தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் தர்பார்.

இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன் பின்னர் வசூல் குறித்த எந்த அறிவிப்பை வெளியிட வில்லை.

தர்பார் நஷ்டம்: விநியோகஸ்தர்களுக்கு உதவ தயாரான தமிழக அரசு

இந்த நிலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களில் தர்பாஷ் நஷ்டம் என சில விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக ரஜினியை சந்திக்க முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் மரியாதை நிமித்தம் காரணமாக பாரதிராஜாவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு பற்றி… தர்பார் திரைப்படத்தை வெளியிட்டோருக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கு அவர்களின் பேராசையே காரணம் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

BREAKING யோகிபாபு – மஞ்சு பார்கவி திருமணம்; எளிமையாக கோயிலில் நடந்தது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, விஜய், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு.

இவையில்லாமல் தர்ம பிரபு, ஜாம்பி, கூர்கா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இவரின் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் கிடைக்கவில்லை.

இரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” !

இந்த நிலையில் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று பிப்ரவரி 5ஆம் தேதி ஆரணயில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

யோகி பாபுவின் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

தர்மபிரபு பட இயக்குனர் இயக்குனர் முத்துகுமரன் இதில் கலந்துக் கொண்டார்.

திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Yogi babu gets married

‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் முஸ்லிம் பெயர் ஏன்? சிம்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இவர்களுடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் சிம்பு இஸ்லாமியர் கேரக்டரில் நடிக்கிறார்.

நடிகர் மகத்-பிராச்சி மிஸ்ரா திருமணம்; சிம்பு நேரில் வாழ்த்து

அவரின் கேரக்டர் பெயர் அப்துல் காலிக் என்ற அறிவிப்பும் வெளியானது. அத்துடன் ‘தைரியத்தை விட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை’ என்ற வசனமும் ஒரு போஸ்டரில் இடம்பெற்றது.

இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்திருந்தது.

இது குறித்து சிம்பு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். என்னுடைய நண்பர்களில் நிறைய பேர் முஸ்லிம்கள் தான்.

பெரியார் பாடல் பாடுவது, சபரி மலைக்குச் செல்வது, முஸ்லிம் பெயரில் நடிப்பது சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.

நான் தீவிர சிவ பக்தன். சபரி மலைக்கும் செல்வேன்.

முஸ்லிம் கேரக்டரில் நடிக்க தற்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பெயராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அவர் மதம்மாற முடிவெடுத்த போது என்னிடம் கேட்டார். அனைத்துக் கடவுளும் ஒன்றுதான் என்றேன்.

இவ்வாறு அப்துல் காலிக் என்ற சிம்பு கூறியுள்ளார்.

Simbu reveals his Abdul Khaaliq character name in Maanadu

5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அகரம் அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் சூர்யா.

அவர்களுக்கு உதவிட நிறைய படங்களில் நடித்து சம்பாதிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை ஏற்று தமிழகம் முழுவதும் இந்தாண்டு முதல் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் இணையும் ராஷ்மிகா.?

இதனால் நிறைய குழந்தைகள் கல்வியை இழக்க நேரிடும் என தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

தற்போது 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய நடைமுறையே தொடரும்’ என்று பள்ளிக் கல்வித்துறை எனவும் அறிவித்தது.

இந்த விவகாரம் குறித்த நடிகர் சூர்யா கூறியதாவது…

‘படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.

மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்’ என கூறியுள்ளார்.

Suriya welcomes TN Govt order about 5 and 8 std Public exam

அங்கிள் ஆண்ட்டி வராதீங்க..; ‘நான் சிரித்தால்’ விழாவில் ஆதியின் ஆணவ பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் சிரித்தால்’.

இந்த படத்தையும் அவ்னி மூவிஸ் சார்பாக சுந்தர் சி தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்துள்ளார்.

நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இவருடன் வழக்கம்போல ஹிப் ஹாப் ஆதியின் நண்பர்கள் படை இணைந்துள்ளது.

மேலும் கே.எஸ். ரவிக்குமார், ரவிமரியா, படவா கோபி, சுஜாதா, ஷா ரா, எருமை சாணி விஜய், முனிஷ்காந்த், உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் அடுத்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ல் ரிலீசாகவுள்ளது.

காந்தி பெயரில் தல-தளபதியை கலாய்த்த ஹிப் ஹாப் ஆதி

இந்த நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் மிக பிரம்மாண்டமாக நடத்தினர்.
வழக்கம்போல விழாவாக இல்லாமல் யூத்களை கவர்கிற அளவுக்கு வித்தியாசமான முறையில் விழாவை நடத்தினர்.

படத்தில் நடித்துள்ள கேரக்டர்கள் பெயர்களில் கலைஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஐஸ்வர்யாவின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் ஒவ்வொரு பாடலையும் பாடிக் கொண்டிருந்தார் ஹிப் ஹாப் ஆதி. பார்வையாளர்களை எழுந்து ஆட சொன்னார். ஆனால் இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருந்தும் யாரும் எழுந்து ஆடவில்லை.

இறுதியாக நான் சிரிச்சா வேற லெவல் பாடல் வெளியிடப்பட்டது. அப்போதும் எழுந்து ஆட சொன்னார் ஆனால் யாரும் எழுந்து ஆடவில்லை. ஓரிரு இளைஞர்கள் அவர் கெஞ்சி கேட்டதற்காக ஆடினர்.

இதனிடையில் சிரித்துக் கொண்டே இது யூத் பங்ஷன். இங்கே நிறைய அங்கிள் ஆண்ட்டிகள் வந்துள்ளனர். அதனால்தான் யாரும் ஆடவில்லை. இனிமே வராதீங்க என்றார்.

ஆண்ட்டி.. ப்ளீஸ்.. உங்க அங்கிளை ஆட விடுங்க. அனுமதி கொடுங்க என்றார்.

திடீரென அதற்குள் சுதாரித்துக் கொண்டு இது குடும்ப படம். எல்லாரும் காண வேண்டிய படம் என்றார்.

ஆனால் இவரின் படத்தை இளைஞர்கள் மட்டும் பார்த்தால் படம் ஓடி விடுமா? படிக்கும் மாணவர்களுக்கு / இளைஞர்களுக்கு பணம் கொடுப்பதே அவர்களை பெற்றவர்கள் தான்.

அவர்கள் இல்லாமல் ஹிப் ஹாப் ஆதி எதிர்பார்க்கும் யூத் கூட்டம் வந்துவிடுமா? என பார்வையாளர்கள் பேசிக் கொண்டனர். இது அங்கு சின்ன சலசலப்பை ஏற்படுத்தியது.

Hip Hop Aadhi Controversial speech at Naan Sirithaal event

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; ரஜினிக்கு சம்மன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றபோது கலவரம் வெடித்தது.

அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.

அவர்களுக்கு ஆறுதல் கூற தூத்துக்குடிக்குச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகவும், அது தமக்கு தெரியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.

துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

More Articles
Follows