போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை பிரதைனி சர்வா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு மாடல் நடிகையும் பிறப்பிலேயே நடிகையாக இருப்பதில்லை, ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே மிகச்சிறந்த நடிகையாக மாறும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இத்தனை ஆண்டுகளில் அத்தகைய அரிதான மாடல் நடிகைகள் திரை வாழ்வில் சாதித்து, தங்கள் இடத்தை நிறுவுவதை நாம் பார்த்திருக்கிறோம். லென்ஸ், ஸ்பாட்லைட்ஸ் என புகழ் வெளிச்சத்திலேயே இருந்த, மிகவும் கொண்டாடப்பட்ட மாடல் பிரதைனி சர்வா, ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் நடிகையாக தனது பயணத்தை தொடங்குகிறார். தனித்துவமான கதை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கே.ஆர். சந்துரு. ஏற்கனவே குறும்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்ற தீரஜ் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து நாயகி பிரதைனி சர்வா கூறும்போது, “தனிப்பட்ட முறையில், திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்களை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவை பார்வையாளர்களை ஊக்குவிக்கும் அல்லது உற்சாகப்படுத்தும். நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என்பதை நான் நம்புகிறேன். இயக்குனர் சந்துரு எனக்கு கதையையும், என் கதாபாத்திரத்தையும் விளக்கிய போது, என் கதாபாத்திரம் பிருந்தாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. வெறுமனே என் கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது. இயக்குனர் சந்துருவை பாராட்டும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை, ஆனால் கே.ஆர்.சந்துரு உண்மையில் திறமை வாய்ந்த இயக்குனர், அவரது திறமையை திரையுலகம் கண்டிப்பாக புகழும்” என்றார்.

போதை ஏறி புத்தி மாறி திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் உண்டு. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கேபி இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும், சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

அமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்படவிழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” தேர்வாகியுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்ப்ட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்; கடுப்பான ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசியல் எப்படி இருக்கிறது? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். யாராவது நல்லவர் ஒருவர் வந்து தமிழகத்தை காப்பாற்ற மாற்றாரா? என அனைவரும் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்கள்.. தலைவா…. வா.. நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டார்.

பொதுவாக திரையுலகினர் ரஜினியை தலைவா என அழைப்பார்கள். எனவே அவர் ரஜினியைத்தான் குறிப்பிடுகிறார் என நினைத்தனர்.

ரஜினி ரசிகர்களும் அவ்வாறே நினைத்து உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு தலைவா என்பதை அஜித்தை குறிப்பதாக சுசீந்திரன் பதிவிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகினர்.

அந்த பதிவில் “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன்.

இது தான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு…. உங்களுக்காக காத்திருக்கும், பலகோடி மக்களில் நானும் ஒருவன்” என்று தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2017-ம் ஆண்டு “சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு, நான் அளித்த பதில் கமல் சார், அஜித் சார் வந்தா நல்லா இருக்கும்” என்று சுசீந்திரன் கூறியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால் அரசியலே வேண்டாம். அஜித்தே போதும என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏனென்றால் 2 மாதங்களுக்கு முன் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என அஜித் அறிக்கை விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Suseenthiran invites Ajith to enter into Politics

இந்தியாவிலேயே இந்த வார சிறந்த படமாக ‘நெடுநல்வாடை’ தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பலகோடிகளில் சம்பளம் வாங்குகிற டாப் ஸ்டார்களின் படங்களே வசூலுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும் சூழலில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின் சிறந்த படமாக தேர்வு செய்து வெளியிடுகிறது பைக்கர்.காம் (pycker.com) எனும் இணைய தளம்.

இந்த வாரம், தெலுங்கில் 5 படங்களும் (வேர் ஸ் த வேங்கடலட்சுமி, ஜஸ்ஸி, பிலால்பூர் போலிஸ் ஸ்டேஷன், மவுனமே இஷ்டம், வினரா சோதரா வீர குமாரா), இந்தியில் மேரே பயாரே பிரைம் மிநிஸ்ட்டர் மற்றும் போட்டோகிராப் உட்பட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் வெளியானபோதும், இந்நிறுவனம் தமிழ் படமான ’நெடுநல்வாடை’யை இவ்வாரத்தின் மிகச்சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழில் சமீபத்தில் வந்த படங்களில் அதிகபட்சமாக இந்தப் படத்துக்கு 3.7 ரேட்டிங் கொடுத்துள்ள இந்தத் தளம் இப்படத்தையும் அதில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள பூ ராமுவையும் பெரிதும் பாராட்டி உள்ளது.

இந்த வெற்றிச்செய்தியால் பூரித்துப்போயுள்ள அவரது நண்பர்களான 50 தயாரிப்பாளர்களும் இயக்குநர் செல்வக்கண்ணனுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தங்களது வாட்ஸ் அப் பக்கத்தில் பரபரப்பாக விவாதித்து வருகிறார்களாம். சினிமாவில் போட்ட பணம் திரும்பிவருவதென்றால் சும்மாவா?

Pycker website selected Nedunalvaadai as best movie in this week

இசையோடு மொழி உச்சரிப்பும் அமைந்தால்தான் அழகு.. : இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைக்கு தேசங்கள் மாநிலங்கள் என்ற பேதம் கிடையாது. இசையால் எந்த தேசத்தில் இருக்கும் இதயங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியும். அப்படியான இசையால் பலரையும் கவர்ந்திழுத்த கனடா இசைக்கலைஞர்கள் சப்தஸ்வரங்கள் 2 என்ற இசை ஆல்பத்தை வெளியீட்டார்கள்.

கனடாவில் யுனிவர்செல் வோக்கல் அமைப்பை நிறுவி தமிழ் கலைஞர்களை ஊக்குவித்து வருபவர் ரூபன்ராம். யுனிவர்செல் வோக்கலின் இந்திய ஒருங்கிணைப்பாளர் துஷ்யந்தன் மற்றும் பாடகர் மகாலிங்கம் விழாவிற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்தனர்.

இந்த விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் டி.இமான், தினா, பாடலாசிரியர் அருண்பாரதி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் இசை அமைப்பாளர் இமான் பேசியதாவது..

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் யுனிவர்செல் வோக்கல் டீமிக்கு எனது வாழ்த்துகள். கனடாவில் நான் இரண்டு இசை ஆல்பம் பண்ணியிருக்கிறேன். கனடா எனக்கு நிறைய கெளரவம் கொடுத்திருக்கிறது.

தமிழ் இருக்கை அமைப்பிற்கான அம்பாசிடராக இருக்கும் பெருமையையும் பெற்றிருக்கிறேன். அங்குள்ள திறைமையாளர்கள் இங்குள்ளவர்களோடு இணைந்து இப்படி ஒரு ஆல்பத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுபோல் இன்னும் நிறைய ஆல்பங்கள் அவர்கள் பண்ண வேண்டும்.

மேலும் வேறலெவல் விசயங்கள் நிறைய அவர்கள் செய்யவேண்டும். இந்தவிழா சாதாரண இசை ஆல்ப வெளியீட்டு விழா போல் அல்ல. ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போன்று இருந்தது.

இந்தக் குழந்தைகள் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும். அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக இருந்தது. இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு” என்று மனதார வாழ்த்தினார்.

விழாவில் இசை அமைப்பாளர் தீனா பேசியதாவது..

“முதலில் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு சார்பாக கனடா தமிழ் இசைக் கலைஞர்களை வருகவருகவென வரவேற்கிறேன். கனடாவில் நம் தமிழர்கள் 300ஆண்டுகளுக்கு முன்பே அங்கு சென்று தங்களது யுக்திகளையும்திறமைகளையும் நிறுவியவர்கள்.

அவர்களுக்குள் ஒரு பயம் இருந்தது. நம்மால் நம் பூர்வ பூமியான தமிழ்நாட்டில் நம் இசையையும் பாடல்களையும் அரங்கேற்ற முடியுமா என்ற பயம் இருந்தது. அந்தப் பயத்தை இந்த யுனிவெர்செல் வோக்கல் குழுவினர் போக்கி விட்டார்கள்.

ஒரு நல்ல துவக்கத்தை இங்கு பிரம்மாண்டமாக ஏற்படுத்தி விட்டார்கள்அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. இங்கு பாடிய அனைவருமே மிகச் சிறப்பாக பாடினார்கள். இந்தத் திறமையாளர்களை இங்கிருக்கும் இசை வல்லுநர்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த அவையை மறக்க முடியாத அவையாக மாற்றி இருக்கிறீர்கள். இதில் பங்குபெற்ற இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,பாடகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்” என்றார்.

விழாவில் கன்னட ஒருங்கிணைப்பாளர் டொனால்ட் ஜே அனைவரையும் வரவேற்று பேசினார். யுனிவர்செல் வோக்கல் நிறுவனர் ரூபன்ராம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Music composer Imman talks about Universal Vocals and Sabthaswaram 2

விருது படங்கள் எல்லாம் ‘டுலெட்’ போல வெற்றி பெறுவதில்லையே ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருது வாங்கும் படங்கள் என்றால் வணிக ரசனைக்கு எதிரான படங்கள் , ஆமை வேகப் படங்கள், போரடிக்கும் கதைகள், இருள் சூழ்ந்த காட்சிகள் என்றே இருக்கும் என்கிற பொதுவான மனநிலை நிலவுகிறது.

ஆனால் இதற்கு நேர் மாறான ஒரு படம்’ டு லெட்’.

செழியன் இயக்கியுள்ள இப்படம், உலகத்தரத்தில் ஓர் உள்ளூர் சினிமா.சிவகங்கை மனிதன் இசைத்துள்ள சிம்பொனி.

32 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இப்படம்.

‘டுலெட் ‘ஒரு நிஜவாழ்க்கையைக் கண்முன் தரிசிக்கும் அனுபவத்தையும் சீரான திரைக்கதை ஓட்டத்தையும் தன்னகத்தே கொண்ட படமாக இருந்தது.

ஊடகங்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற ஒரு படமாக அமைந்துள்ளது .இது எப்போதாவது மட்டுமே நிகழும்.

தரத்துக்கான பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று விட்டால் அது எளிதில் வெற்றி பெற வாய்ப்பில்லாத திரைப்படம் என்கிற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

அதை உடைத்தெறியும் ஒரு படமாக ‘டு லெட் ‘ மாறியிருக்கிறது.

வெளியான திரையரங்குகளில் 4வது வாரமாக ரசிகர்கள் ஆதரவுடன் அதிகரிக்கும் காட்சிகளும் திரையிடுவதற்கு கூடுதலாகி வரும் திரையரங்குகளும் டு லெட் படம் புதிய வரலாறு படைத்து வருவதை உறுதி செய்கிறது.

திரை ரசனையின் இரு வேறு துருவங்கள் ஆக கலைப் பட, வணிகப் பட ரசிகர்கள் இருப்பார்கள்.

யதார்த்த பூர்வமான ரசனை கொண்ட வணிகப் பட ரசிகர்கள் இப்படிப்பட்ட மிடில் சினிமாவைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையைப் பெற்றதொரு படமாக ‘டு லெட்’ மாறியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் Review வில் வரவேற்பு பெற்ற இப்படம் Revenue விலும் வெற்றி பெற்றுள்ளது.

Thought To Let movie award movie it has good opening in Box office

More Articles
Follows