ரகிட ரகிட பாடலை அடுத்து அனிருத் குரலுக்கு தனுஷின் புஜ்ஜி ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் தனுஷ் உடன் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘ரகிட ரகிட’ பாடல் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில், மற்றொரு பாடலான புஜ்ஜி என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.

அனிருத் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.

இப்பாடலில் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளுக்கு தனுஷ் ஆடுவது போல உள்ளது-

Bujji song video from Jagame Thanthiram is out now

எம்ஜிஆர்-ரஜினி பாணியில் விஜய் ஆண்டனி படத்துக்கு தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு “கோடியில் ஒருவன்” என பெயர் வைத்துள்ளனர்.

அரசியல் திரில்லராக இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

எம்ஜிஆர் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற படம் 1965ல் வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில் ‘லட்சத்தில் ஒருவன்’ என்ற படம் 1987ல் வெளியானது.

தற்போது ‘கோடியில் ஒருவன்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Antony’s new film is titled Kodiyil Oruvan

சூர்யாவுக்கு தேசிய விருது கொடுக்கலேன்னா போராட்டம்..; சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேற்று நேரடியாக ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்களும் ‘சூரரைப் போற்று’ படத்தைப் பாராட்டியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: “சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயர பறந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவக்கார இளைஞன், ஆர்வமிகு இளம் தொழில் அதிபர், அன்பான கணவன் என அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடிப்பு அபாரமாக உள்ளது. தான் தோன்றும் ஒவ்வொரும் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதம். ஊர்வசியின் நடிப்பு அற்புதம்.

இது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று. அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருது உங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில், நான் அதற்காகப் போராடுவேன்.

சுதா கொங்கரா, தொலைநோக்கு பார்வை கொண்ட பெண்.. சல்யூட்”. இவ்வாறு கே.ஜே.ஆர் ராஜேஷ் நீண்ட பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Producer K Rajesh about Suriya’s Soorarai Pottru film

தளபதியின் தீபாவளி தரிசனம்.; தியேட்டரில் மாஸ்டரின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

இப்பட டீசர் நாளை தீபாவளி தினத்தில் மாலை 6 மணிக்கு யூடியூப்பில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து திரையரங்கிலும் ’மாஸ்டர்’ டீசரை வெளியிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை படக்குழுவினர் ஏற்றுள்ளனர்.

அதன்படி நாளை மாலை 6 மணிக்கு யூடியூபிலும் 6.30 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள திரை அரங்கிலும் ’மாஸ்டர்’ டீசர் திரையில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

Master teaser to be screened in theatres from tomorrow

பிரம்ம முகூர்த்தத்தில் ‘ஈஸ்வரன்’ டீசர்.!.. சிம்பு மாறிட்டாரு அதுக்காக இப்படியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன்.

இந்த பட படப்பிடிப்பை வெறும் 40 நாட்களில் முடித்துவிட்டனர்.

இந்த படத்திற்காக தன் உடல் எடையை 30கிலோ குறைத்து ஸ்லிம் ஆக மாறியிருந்தார் சிம்பு.

பொதுவாகவே சிம்பு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.. அவர் இரவு வெகு நேரம் முழித்திருப்பார். அதிகாலை உறங்க செல்வார்.

மதியம் சூட்டிங் வருவார். அதுவும் சரியான நேரம் வரமாட்டார். சனி ஞாயிறு லீவு கேட்பார். கால்ஷீட் சொதப்பல் என பல குற்றச்சாட்டுக்களை திரையுலகினர் வைத்து வருவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறோம்.

தற்போது சூட்டிங்குக்கு சரியான நேரத்தில் வருகிறார். எந்த வித பிரச்சினை செய்யாமல் இயக்குனருக்கு ஒத்துழைப்பு தருகிறார்.

சிம்பு இப்படி ஒரேடியாக மாறிட்டாரே என கோலிவுட்டே ஆச்சரியத்தில் திளைத்து வருகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரன் பட டீசரை நாளை தீபாவளியை முன்னிட்டு வெளியிட உள்ளனர்.

அதிகாலை 4.32 மணி பிரம்ம முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தை சிம்பு முடிவு செய்து டீசரை வெளியிட உள்ளனர்.

சிம்பு மாறிட்டாரு என்பதற்காக இப்படி அதிகாலை நேரத்திலா? டீசரை வெளியிடுவார்கள் என அவரது ரசிகர்களே கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

STR announces the teaser time and date of Eeswaran

போனி கபூரை காணவில்லை…; அப்செட்டான அஜித் ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அஜித்தின் ’வலிமை’ பட சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் படம் குறித்த எந்த அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம், சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களின் டீசர் நாளை தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.

ஆனால் வலிமை படக்குழுவோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் படக்குழுவினருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பல முறை அப்டேட் குறித்து கோரிக்கை வைத்தனர்.

இதனால் அஜித் ரசிகர்கள், தயாரிப்பாளர் போனி கபூர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனையடுத்து கடந்த 8 மாதங்களாக ’வலிமை’ பட அப்டேட் காணவில்லை, உங்களையும் காணவில்லை என மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரும் இது தொடர்பான போட்டோக்களும் இணையங்களில் வைரலாகி வருகிறது.

Thala Ajith fans poster for Valimai producer Boney Kapoor

More Articles
Follows