புருனே இளவரசியின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் அண்மையில் புருனே நாட்டின் இளவரசியும் இவருக்கு ரசிகையாக மாறிவிட்டாராம்.

மன்னராட்சி நடைபெறும் புருனோ நாட்டில், ஒரு விருந்து விழாவில் ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஒலிக்க, அப்பாடலை கேட்டு மெய் மறந்தாராம் இளவரசி.

மேலும் தனது மெய்க்காப்பாளர்களடம் அஜித்தை பற்றி விசாரித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது புத்தாண்டு விருந்துக்கு அஜித்தை அழைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

ரத்தினக் கம்பள வரவேற்பு, வைரங்கள் பதித்த சிம்மாசனம் என பிரமாண்ட வரவேற்புகள் தடபுடலா செய்யப்பட உள்ளதாம்.

ஆனால், அஜித் கலந்து கொள்வாரா? இளவரசியுடன் விருந்து உண்பாரா? என்பதுதான் தெரியவில்லை.

வடிவேலுவை வரவேற்கும் விஷால்-ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீ……ண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோ வேடத்தை விட்டு?, விஷாலின் கத்தி சண்டையில் காமெடி செய்து வருகிறார் வடிவேல்.

சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரியும் இணைந்துள்ளார்.

தற்போது மீண்டும் மற்றொரு படத்தில் காமெடி செய்யவுள்ளார் வடிவேலு.

‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இதில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் ஸ்டீஃபன் இப்படத்தை தயாரிக்கிறார்.

நேற்று ரஜினியின் ‘கபாலி’; இன்று விஜய்யின் ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா தற்போது இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் கலக்கி வருகிறது.

கபாலிக்கு உலக நாடுகளில் கிடைத்த வரவேற்பு இந்திய சினிமாவையே ஆச்சரியமடைய வைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் கபாலிக்கு பிறகு பைரவா படத்தின் உரிமை பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

டெண்ட் கொட்டா நிறுவனம், 8K மைல்ஸ் மீடியா நிறுவனம் மற்றும் B&B எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பைரவாவின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாம்.

தற்போது இப்படத்திற்காக விஜய், கீர்த்திசுரேஷ் இருவரும் சுவிட்சர்லாந்து நாட்டில் டூயட் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-தனுஷ் ரசிகர்களுக்கு இந்த ‘தீபாவளி’க்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

அதுபோல் விஜய் ரசிகர்களுக்கு பைரவா பட டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவையில்லாமல் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தும் தயாராகியுள்ளது.

கொடி படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளுக்காக தனுஷ், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் தியேட்டருக்கு வருகிற அக். 26ஆம் தேதி செல்கின்றனர்.

அன்றைய தினம் ரசிகர்களுக்காக வேலையில்லா பட்டதாரி படம் திரையிடப்படுகிறதாம்.

மேலும் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இப்படக்குழுவினர் செல்கின்றனர்.

அதுபோல் சென்னையிலுள்ள ரோகினி தியேட்டரில் தெறி படத்தின் 200வது நாள் வெற்றியை கொண்டாட தீபாவளி அன்று தெறி படம் காலை 8.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

 

நதியாவின் ‘திரைக்கு வராத கதை’… அந்த மாதிரியான படமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள இயக்குனர் துளசிதாஸ் இயக்கத்தில் நதியா நடித்துள்ள படம் திரைக்கு வராத கதை.

இப்படத்தில் ஆண்கள் ஒருவர் கூட நடிக்கவில்லை. அப்படின்னா படத்துல காதல் இருக்காதே என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.

இந்த படத்துல காதலும் இருக்கிறதாம். அப்படின்னா என்ன மாதிரியான காதல் என்பது உங்களுக்கு புரிந்து இருக்குமே.

அதுதான் பெண்கள் செய்யும் லெஸ்பியன் காதல். தற்போது இதுவே இப்படத்திற்கு பெரும் பிரச்சினையாக அமைந்து விட்டது.

இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடவிருந்தனர்.

ஆனால் இந்த லெஸ்பியன் காதல் படத்திற்கு சென்சாரில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தில் பெண் தோழியுடன் நெருக்கமான இருக்கும் காட்சிகள் நிறைய இருந்துள்ளதாம்.

பின்னர் சிலவற்றுக்கு கத்தரிபோட்டுவிட்டு யு/ஏ சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளது சென்சார்.

MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக K. மணிகண்டன் தயாரித்துள்ள இப்படத்தில் நதியாவுடன் இனியா, ஈடன், ஆர்த்தி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர்.

திரைக்கு வராத கதை… இனியாவது திரைக்கு வருமா..?

‘ரெமோ’வுக்கு வரிவிலக்கு ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பெயரிடப்பட்டு நேரிடையாக உருவாகும் படங்களுக்கு கேளிக்கை விரிவிலக்கு அளித்து வருகிறது தமிழக அரசு.

இந்த சலுகையை பெற இதற்கென சில விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், அண்மையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஆர்.டி.ராஜா தயாரித்து வெளியான படம் ரெமோ.

இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஆனால் ரெமோ என்ற வார்த்தை தமிழ் வார்த்தையா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசுக்கு இதற்கு வரிவிலக்கு அளித்திருந்தது.

எனவே, இப்படத்திற்கு வரி விலக்கு அளித்தது குறித்து, நவம்பர் 21க்குள் விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

More Articles
Follows