செல்போனை தட்டிவிட்ட விவகாரம்..; சிவகுமாருக்கு ஆதரவாக எஸ்ஆர். பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நடிகர் சிவகுமார்.

அப்போது சிவகுமாரை ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்றார். திடீரென செல்ஃபி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார் சிவகுமார்.

அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. சிவகுமாரின் இந்த செயலை கண்டித்து பல மீம்ஸ்களை உருவாக்கிவிட்டனர்.

இதனையடுத்து அந்த சம்பவத்திற்கு சிவகுமார் விளக்கமளித்தார்.

இந்நிலையில், சிவகுமாரின் உறவுக்காரரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

பெருவாரியான அறிஞர்களும் கலைஞர்களும் தங்கள் கொள்கைகளையும் நற்பழக்கங்களையும் பாதுகாக்கும் அரணாகவே அவர்களுடைய கோபம் இருந்துவருவதை பார்த்து வருகிறேன்.

என் பெரியப்பா திரு. சிவகுமார் அவர்களும் தன் கோபம் எனும் கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் வகையே! அதேநேரம் கோப்பபடாத எவரும் ஒரு வழக்கத்திற்குள் வாழ இவ்வுலகம் எளிதாக விடுவதுமில்லை என்பதையும் நான் பார்க்கிறேன்!

இன்றைய நாள் முழுவதும் தன் சுய இன்பத்திற்காகவும், தங்களின் ஒழுங்கீனங்களை நியாயப்படுத்தவும் அனாயசமாக அர்த்தமற்ற கருத்துக்களை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கும் நவநாகரீக சமூகநலப் போராளிகளைக் கண்டு நானும் வாந்தியெடுப்பதில் தவறில்லை என்றே தோன்றியது!

இன்று அனைவரும் கேலி செய்துகொண்டிருக்கும் அவரின் உரைகள் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் கல்வி உதவிகள் செய்துகொண்டிருக்கும் ஒரு மாமனிதர்.

தன் அனுமதியின்றி படமெடுத்தவரை அறையாமல் அலைபேசியை தட்டிவிட்டதற்கே இங்கிதமில்லாமல் இங்கே இங்கிதம் கற்பிக்க முயலும் எந்தவொரு அறிவாளியும் என் வலைத்தளங்களை விட்டு உடனே வெளியேறுமாறு உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட அதே இங்கிதமில்லாமல் ஆணையிடுகிறேன்!

பல திறமைகள் படைத்த புத்திசாலியைவிட பலவீனமே இல்லாதவன் பெரும் பலசாலியென எனக்குக் கற்றுவித்தவர். உன் வருமானம் எதுவாயினும், வந்ததில் 25% தானமாகக் கொடு, வாழ்க்கை சிறப்பாகும் என எனக்குக் கற்பித்தவர். காசில்லாமல் கையேந்துபவருக்கு, உபதேசம் அளிப்பதை விட உன்னால் இயன்றதை கொடுத்துவிட்டு நடையைக்கட்டு என எனக்கு சொல்லிக்கொடுத்தவர்

இன்றுகூட, அடுத்தவர் அனுமதியில்லாமல் செல்பி எடுப்பது தவறு என அனைவருக்கும் அடித்துக் கூறியிருக்கிறார்! அவ்வளவே!!

பின்குறிப்பு: இதை ஏதோ சினிமா சண்டைக்காட்சி அளவுக்கு எபெக்டுகள் போட்டு அதிவிளம்பரம் தேடிக்கொண்ட அந்தச் செய்தி நிறுவனத்திற்கும் அதே கோபத்துடன் என் வசைகளைப் பரிசளிக்கிறேன்!

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

Cellphone Selfie issue Producer SR Prabhu supports SivaKumars rude behaviour

தம்பி தெனாவெட்டு பத்தல..; அர்ஜெய்க்கு ராஜ்கிரண் அட்வைஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சண்டக்கோழி 2’ தந்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறார் அதில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜெய்.

விஷால் – கீர்த்தி சுரேஷ் -ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘சண்டக்கோழி 2.’
இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய்.

இவர் விஷால் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்’ நான் சிகப்பு மனிதனி’ல் அறிமுகம் செய்யப்பட்டவர் .

சற்றே இடைவெளிக்குப் பின் சண்டக்கோழி 2-ல் விஷாலுடன் மோதும் வில்லனாக உயர்ந்துள்ளார்.

சண்டக்கோழி 2 வாய்ப்பை லிங்குசாமி மூலம் பெற்றுள்ளார்.

இது பற்றி அர்ஜெய் பேசும் போது, “என் நண்பர் மூலம் சண்டக்கோழி 2 படத்துக்கு நடிகர்கள் தேர்வாகும் ஆடிஷன் நடக்கிறது என்று அறிந்தேன்.

நான் நேரில் சென்றேன். இப்படித்தான் தேர்வானேன். இதைப் பற்றி அண்ணன் விஷாலிடம் பிறகு கூறினேன்.தன் மூலம் அறிமுகமா ன நான் இதில் வாய்ப்பு பெற்றதற்காக அவர் மகிழ்ந்தார். வாழ்த்தினார் ” என்கிறார் அர்ஜெய்.

படப்பிடிப்பு அனுபவம் எப்படி ? விஷாலுடன் நடித்தது பற்றி ?

“இந்தப் படத்துக்காக சுமார்70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆரம்பத்தில் நடிப்பது பற்றிப் பெரிதாகப் பேசாமல் தானுண்டு நடிப்புண்டு என்றிருந்த அண்ணன் விஷால் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் போது நன்றாகச் செய்யப் பெரிதும் ஊக்கப் படுத்தினார்.

குறிப்பாக அந்தப் பஞ்சாயத்துக் காட்சியில் என் நடிப்பு சிறப்பாக அமைய பெரிதும் அக்கறை காட்டினார். ” என்றவரிடம் ராஜ்கிரண் மற்றும் வரலட்சுமியுடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ,

” வரலட்சுமி எனக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாகத் தெரியும் . நண்பரும் கூட. அதனால் அவருடன் நடிப்பதில் பிரச்சினை இல்லை . ஆனால் ராஜ்கிரண் என்கிற பெரிய நடிகருடன் நடிப்பது எப்படி? திரையில் அவர் வந்து விட்டால் அவர் மட்டும் தானே தெரிவார் ? இந்தப் பயம் எனக்குள் இருந்தது.

ஆனால் அவர் என்னுடன் சகஜமாகப் பேசி என்னை ஊக்கப்படுத்தினார். நான் மட்டுமல்ல எல்லாரும் அந்த பஞ்சாயத்து காட்சியை பெரிதும் பலமாக எண்ணியிருந்தோம்.

அதை மட்டுமே மூன்று நாட்கள் எடுத்தார்கள்.முதல் நாள் படப்பிடிப்பு போனது.

எனக்கு நாம் சரியாகச் செய்தோமா என்று பயமாக இருந்தது. மறுநாள் ராஜ்கிரண் சார் என்னை தம்பி இங்கே வா என்று கூப்பிட்டார்.

நேற்று என்னை எதிர்த்து திமிராகப் பேசியது நன்றாக இருந்தது. ஆனால் அந்த தெனாவெட்டு போதாது. மேலும் வீரியமாக இருக்க வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அதன்படி நடித்தேன். இப்போது எல்லாரும் பாராட்டுகிறார்கள்.

தன்னுடன் நடிக்கும் சக நடிகன் அறிமுக நிலையில் இருந்தாலும் பாராட்டி , தூண்டி ஊக்கம் தந்த அவரது பெருந்தன்மை வியக்க வைத்தது “என்கிறார் அர்ஜெய் .

படம் வந்ததிலிருந்து ஏகப்பட்ட போன் கால்கள் முகநூல் வாழ்த்துகள் என்று திக்குமுக்காடி வருகிறார் அர்ஜெய்.

இப்போது இவர் ‘தேவி.2. ‘,விஷாலுடன் ‘அயோக்யா ‘வரலட்சுமியுடன் ‘வெல்வெட்நகரம் ‘உள்ளிட்ட 5 புதிய படவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்.

தி.நகரில் தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்தின் தக்‌ஷா குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கியிருந்தனர்.

இந்த குழுவின் ஆலோசகராக ரிமோட் மூலம் குட்டி விமானங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார்.

நடிகர் அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் இந்த குழு மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது.

இதனிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்‌ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது.

இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்‌ஷா குழு பங்கேற்றது.

இந்த அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.

இந்நிலையில் இந்த தக்‌ஷா அணியினர், தமிழக காவல் துறையுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னை தி.நகரை கண்காணிக்க உள்ளனர்.

தீபாவளிக்கு துணி வகைகள் வாங்க மக்கள் தி.நகரில் அதிகம் கூடுவதால் இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.

மோகன்லாலுக்கு குரல் கொடுக்கும் ரஜினி-மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால் நடித்த காயம்குளம் கொச்சுண்ணி படம் அண்மையில் ரிலீஸானது. இதில் நிவின்பாலி நாயகனாக நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து மோகன்லால் நடித்துள்ள ட்ராமா என்ற படம் வரும் நவ-1ஆம் தேதியில் ரிலீசாகவுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து மாறுபட்ட தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ள ஒடியன் படம் டிச-14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் மிகப்பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ளதால் இதை தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் கதையை சொல்லும் வகையில் பின்னணி குரல் ஒன்று படத்தில் வருகிறதாம்.

இதற்கு மலையாளத்தில், மம்மூட்டி வாய்ஸ் ஓவர் கொடுக்க உள்ளாராம்.

எனவே தமிழ் பதிப்புக்கு ரஜினிகாந்தும் தெலுங்கு பதிப்புக்கு ஜூனியர் என்.டி.ஆரும் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை வெள்ளப் பின்னணியில் காதலை சொல்லும் *ஹவுஸ் ஓனர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மணி’ படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது.

மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறும்போது, “2018 தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே ஒரு மிகச்சிறந்த வருடம். 96, ராட்சசன், பரியேறும் பெருமாள், வட சென்னை என நல்ல படங்கள் 2018ஐ அலங்கரித்திருக்கிறது.

இந்த நல்ல நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் என்னுடைய ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை உங்களுக்கு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டவை தான், ‘ஹவுஸ் ஓனர்’ கூட விதிவிலக்கு அல்ல. பல்வேறு பிரபலங்கள் எங்கள் படத்தின் போஸ்டரை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களான சமுத்திரகனி மற்றும் பண்டிராஜ் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்கு நன்றி.

அக்டோபர் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே இருந்திருக்கிறது. இந்த சீசனில் வெளியாகி வரும் தரமான திரைப்படங்களின் லிஸ்டில் எங்கள் படமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூறும்போது, “இத்திரைப்படத்தில் ஆடுகளம் புகழ் கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். பசங்க படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற , கோலி சோடாவில் பாராட்டுக்களை குவித்த கிஷோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீரஞ்சனி ஒவ்வொரு வீட்டிலிருக்கும் அம்மாவை பிரதிபலிக்கும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்தது என் பாக்கியம்.

வாகை சூட வா தொடங்கி சமீபத்திய ராட்சசன் வரை அவரின் இசைக்கு நான் ரசிகை. மகளிர் மட்டும் புகழ் பிரேம் எடிட்டிங்கை கையாள்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, தபஸ் நாயக் ஒலிப்பதிவை கவனிக்கிறார்.

சர்கார் கதை சர்ச்சையால் சினிமாவை விட்டு விலகும் முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் பட கதை என்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சர்கார் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் அவர்களும் உறுதியளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் கூறியதாவது…

இந்த கதை விவகாரம் ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டுள்ளது. எனது கதையை பாக்யராஜ் அவர்கள் முழுதாகப் படிக்கவேயில்லை. அவர்கள் படித்தது சாரம்சம் (synopsis) மட்டுமே.

முழு ஸ்க்ரிப்டை பாக்யராஜ் அவர்கள் படித்தாரா இல்லையா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவேண்டும்.

எனது முழு ஸ்க்ரிப்டை நான் இன்னும் சங்கத்தில் ஒப்படைக்கவும் இல்லை. அதை படித்த பின் தான் அதுவும் இதுவும் ஒரே கதை என்று சொல்ல முடியும். அல்லது எனது படத்தையாவது பார்த்திருக்க வேண்டும்.

நான் அவர்களுக்கு படத்தைக் காட்டத் தயார் என்று சொல்லியும் அவர்கள் பார்க்கவில்லை. படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா? அறிக்கை விடலாமா? எனக்கு பெரிய தண்டனையைக் கொடுத்துவிட்டார்கள்.

இன்னைக்கு நடக்கவிருக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளை வைத்து நான் ஒரு படமாக எடுத்திருக்கிறேன். 11 வருடங்களுக்கு முன்னால் இதே நிகழ்வுகளை வைத்து எப்படி எழுதியிருக்க முடியும்?

இரண்டு கதைகளுக்கும் ஒரே ஒற்றுமை நாயகனின் ஓட்டை வேறொருவர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே. இந்த ஒரு விஷயம் மட்டும் எப்படி முழு கதையாகும்.

நாயகனின் ஓட்டைக் கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்றவுடன் அடுத்த என்னவாக இருக்கும்? அவர் பெரிய பாடகராகிவிட்டார், குத்துச்சண்டை வீரர் ஆகிவிட்டார் என்றா போகும்? எப்படியும் அடுத்து நாயகன் அரசியலுக்கு வருகிறார் என்பதுதானே கதையாக இருக்கும்.

மேலும் உறுப்பினர்களில் 6 பேர் ரெண்டும் வெவ்வேறு கதை என்று சொல்லியிருக்கிறார்கள். 5 பேர் ஒரே கதை என்றிருக்கிறார்கள். இரண்டு பேர் கருத்து சொல்லவில்லை. பின் எப்படி இது பெரும்பான்மையினரின் கருத்தாக முடியும்?.

எனக்கு மிகப்பெரிய மனவேதனையை தந்துவிட்டனர். பாக்யராஜ் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு கதைக்கும் ஒரே பொறி தான் என்று சொல்லியிருக்கிறார்.

‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் கதையும், அதற்கு பின் வெளியான ‘சின்ன வீடு’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

அது மட்டும் ஒரே மாதிரியான சிந்தனை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆனால் எல்லோரும் விவாதிக்கும் கள்ள ஓட்டு என்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதினால் அது திருட்டு என்கிறார்கள். இது என்ன நியாயம்?

இருதரப்பும் சமாதானம் செய்து கொள்ளுங்கள். இவ்வளவு பணம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

ஏனென்றால் என் தரப்பில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. இது முழுக்க முழுக்க என் உழைப்பு, என் குழுவின் உழைப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் இதில் வேலை செய்திருக்கிறார்.

எனக்கு வெறுத்துப் போய்விட்டது. சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் என் நண்பர்கள் என்னை ஊக்குவிக்கின்றனர்.போராட தைரியம் கொடுக்கின்றனர்.

விஜய் அவர்களிடம் இந்த பிரச்சினை குறித்து நான் பேசவில்லை. என் பிரச்சினைகள் குறித்து பொதுவாக நான் யாரிடம் பேசுவதும் இல்லை.

இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

AR Murugadoss questions director Bhagyaraj on Sarkar story controversy

More Articles
Follows