தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது..
இந்த நிலையில் ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது படக்குழு.
ட்விட்டர் தளத்தில் #JagameThandhiram, #JagameThandhiramOnNetflix, #LetsRakita, #Rakita மற்றும் #Suruli ஆகிய ஹேஷ்டேக்குகளை வைத்து ட்வீட் செய்தால் எமோஜி வருவது போன்று படக்குழு வடிவமைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், ட்விட்டர் எமோஜி கொண்ட முதல் படமாக ‘ஜகமே தந்திரம்’ அமைந்துள்ளது.
இதற்கு முன்னதாக ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘காலா’, ‘2.0’, ‘என்.ஜி.கே’, ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களுக்கு ட்விட்டர் எமோஜி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Dhanush in Jagame Thanthiram gets twitter emoji
