தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் சில மாதங்களுக்கு முன்னர் ராஜராஜன் சோழன் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
எனவே இதனையடுத்து திருப்பனந்தாள் போலீசார், கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, பா.ரஞ்சித் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பா.ரஞ்சித் 15 நாட்களுக்குள் கும்பகோணம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இருப்பவர் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரானார்.
பா.ரஞ்சித் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி கும்பகோணம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
