தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.
இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது. இதனையடுத்து பல படங்களை பிரம்மாண்டமாக தயாரித்தார் குஞ்சுமோன்.
கிட்டத்தட்ட 15 – 18 வருடங்களாக தயாரிப்பை வீட்டு விலகியிருந்த குஞ்சுமோன் தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் முப்பது வருடங்களுக்குப் பிறகு ‘ஜென்டில்மேன் 2’ படத்தை எடுக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்
ஆனால் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் இப்படத்தை இயக்கவில்லை. அவருக்கு பதில் ஏ.கோகுல் கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்த மரகதமணி என்கிற கீரவாணி தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இதில் நாயகியாக ஜூனியர் நயன்தாரா என்றழைக்கப்படும் நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்க உள்ளதாக அறிவித்தனர்.
மேலும் முக்கிய வேடத்தில் ‘ஜீனியஸ்’ பட நாயகி ப்ரியாலால் நடிக்கிறார்.
ஆனால் நாயகன் யார்? என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக சேத்தன் சீனு எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
