப்போது திரைக்கு வரும் என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் குலசாமி என்ற படத்தில் நடிக்கவுள்ளார் விமல்.

இதில் திரைக்கதை, வசனம் எழுதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் வெளியாகவில்லை.

போலீஸ் மீது மக்கள் புகார்; அதிமுக திமுக கட்சிகளை அகற்ற வேண்டும் என கமல் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு சம்பந்தபட்ட காவலர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இதற்கு சாட்சியாக இருந்த போலீஸ் ரேவதீக்கு போலீசாரே பாதுகாப்பு கொடுக்கும் நிலையையும் ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தியை தொடர்ந்து பல புகார்கள் போலீஸ் மீது வருகின்றது. பொய் வழக்கு போடுவது, விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட புகார்கள் தினம் தினம் வருவதால் உயர்நீதி மன்றமே தாமாக வந்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் நடிகரும் மநீம கட்சியின் தலைவருமாக கமல்ஹாசன் தன் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது.

சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.

என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் டிக் டாக்-க்கு தடை; ரூ. 45000 கோடி வருவாய் இழப்பு என சீன ஊடகம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ஜூன் 15-ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் இருநாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர்.

சில தினங்களில் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா அரசு கண்டனம் தெரிவித்தும் உள்ளது.

இந்த நிலையில், சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ. 45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More Articles
Follows