ஒரு ‘பிச்சைக்காரன்’ கோடீஸ்வரன் ஆன கதை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த அனைத்து படங்களுமே முதலுக்கு மோசமல் செய்யாமல் வசூலை ஈட்டி வருகின்றன.

இதில் வசூலின் உச்சமாக ‘பிச்சைக்காரன்’ கலெக்சனை வாரி வாரி குவித்து வருகிறான்.

தமிழில் மட்டும்தான் இப்படி என்று பார்த்தால், தெலுங்கில் அதைவிட அதிக வசூலை ஈட்டி ஆந்திர ஹீரோக்களையே அச்சுறுத்தி வருகிறது.

வெறும் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இப்படத்தின் தெலுங்கு உரிமை பெறப்பட்டதாம்.

இதுவரை கிட்டதட்ட ரூ. 20 கோடியை நெருங்கியுள்ளது.

விரைவில் 50வது நாளை இப்படம் தொட உள்ளதால் பிரம்மாண்டமான விழாவுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.

இதனால் விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்திற்கும் இப்போதே தெலுங்கு உரிமை பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

சந்தானம், சிவகார்த்திகேயன் வழியில் ஜீவா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம், ஜெகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து கலக்கி வருகின்றனர்.

தற்போது இவர்களின் வரிசையில் டிவி நடிகர் லொள்ளு சபா ஜீவாவும் இணைந்துள்ளார்.

இவரை ரஜினி ஜீவா என்று சொன்னால்தான் நிறைய பேருக்கு தெரியும்.

சினிமாவில் ஓரிரு படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம்.

இவருக்கு காமெடி கைவந்த கலையாக இருப்பதால் வழக்கம்போல இதில் காமெடியும், இளசுகளுக்கேற்ற 10 முத்தக் காட்சிகள் இடம் பெறுகிறதாம்.

இதில் நாயகியாக நடிக்கிறார் கன்னட படப் புகழ் சங்கீதா பட்டு.

இவர்களுடன் பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுபரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

நாய்க்குட்டி படத்தை தொடர்ந்து ரங்கா இப்படத்தை இயக்குகிறார்.

தீபாவளி ரேஸில் மோதும் தனுஷ்-கார்த்தி-விக்ரம் பிரபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்வீட்ஸ், பட்டாசு, நியூ ட்ரஸ், சினிமா, ப்ரெண்ட்ஸ்…. தீபாவளின்னாலே நமக்கு சட்னுக்கு இந்த ஐந்து விஷயங்கள்தான் ஞாபகத்திற்கு வரும்.

எனவே சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ரசிகர்களுக்காக தீபாவளி விருந்து தர தயாராகி வருகின்றனர்.

இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் கொடி, விக்ரம் பிரபுவின் ‘வீர சிவாஜி’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

‘காஷ்மோரா’ படம் ரூ. 60 கோடியில் தயாராகியுள்ளதால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

இதில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படமும் இணையலாம் எனத் தெரிகிறது.

கபாலிடா… நெருப்புடா… ரெக்கார்டுடா… முடியுமா..? அடங்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி படத்தின் டீசர் சாதனைகளை இந்திய திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.

தமிழ் டீசர் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி டீசரும் சாதனை படைத்து வருவதால் கபாலி மீதான எதிர்பார்ப்பு இந்தியளவில் உயர்ந்து வருகிறது.

இப்படத்தின் தமிழ் டீசரை இதுவரை 2 கோடியே 35.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், தெலுங்கு டீசரை 42.1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், ஹிந்தி டீசரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்த்திருக்கிறார்களாம்.

நெருப்புடா பாடல் டீசரை 66 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது.

ஆக மொத்தம் 35 மில்லியன் (3 கோடியே 53.1 லட்சத்திற்கு) மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளனர்.

படம் வருவதற்குள் இன்னும் எத்தனை சாதனைகளை கபாலி நிகழ்த்த போகிறார்..? என திரையுலகமே காத்திருக்கிறது.

இது முடியாது… அடங்காது போலவே….

ரஜினி-அஜித்-சூர்யா வழியில் சிம்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு, இது நம்ம ஆளு படங்களின் வெற்றிகளை தொடர்ந்து தனது புது படங்களில் அதிக கவனத்துடன் நடித்து வருகிறார் சிம்பு.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் ஒன்பது பாடல்கள் இடம் பெறவுள்ளதால் அதற்காக விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார் யுவன்.

இதில் சிம்புக்கு 3 வேடங்கள் உள்ளது. அதில் ஒன்று கொடூரமான வில்லன் வேடம் என கூறப்படுகிறது.

அந்த கேரக்டருக்கும் ஒரு பாடல் இருப்பதால், அப்பாடலை யுவன் கொடுத்துவிட்டாராம்.

இப்பாடல் மிகவும் பிடித்துள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிம்பு.

சமீபகாலமாக ரஜினி, அஜித், சூர்யா உள்ளிட்டோர் வில்லன் வேடம் ஏற்று கலக்கி வருகின்றனர். விரைவில் சிம்புவும் இதில் இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

செல்வராகவனின் உதவியாளருடன் இணைந்த ஜீவா-நிக்கி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் திருநாள், சங்கிலி புங்கிலி கதவ தொற மற்றும் கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டு தயாராகி வருகிறது.

எனவே தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டாராம் ஜீவா.

செல்வராகவனின் உதவியாளர் காளீஸ் இயக்கவுள்ள இப்படத்திற்கு கீ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது நவீன எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்பங்களை பற்றிய படம் என்றாலும் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்கின்றனர்.

நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, காமெடியனாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் நடிக்கிறாராம்.

More Articles
Follows