சீயான் விக்ரம் பிறந்த நாளில் ‘கோப்ரா’ டீசர் வெளியாகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ’கோப்ரா’,

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கோப்ரா பட பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே இப்பட ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 17 அன்று விக்ரம் தன் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அன்று கோப்ரா பட டீசர் வெளியாகுமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் டீசரை தற்போது வெளியிட வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு விஜயகாந்த் உதவி; கேப்டன் மனசு கோல்டுயா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு பக்கம் தீவிர சிகிச்சைகள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் ரயில்வே பெட்டிகளை சிகிச்சை வார்டுகளாக மாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பெரிய உதவியை செய்ய முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள்‌ எடுத்து வரும்‌ நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது.

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்‌ வகையில்‌, ஆண்டாள்‌ அழகர்‌ பொறியியல்‌ கல்லூரியையும்‌, சென்னையில்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும்‌ தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்‌ என கேட்டு கொள்கிறேன்‌.

கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில்‌ வசிக்கும்‌ தேமுதிக நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ அனைவரும்‌ அத்தியாவசியப்‌ பொருட்களான உணவு காய்கறி, உடை, மருந்து, முககவசம்‌ உள்ளிட்ட நிவாரணப்‌ பொருட்களை வழங்க வேண்டும்‌.

தூய்மை பணியாளர்களுக்கும்‌, தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்‌.

ஊரடங்கு உத்தரவால்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர்‌ ஆட்டோ ஓட்டுனர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ மற்றும்‌ வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்‌ தினக்கூலி தொழிலாளர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ தங்களால்‌ இயன்ற உதவியை செய்ய வேண்டும்‌.

இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Captain Vijayakanth offers his places for Corona treatment

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல் வாய்ப்பை வழங்கிய எம்.கே.அர்ஜுனன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

50 ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எம்.கே.அர்ஜுனன்.

500-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதாவது சுமார் 200 படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவரின் இசையில் தான் முதன்முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடல் பாடினார்.

மேடை நாடகங்களிலும் இசைப் பணியாற்றியுள்ளார் இவர்.

இவருக்கு 2017-ம் ஆண்டு பயானகம் என்ற திரைப்படத்துக்காக கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.

அதே போல் 1981-ம் ஆண்டு எம்.கே.அர்ஜுனன் இசையமைத்த ‘அடிமச்சங்களா’ என்ற மலையாளப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் முதலில் கீ போர்டு வாசித்தார்.

தனக்கு முதல் வாய்ப்பு வழங்கியவர் என்பதால் எம்.கே.அர்ஜுனன் மீது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி மரியாதை உண்டு.

இந்த நிலையல் வயது மூப்பு காரணமாக இன்று கொச்சியில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.

எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Veteran Malayalam Music Composer MK Arjunan Passed Away

இவ்ளோ நாள் பாசிட்டிவ்.. இப்போ நெகட்டிவ்..; கனிகாவின் கொரோனா சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து இந்தியா (லக்னோ) வந்தார்.

இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் 2 வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.

ஆனால் கனிகா இந்த உத்தரவை பின்பற்றாமல் சில நிகழ்ச்சிகளிலும், விருந்துகளிலும் கலந்து கொண்டார்.

இதனையறிந்த அரசு பாடகி கனிகா கபூருக்கு 4 முறை ரத்த சோதனை செய்தனர்.

இதில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் விதத்தில் பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளிவந்தது.

இதனிடையே 5-வது மற்றும் 6-வது சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று சோதனை முடிவுகள் வந்துள்ளது.

தற்போது கனிகா கபூர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

Kanika Kapoor tests negative after 5th Covid 19 test

சேரன் & விஜய்சேதுபதி இணையும் ‘தவமாய் தவமிருந்து பார்ட் 2’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராஃப், வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் சேரன்.

அதன்பின்னர் இவரே படங்களில் நடிக்கவும் செய்தார்.

அண்மையில் வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கி அதிலும் நடித்திருந்தார்.

இதனிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் சேரன்.

அந்நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியை வைத்து விரைவில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார் சேரன்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்காக தான் எழுதிய கதை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி
அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்.”

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார் சேரன்.

இந்த பதிவால் இது தவமாய் தவமிருந்து படத்தின் 2ஆம் பாகமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Cherans movie with Vijay Sethupathi will be about siblings

கொரோனா & முட்டாள்தனம்.. இரண்டிலிருந்து மக்கள் விடுபட யுவன் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகில் உள்ள பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போது கொரேனா வைரஸ் தன் தாக்குதலை இந்தியாவிலும் தொடர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இதுவரை இரண்டு வாரங்களை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி கொரோனா இருளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை பலர் செய்திருந்தனர். சிலர் தெருக்களில் கூடி தீபாவளி போல பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

ஒன்று கொரொனா, இரண்டு முட்டாள்தனம்… இந்த இரண்டில் இருந்து இந்தியா விடுப்பட வேண்டும், என்று கூறி யாரையே மறைமுகமாக தாக்கியுள்ளார்.

Yuvan slams Stupidity in Corona lighting 9 PM 9 Mins

More Articles
Follows